MI vs CSK | IPL 2020 | திருப்புமுனை segment |

திருப்புமுனை segmentஅ பொறுத்த வரைக்கும், இப்போ நடந்துட்டு இருக்குற IPLல ஒவ்வொரு matchல ஒரு turning point situation இருக்கும். அந்த turning point காரணமா, matchஓட நிலைமையே மாறும். அப்டி பட்ட turning point'அ விரிவா பேசுறது தான், இந்த திருப்புமுனை segment. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, match analysisலாம், என்னோட youtube channelல videoவா போட்ருக்கேன். அதுனால தான், blogsல இந்த segmentஅ நான் add பண்ணிருக்கேன்

MI vs CSK match நடக்குது. முதல்ல மும்பை ரொம்பவும் superஅ batting பன்றாங்க. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஒண்ணுமே புரில. இவங்கள எப்படி டா அவுட் ஆக்குறது'னு மண்டைய பிச்சிகிட்டு இருந்தாங்க. அதுல குறிப்பா 121/3 at the end of 14 oversனு ரொம்பவும் strongஆன நெலமை'ல இருந்தாங்க. MI செம domination காமிச்சாங்க. ஆட்டத்துல திருப்புமுனையே வராதா'னு வாடிக்கிட்டு இருந்த நேரத்துல, 14th over, ஜடேஜா bowl பன்றாரு. Battingல இருந்தது சௌரப் திவாரியும், ஹர்திக் பாண்டியவும். சௌரப், ரொம்பவே set ஆகி இருந்தாரு. ஹார்டிக்கும் போதாத குறைக்கு, ரெண்டு sixes அடிச்சு, செம touchல இருந்தாரு. அப்போ தான், ஜடேஜா fuller lengthல ball போடுறாரு. சௌரப் அதை deep long on directionல மடக்கி six அடிக்க முயற்சி பன்றாரு. அந்த எடத்துல நின்னுட்டு இருந்த FAF, பறந்து catch புடிக்குறாரு. Boundary Lineல நின்னுட்டு, கோட தொடாம புடிக்குறாரு. அந்த matchலேயே ரொம்ப சிறப்பான catch இது தான். ஆனா, இது இதோட முடியல. அதே overல கடைசி ball, Hardik Pandya திரும்பவும் ஷாட் அடிக்க போனாரு. இந்த வாட்டி, Deep Coverல இருந்து deep long off கு ஓடி வந்து catch புடிக்குறாரு. இந்த ரெண்டு catches தான் turning pointஅ அமைஞ்சுது.

From 121/3 at the end of 14 overs to 162/9 at the end of 20 overs, இந்த ரெண்டு catchநால தான் இந்த சுருட்டல் சாத்தியமாச்சு. அதனால தான் சென்னை கு இலக்கு சின்னதாச்சு. Target சின்னது ஆனதுனால தான், அதை chase பண்ணி ஜெயிக்க முடிஞ்சுது. இதுவே, அந்த ரெண்டு catch புடிக்கலனா, இந்நேரம் 180+ targetஅ அமைஞ்சு, அது தோல்வியா கூட அமைஞ்சிருக்கும் !!

        

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?