பார்வையாளர்களுக்கு அனுமதி ?! Pakistan நாட்டினுள் இனி வரும் கிரிக்கெட்...!

இன்னும் நான்கு நாட்களில் IPL தொடர், துவங்கவுள்ள நிலையில், IPL அல்லாத செய்திகளை பற்றிய செய்தியை ஏன் பதிவிடுகிறாய் ? என நீங்கள் என்மீது கேள்விகளை எழுப்பலாம். ஆனால், இச்செய்திகள் IPL கிரிக்கெட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மற்றும், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், எந்த அணிக்கு கோப்பையை தட்டிச்செல்லும் வாய்ப்பு உள்ளது, எவ்வணி நம் நாட்டுக்கு போட்டியாக அமையும் என்று ஆராய்வதற்கு, மற்ற உலக தொடர்களை கணக்கில் கொள்வது மிகவும் அவசியம். 

செப்டம்பர் மாத காலத்தில், ஆஸ்திரேலியா நியூஸிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் கிரிக்கெட் தொடரில், பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றே செய்திகள் வெளிவந்தது. ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது, கொரோனா'வின் பாதிப்பு சற்று குறைவாக இருக்கும் பொருட்டு, 50 % பார்வையாளர்களை மைதானத்தினுள் அனுமதிக்க உள்ளோம், என்றே செய்தி வெளிவந்தது.ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் இடையிலான இடைவெளி, இரண்டு மட்டையை அடுத்தடுத்து வைத்திருப்பதால் உள்ள தூரமே ஆகும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் கோஷமெழுப்ப கூடாது என்றும், குறித்த பகுதியைக் கடந்து பார்வையாளர்கள் நகர்ந்து செல்ல கூடாது எனவும் குறிப்பிடத்தக்கது. இத்தொடர் 26ம் செப்டம்பர் அன்று துவக்கம் பெற்று, 7ம் அக்டோபர் அன்று நிறைவு பெறுகின்றது. இதில் 3 ஒரு நாள் போட்டிகளும் 3 இருபது ஓவர் போட்டிகளும் இடம்பெற்றுள்ளன. 26, 27, 30ம் தேதிகளில் 3 இருபது ஓவர் போட்டிகள் நடைபெறும் எனவும், அக்டோபர் 3, 5 மற்றும் 7ம் தேதிகளில் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெறும். அனைத்து போட்டிகளும், பிரிஸ்பேன் நகரில் உள்ள ஆலன் பார்டர் ஃபீல்டு மைதானத்தில் நடைபெறும் என்பது அறிவிக்கத்தக்கது. 

இதிலிருந்து, IPL தொடரில் தாக்கம் ஏற்படுத்தும் செய்தி யாது என நீங்கள் கேள்வி எழுப்பினால், அதற்கு என் பதில். IPL தொடரின் முதற்கட்ட போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லையென்றாலும், பின் வரும் போட்டிகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. அதற்கு ஓர் குறிப்பு இப்போட்டிகளின் வெளிப்பாடு. ஆயினும், கொரோனா பாதிப்புக்கு பின், ஆஸ்திரேலியா நாட்டினுள் நடக்கவிருக்கும் முதற் போட்டியாக இது அமையும். 

இதற்கு அடுத்து, பாகிஸ்தான் நாட்டினுள் இனி நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளை பற்றியே ஓர் பதிவு. நவம்பர் மாத காலகட்டத்தில், ஜிம்பாப்வே சர்வதேச கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு ஓர் தொடர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள். இத்தொடரை, சர்வதேச பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, மிகவும் தீவிரம் என்றே கருதிகின்றனர். அதனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம், கிரிக்கெட் போட்டிகளை எவ்வாறு நடைமுறை செய்வது என்கிற அறிவுரைகளை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, நவம்பர் மாத காலத்தில் மீதம் உள்ள PSL போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதைத்தொடர்ந்து, உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மிக மிக தீவிரமாக நடைபெறும் என்று குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும், இவ்வாண்டின் இறுதியில், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். ஆதலால், இதுவும் ஓர் குறிப்பாக கருதப்பட வேண்டும். 

கிரிக்கெட்டின் இயல்பு நிலை திரும்புவதற்கு மேலும் உள்ள ஒரே விஷயம், பார்வையாளர்களின் இருப்பதாகும். அதுவும், இனி வரும் மாதங்களில் நிறைவு பெரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, பொறுமையைக் காத்தல் என்பது மிகவும் அவசியம். இனி வரும் பதிவுகளில் நற்செய்திகளுடன் உங்களை நான் காண்பேன்.

      

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?