Billingsன் போராட்டம் வீண் - வென்றது Australia !!


ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெற்று நிறைவடைந்த 20 ஓவர் தொடரில், இங்கிலாந்து அணி 2-1 என்கிற கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வாறு  நிலையில், இரு அணிகளுக்குமிடையே ஒரு நாள் தொடர் நடக்கவிருக்கவுள்ளது. இதற்கு முன்னதாக, 2018ம் ஆண்டில், இவர்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற ஒரு நாள் தொடரில், இங்கிலாந்து அணி 5-0 என்கிற கணக்குடன் வெற்றிபெற்றனர். அந்த சம்பவத்தை மீண்டும் இங்கிலாந்து அணிக்கு வழங்க வேண்டும் என்கிற நோக்குடன் ஒரு புறம் களமிறங்க, மறுபுறம் இங்கிலாந்து அணி, தங்கள் வெற்றி வாகையை மேலும் அதிகரிக்க முற்படுவர். இவர்கள் இருவருக்கும் போட்டி என்றாலே, தீவிரமும் படபடப்பும் அதிகரித்தே காணப்படும். 

மஞ்செஸ்டரில் இப்போட்டி நடைபெறுகின்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கின்றது. ஒரு புறம் இங்கிலாந்து அணி, 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்டு களமிறங்க மறுபுறம் ஆஸ்திரேலியா அணி, ஆறிலிருந்து 7 பந்துவீசும் வாய்ப்புகளுடன் களமிறங்கினர். ஆனால், இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி, ஸ்டீவ் ஸ்மித் அவர்களை அணியினுள் சேர்க்கவில்லை. இச்செய்தி அதிர்ச்சியை வெளிப்படுத்தியது. 

ஆஸ்திரேலியா அணியை பொறுத்த வரை, இடையிடையில் விக்கெட்டுகளை இழந்தாலும், துவக்கத்தில், 3ம் இடத்தில் ஸ்டோய்னிஸ் அவர்களை களமிறங்கியது நன்கு பலனளித்தது. அதிரடி ஆட்டக்காரரான ஸ்டோய்னிஸ், சிறிதும் தயக்கம் கொள்ளாமல், தனது ஆட்டத்தை தான் சிறப்பாக வெளிப்படுத்திவிட்டு சென்றார். மேல் தளத்தில் தன்னால் முடிந்த வரை பௌண்டரிகளை குவித்து, ரன் ரேட் விகித்ததை மேலக்கோட்டிலேயே வைத்துக் கொண்டிருந்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சும் சளைத்தது அல்ல. மார்க் வுட் வீசிய, Good Length பந்துகளும், அதிக வேகத்தில் சின்னஞ்சிறு Movementஉடன் வீசப்பட்ட பந்துகளும், பார்ப்பதற்கு குளிராய் இருந்தது. Batsmanகளும் அவ்வாறு வீசப்பட்ட பந்துகளில், தங்களின் விக்கெட்டுக்குகளை பறிகொடுத்து விட்டு சென்றனர். அவருக்கு இணையாக வோக்ஸ் மற்றும் ஆர்ச்சர், நன்கு அழுத்தத்தை வழங்கினர். 24 ஓவர்களின் முடிவில் 123/5 என்று ஆஸ்திரேலியா அணி தத்தளித்துக்கொண்டு இருக்க, மார்ஷும் மேக்ஸ்வெல்லும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஸ்டோய்னிஸின் துவக்கம், 26 ஓவர்களை மீதம் உள்ளவாறு அமைத்து கொடுத்தது. 280க்கும் மேற்பட்ட இலக்கினை வழங்கினால் வெற்றியென்றே எண்ணத்துடன் விளையாடினர். காரணம், இரண்டாம் Inningஸில் Pitch சற்று மெதுவாக மாறும். இருவருமே, தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, அரை சதங்களை குவித்தார்கள். மறுபுறமோ, இங்கிலாந்து அணி இடைப்பட்ட ஓவர்களில், Fuller Length பந்துகளும், Overpitched பந்துகளும் வீசினர். அதில், பௌண்டரிகளை அடிக்க இயன்றது. மேக்ஸ்வெல்லின் வீழ்ச்சி, இங்கிலாந்து அணிக்கு நிம்மதியை வழங்கியது. மார்ஷும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தப்பட்டார். ஸ்டார்க் இறுதியில் குவித்த ரன்கள், 294/9 என்கிற Scoreல் நிறுத்தியது. 

இங்கிலாந்து அணிக்கு இணையாகவே திகழ்ந்தது ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சு. துவக்கத்தில் அவர்கள் கைப்பற்றிய 4 விக்கெட்டுகள், பார்ஸ்டோ எனும் அதிரடி துவக்க வீரரை சாந்தப்படுத்தியது. ஹெசிலவுடின் பந்துவீச்சு, நினைத்தபடி குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே Pitch செய்யப்பட்டு வீசப்பட்டது. தன்னுடைய line and lengthல் வெளிப்படப்பட்ட தெளிவு, இறுதிவரை கடைப்பிடிக்கப்பட்டது. 20 ஓவர் முடிவில், 68/4 என்கிற நிலையில் பரிதாபமாய் காணப்பட்டது இங்கிலாந்து அணி. களமிறங்கினார், பில்லிங்ஸ். பார்ஸ்டோவுடன் இனைந்து செயல்பட துவங்க, ரன்கள் பீறிட்டது. பார்ஸ்டோ அவர்கள், தனக்கு உரிய நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அந்நேரம் வெளிவந்தது, ஸாம்பா'வின் ரூபத்தில். Slot Deliveriesஐ அவர் வீச, Deep Square Leg மற்றும் Deep Mid Wicket திசைகளில் சிக்ஸர்களை குவித்தார். அதற்கு அடுத்த ஓவரில், கம்மின்ஸ் அவர்கள் Short Deliveriகளை வீச, பில்லிங்ஸ் குறிவைத்து தாக்கினார். 20 - 30 ஓவர்களின் இடையே வழங்கப்பட்ட ரன்களின் எண்ணிக்கை மட்டுமே 72 ஆகும். ஆட்டத்தில்  திருப்பம் ஏற்பட்டது. 35ம் ஓவர் வரை இங்கிலாந்து அணியின் கைகளில் போட்டி இருக்க, மீண்டும் ஸாம்பா அவர்கள் திருப்பத்தை வழங்கினார். பார்ட்ஸோவின் விக்கெட்டை ஆசையினை தூண்டி கைப்பற்றினார். அங்கிருந்து ஒருபுறம் பில்லிங்ஸ் தனியொருவராக போராட, மறுபுறத்தில் மொயின் அலி, வோக்ஸ், அடில் ரஷீத் போன்றோர் பொறுப்புடன் விளையாடாமல், இலவசமாக விக்கெட்டுகளை வழங்கினர். இவர்கள் மூவரில் எவரேனும் ஒருவராவது அவசரமின்றி செயல்பட்டிருந்தால், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருப்பர். ஸ்டார்க்கின் இறுதிக்கட்ட பந்துவீச்சு உச்சக்கட்டத்தில் வெளிப்பட்டது. பில்லிங்ஸ் தனது முதல் சதத்தை ஈட்டினார். ஆனாலும், இலக்கினை அடைய இயலாமல் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆட்ட நாயகன் விருதை வென்றது - ஜோஷ் ஹெசிலவுட். மிகவும் ஆணித்தரமான பந்துவீச்சாகும். ஆனால், அடுத்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அவர்கள் அணியினுள் இடம்பெற வேண்டும். இல்லையெனில், பிரச்சனையை வழங்கும். 

" கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 
  குத்தொக்க சீர்த்த இடத்து " இத்திருக்குறள் இப்போட்டியில் உள்ள வேறுபாட்டினை விளக்கும். ஸ்டோய்னிசின் துவக்கம் மற்றும் பார்ஸ்டோவின் கணக்கிட ஆட்டம் இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.                 

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?