MI vs KKR | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, மும்பைக்கும் கொல்கத்தாவுக்கு இடையில match நடந்துச்சு. ஒரு பக்கம், ரொம்பவே lateஅ tournamentஅ தொடங்குற, கொல்கத்தா அணி. இன்னொரு பக்கம், முதல் matchல தோல்விய தழுவின மும்பை அணி, எப்படியாவது ரெண்டாவது matchஅ ஜெயிச்சு, 6-0 னு UAEல இருக்குற loss recordஅ போக்குறதுக்கு, ரொம்பவே ஆசைப்படுவாங்க. இதுல, மும்பையோட எண்ணம் தான் ஜெய்க்குது. அதுவும், இந்த IPLளோட first one sided matchஅ முடிஞ்சுது

இந்த match Abu Dhabiல நடக்குது. Toss ஜெய்க்குற கொல்கத்தா அணி முதல்ல bowling choose பண்ணுது. ஆனா, bowling ரொம்ப poorஅ இருந்த காரணத்துனாலையும், Hitman Rohit Sharma அவர்கள் ஆடிய சிறப்பான game'னாலயும் 195/5னு score அடிக்கிறாங்க. KKRஅ பொறுத்த வரைக்கும், சிவம் மாவீ'ய த்விர்த்து மீதி எல்லாருமே short balls தான் போட்டுக்கிட்டு இருந்தாங்க. அத, ரொம்பவே easyயா விளையாடினாங்க. 

KKR திரும்ப பேட்டிங்'கு வராங்க. அவங்களுக்கு, startingலயே ரொம்ப problematicஅ அமையுது. நெனச்ச அளவுக்கு நல்ல துவக்கம் கிடைக்கல. Dew வரும்'னு எதிர்பார்த்து 2nd batting choose பண்ணாங்க. ஆனா, dew வரவே இல்ல. Pitch தான் slow'வாக ஆரம்பிச்சுது. ஆனா, pitchஅ தாண்டி, KKRஏ ரொம்ப struggle பண்ணாங்க. அது காரணமா, 146/9 னு matchஅ முடிச்சாங்க. சரி, இதுக்கு மேல விரிவா இந்த matchஅ பத்தி தெரிஞ்சிக்கணும்னா, இதோட Post Match Analysisஅ YouTubeல videoவா போட்ருக்கேன். அதோட linkஅ இதுல paste பண்றேன்.  https://www.youtube.com/watch?v=FQXv5AWpNBE&t=10s    

சரி, இந்த matchஓட திருப்புமுனை segmentகு வந்துட்டோம்னு வெச்சுக்கோங்களேன், ஏகப்பட்ட moments இருக்கு. ஆனா, உண்மையான turning point, Bumrahவோட 4 ஓவர் Bowlingல முதல் 3 ஓவர் spell தான். இங்க, கொல்கத்தா சொதப்புனதுக்கு  முக்கிய காரணம், usualஅ Narineஓட startலயே, Powerplayகுள்ள நெறய runs வந்துரும். ஆனா, நேத்து அதை கட்டுப்படுத்தினாங்க. அதுக்கு காரணம், Bumrahவோட bouncers தான். Powerplay oversல Pace Variationனோட நெறைய bouncers வீசுனாரு. அதுல, frustrate ஆகி, இன்னொரு endல bowl பண்ணிட்டு இருந்த, Pattinsonகிட்ட விக்கெட்ட கொடுத்துட்டு கிளம்பிட்டாரு. அதுக்கு அடுத்தும் என்ன தான் பொறுமையா விளையாடினாலும், பின்னாடி Morgan and Russell இருக்குற வரைக்கும், opponentsகு danger தான். 18 ballsல 53 chase பண்ணிருக்காங்க, Russellளோட புண்ணியத்துல. அப்படிப்பட்ட Russellல விட்டு வெக்குறது தப்பு. ஒரு perfect ஆன off cutter delivery yorker போட்டு, அதுல Russellஅ dismiss பண்ணாரு. அதுக்கு அடுத்து, Morganனோட wicketஅ ஒரு slow leg cutter மூலமா, good lengthல வீசி, dismiss செய்யுறாரு. இந்த ரெண்டு wickets மூலமா, மும்பைக்கு வெற்றி நிச்சயமாகுது. அது காரணமா தான், இவரோட spellஅ நான் திருப்புமுனை segmentல add பண்ணிருக்கேன். 

ஆனாலும், தன்னோட 4வது overல அடிவாங்கினது'லாம் ரொம்பவும் மோசம். இன்னிக்கி ஜெயிச்சதுனால பிரச்சனை இல்ல. ஆனா, இது மத்த matchesல affect ஆகாம இருந்த சந்தோசம் தான்.

       

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?