IPL குறித்து மேலும் தகவல்கள்

நாளை மாலை 6.30 மணியளவிலிருந்து, வீட்டினுள் இருந்தவாறு மிகவும் கொண்டாட்டமாய் இருக்கும். காரணம், IPL தொடர், துவக்கம் பெறுகிறது. இம்முறை பார்வையாளர்கள் இல்லாமல், ஐக்கிய அரபு நாடுகளில், தொடர் நடைபெறுவதால், வீட்டினுள்ளேயே கொண்டாட வேண்டிய தருணமாக அமைந்துள்ளது. இதில், மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் வீரர்கள், ஐக்கிய அரபு நாடுகளை வந்தடைந்தனர். 10க்கும் மேற்பட்ட வாரங்களுக்கு, Bio - Bubbleல் இருந்து வரும் England அணியின் வீரர்களுக்கு, வேறு ஒரு Bio - Bubbleஐ வந்தடைந்து, அதில் தம்மை பொருத்திக்கொள்வது என்பது கடின செயலாய் அமையாது. ஆஸ்திரேலியா நாட்டின் வீரர்களுக்கும் அவ்வாறே. ஆனால், அணியினுள், முதற்கட்ட போட்டிகளில் இடம்பெற இயலாது. இருப்பினும், பின் வரும் போட்டிகளில் இடம் பெற்று தங்கள் அணியை வெற்றிக்கோட்டிற்கு அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணியை பொறுத்தவரை, அணியின் தலைவரான ரோஹித் ஷர்மா அவர்கள் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், இவ்வாண்டின் IPL தொடரில், தான் openingல் இறங்கவுள்ளதாக கூறியுள்ளார். மும்பை நிக்கு யார் openingல் களமிறங்கவுள்ளார் ? ரோஹித் ஷர்மா அவர்கள் எங்கே பேட்டிங் செய்வார் ? Lynn மற்றும் De Cock அவர்கள் இருவருக்குமே வாய்ப்புகள் வழங்கப்படுமா என்று பல கேள்விகள் மக்கள் மனதில் இருந்தது . அதற்கு பதிலளிக்குமாறு, ரோஹித் ஷர்மா கூறியது, " இவ்வாண்டின் IPL தொடரில், நானும் De Cock அவர்களும் தான் openingல் இறங்கவுள்ளோம். Lynn அவர்களை, சமயம் கண்டு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்", என்று தெளிவாக அறிவிக்கப்பட்டது. 

SportsRadar, எனும் விளையாட்டு துறையில், ஒருமைப்பாடு தீர்வுகள் மற்றும் தரவு தயாரிப்புகள் வழங்கும் நிறுவனம், BCCIயின் ஊழல் எதிர்ப்பு பிரிவுடன் இனைந்து, பணிபுரியவுள்ளது. இவ்வாண்டின், IPL தொடரில், நடைபெற்றுவரும் சூதாட்டங்களும், ஸ்பாட் பிக்ஸிங் கோளாறுகளை தடுக்க, இந்நிறுவனத்தை அழைத்து வந்துள்ளார்கள். இதற்கு முன், NBA, NFC, UEFA போன்ற மற்ற விளையாட்டு லீகுகளில் இனைந்து பணியாற்றியுள்ளார்கள். அவற்றுள், பல சம்பவங்களை கண்டறிந்து, சரிசெய்துளளர்கள். 


  

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood