நினைவூட்டும் பழைய தகவல்கள் - 2020
இப்பதிவில் நான் கூறவுள்ள தகவல்கள், சில நாட்களுக்கு முன் வெளியான தகவல்களே. இருப்பினும், இதை பதிவிடுவதன் ஓர் உரிய காரணம், இவையனைத்தும் வெளியான தருணத்தில் நான் இதைப்பற்றி ஒரு வரியும் எழுதவில்லை. அத்தருணத்தில், நடைபெற்றுக்கொண்டிருந்த, இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடரையும், மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்றுக்கொண்டிருந்த CPL போட்டிகளின் அலசல் பற்றியும் எழுதிக்கொண்டிருந்ததால், இதை நான் சிறிதும் கவனிக்கவில்லை. மன்னியுங்கள் !! இப்பதிவில், அவ்வாறு வெளிவந்த சில தகவலைகளை நாம் அலசவுள்ளோம் !!
இலங்கையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி :
இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், இவர்களை தொடர்ந்து தற்போது பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள், தங்களின் கிரிக்கெட் பணியை மீண்டும் துவங்க உள்ளார்கள். இலங்கையில், தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றதால், அங்கு பங்களாதேஷ் அணி ஓர் தொடர் விளையாட களமிறங்கியுள்ளார்கள். ஆகஸ்ட் மாத காலகட்டத்தில், இச்செய்தியை இரு நாட்டின் கிரிக்கெட் மன்றங்களும் இனைந்து உறுதிப்படுத்தியது. ஒரு புறம், IPL தொடர் நடைபெறும் நிலையில், மறுபுறம் அக்டோபர் மாதத்தில், இரு அணிகளும் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் மோதுவர். அத்தொடர், அக்டோபர் மாதம் 23ம் தேதியன்று துவங்கவுள்ளது. தற்போது, இரு நாட்டவரும், அவரவர் நாடுகளில், தங்களின் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இம்மாத 23ம் தேதியன்று, பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கை நாட்டுக்கு பறந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. வழக்கம் போன்று, இத்தொடரில் பார்வையாளர்களின்றி நடைபெறும், தீவிர பரிசோதனைகள் கடைபிடிக்கப்படும்.
கொரோனா பாதிப்புக்குப்பின் முதல் மகளிர் கிரிக்கெட் தொடர் ??
ஆம், கொரோனாவின் பாதிப்பின் காரணத்தினால், பல நாட்கள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. ஜூலை மாதகாலத்தில், முதன்முறையாக ஆண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை, பல விதிமுறைகளுடன் நடத்தப்பட்டது. அங்கிருந்து, பல தொடர்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அவையனைத்தும் ஆண்கள் விளையாடும் தொடராக இருக்க, மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் எப்போது துவக்கம் பெரும் என்கிற கேள்வி அனைவரின் மனத்திலும் இருந்தது. இவையனைத்திற்கும் பதிலளிக்கும்வாறு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் மேற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் இனைந்து, மகளிர் கிரிக்கெட் தொடர் ஒன்றை விளையாட ஒப்புக்கொண்டனர். ஆதலால், மகளிர் மேற்கு இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டுக்கு பயம் மேற்கொள்வர். அங்குள்ள, டெர்பி மைதானத்தில், ஐந்து 20 ஓவர் போட்டிகளை விளையாடுவர். இத்தொடர், இம்மாத 21ம் தேதியன்று துவக்கம் பெற்று, 30ம் தேதியில் நிறைவு பெரும். ஆகஸ்ட் மாதம் 30ம் தேதியன்று, மேற்கு இந்திய தீவுகள் அணியினர், இங்கிலாந்து நாட்டை வந்தடைந்தனர்.
போட்டிகள் :
முதல் போட்டி - செப்டம்பர் 21
இரண்டாம் போட்டி - செப்டம்பர் 23
மூன்றாம் போட்டி - செப்டம்பர் 26
நான்காம் போட்டி - செப்டம்பர் 28
ஐந்தாம் போட்டி - செப்டம்பர் 30
கொரோனாவுக்கு பின் விளையாடப்படும் முதல் மகளிர் கிரிக்கெட் தொடர் என்பதால், இவர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
Comments
Post a Comment