CSK vs DC | IPL 2020 | திருப்புமுனை Segment

இந்த matchஅ பொறுத்த வரைக்கும் பாத்தோம்னா, சென்னை teamஓட ரெண்டாவது loss, அதே நேரத்துல டெல்லிய பொறுத்த வரைக்கும், அவங்களுக்கு ரெண்டாவது win. Toss win பண்ற சென்னை team, மொதல்ல fielding choose பன்றாங்க. Delhi Capitals, ரொம்பவும் நல்ல தொடக்கம் கிடைக்குறதுனால, 175 runs அடிக்க முடிஞ்சுது. சென்னையோட spinners, போன match மாதிரியே இந்த matchலயும் சொதப்புறாங்க. அதோட ப்ரித்வி ஷா, ரிஷாப் பண்ட் ரெண்டு பெரும் ரொம்ப ரொம்ப பக்காவா அடிச்சி ஆடுனாங்க. ஆனா, சென்னையை பொறுத்த வரைக்கும், impressiveஅ இல்ல. அவங்களோட பலமான battingஏ இன்னிக்கி fail ஆச்சு. அதனால, 131/7 மட்டும் தான் அடிச்சாங்க. இந்த match'ஓட analysis video link - https://www.youtube.com/watch?v=d-a_YHb1Kqg&t=152s 

இருந்தாலும், இவ்ளோ பெரிய collapseகு ஏதாவது turning point இருக்கணும்ல. அந்த திருப்புமுனை என்னதுன்னு இந்த blogல பாக்கலாம். 

இந்த matchல என்னதான், ப்ரித்வி ஷா நல்ல start கொடுத்தாலும், இல்ல ரிஷாப் பண்ட் நல்ல cameo ஆடினாலும், இது எதுவும் நான் சொல்ல போற, திருப்புமுனை'க்கு கிட்ட கூட வராது. இங்க இந்த turning pointனு நான் mention பண்ணுறது, டெல்லி அணியோட spinners தான். 

Watson'ன அக்ஷர் படேல் 6 தடவ out ஆகிருக்காரு. அதை சரியா பயன்படுத்தினார், ஷ்ரேயஸ் ஐயர். Powerplay Oversல ரெண்டு ஓவர் குடுத்தாரு. அந்த ரெண்டு ஓவர்'அ use பண்ணி, மறுபடியும் dismiss செஞ்சாரு. 

அதுக்கு அடுத்து, நெனச்சத விட pitch slowவாகுது'ங்கிற விஷயத்தை ரெண்டு பெரும் தெளிவா புரிஞ்சிக்கிட்டாங்க. அது காரணமா, அக்ஷர் படேல் மற்றும் அமித் மிஸ்ரா, ரொம்பவே பொறுமையா வீசுனாங்க. அதை, attack பண்ணவும் முடியாம struggle பண்ணாங்க, சென்னை அணி. இது, chennai super kings teamஅ ரொம்ப பாதிச்சு கடைசில, டெல்லியை ஜெயிக்கவும் வெச்சுது. 

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?