RR vs CSK | IPL 2020 | திருப்புமுனை Segment

இந்த Match'அ பொறுத்த வரைக்கும்,  ரொம்ப நாள் கழிச்சு ஒரு high scoring encounter. ஆனா, இந்த high scoring match'அ RR ஜெயிச்சதுக்கு பல காரணங்கள் இருக்கு. சென்னை work பண்ணவேண்டிய departmentஸும் நெறையா இருக்கு. இந்த matchல ஏகப்பட்ட turning points இருக்கு. ஆனா, இந்த matchஅ ராஜஸ்தான் ஜெயிச்சதுக்கு முக்கியமா இருக்குற ஒரு turning point'அ பத்தி தான் இந்த திருப்புமுனை segmentல நாம இன்னிக்கி பாக்க போறோம்.

இந்த match ஷார்ஜா'நடக்குது. Toss ஜெயிச்ச சென்னை அணி, முதல்ல bowling choose பன்றாங்க. காரணம், 2nd inningsல dew factor இருக்குகிறதுனால தான். ராஜஸ்தான் ரொம்பவும் அருமையா விளையாடுறாங்க. சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித் ரெண்டு பேருமே, சென்னை bowlersகு ground மொத்தத்தையும் சுத்திகாட்டுறாங்க . இன்னொரு பக்கம், சென்னை bowlers, குறிப்பா spinners, slotலேயே pitch பண்ணிட்டு இருக்க, லட்டு மாதிரி வந்துச்சு. இருந்தாலும், 11  வது ஓவர்ல இருந்து 19வது ஓவருக்குள்ள, match மொத்தத்தையும் சென்னை அணியோட காட்டுக்குள்ள கொண்டு வந்தாலும், அந்த கடைசி ஓவர்......

கடைசி ஓவர்ல bowl பண்ண வந்தாரு, Ngidi. Battingல இருந்தது Tom Curran மற்றும் Jofra Archer, அதுல strike எடுத்துக்கிட்டது Archer. Ngidi முதல் 3 ஓவர்ல, 26 ரன்கள் கொடுத்து 1  எடுத்திருந்தார். கடைசி ஓவர் போடுறதுக்கு correct ஆன option தான். ஆனா, நடந்த சம்பவம் வேற. முதல் ball வீசுறாரு, ஆர்ச்சர் straightல ஒரு சிக்ஸர். சரி, அடுத்த ball, கொஞ்சம் shortஅ போடலாம்'னு try பண்ணாரு. அதையும் மடக்கி, leg sideல வெளில அடிச்சாரு. சரி, அதுக்கு அடுத்த ballல வேகத்தை குறைச்சு short ball போட, அதையும் தூக்கி 6 அடிச்சாரு. இதுல, இன்னொரு மோசமான செய்தி, இந்த ball, no ball வேற. Free hit. திரும்ப bowl பண்ணுறாரு, yorker வீச try பண்ணி, slot deliveryயா அமையுது. அதையும் 6 அடிக்குறாரு. மறுபடியும் no ball !. Ngidi மாதிரி ஒரு bowler கிட்ட இருந்து இந்த ஒரு inconsistencyய யாரும் எதிர்பாத்திருக்க மாட்டாங்க. ஆனா, நடந்துச்சு. இதுக்கு அடுத்த ballல wide. வெறும் three ballsல 27 runs கொடுத்து, ராஜஸ்தானுக்கு நல்ல ஒரு finishஅ கொடுத்தாரு. இதுக்கு அடுத்த 3 ball'ல 3 ரன் மட்டுமே வந்தாலும், மொதல்ல, அடிச்ச அடி, பேயடி !!

இது மட்டும் இல்லாம, bowlingலயும் ரொம்ப tight'அ bowl பண்ணாரு. தன்னோட 4 ஓவர் spellல வெறும் 26 runs மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வேற எடுத்திருக்காரு. இவரோட இந்த ஒட்டுமொத்த performanceஉம் தான், இந்த matchஓட திருப்புமுனையா அமைஞ்சிருக்கு. Incase, இவரும் Ngidi மாதிரி runs கொடுத்திருந்தாருன்னா, அவ்ளோ தான் RRகு Game முடிஞ்சிருக்கும். 


     
   

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?