DC vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, டெல்லிக்கு புஞ்சாபுக்கும் நடுவுல match நடந்தது. இந்த வருஷம் IPLஓட ரெண்டாவது match இது தான். ஆனா, அதுக்குள்ள இந்த match Tie ஆகி, Super Overல முடிஞ்சுது. Super Overல டெல்லி ரொம்பவும் easy'அ ஜெயிச்சிட்டாங்க. இந்த thriller gameல ஏகப்பட்ட turning points இருந்துச்சு. ஆனா, இந்த matchஓட தலையெழுத்தே மாறினது, அந்த ஒரு moment'னால தான். 

ஸ்டோய்னிஸோட late flourish காரணமா, 120குள்ளேயே struck ஆகி நிக்க வேண்டிய Delhi Team, 157/8னு ஒரு fighting scoreஅ அடைஞ்சாங்க. பஞ்சாபோட bowling முக்காவாசி நல்ல இருந்துச்சு ஆனா கடைசில மொத்தமா விட்டுட்டாங்க. அதுலையும், கடைசி ஓவர்ல மட்டுமே 30 runs போச்சு. பஞ்சாப் திரும்ப பேட்டிங்'கு வந்தாங்க, ஒரு பக்கம் wickets விழுந்துகிட்டே இருந்தாலும், இன்னொரு பக்கம் மயாங்க் அகர்வால், கடைசி வரைக்கும், தனியாளா நின்னு போராடினாரு. கிட்டத்தட்ட ஜெயிச்சு கொடுத்துட்டாரு. ஆனா, கடைசில 3 ballsல 1 run எடுக்கணும்னு நெலமை இருக்கும்போது, மயாங்க் அகர்வால் அவுட் ஆகிட்டாரு. அதுக்கு அடுத்து கடைசி ballல ஜோர்டான் அவுட் ஆகிட்டதுனால, super overகு game போச்சு. Super Overல பஞ்சாப் 2 ரன் மட்டும் தான் அடிக்கிறாங்க. டெல்லி அதை easyஅ chase பண்ணிட்டு போறாங்க. 

இங்க ஸ்டோய்னிஸோட கடைசி ஓவர் 30 runஸும், இல்ல மயாங்கோட inningஸும் திருப்புமுனையா பார்த்தாலும், அதையும் தாண்டி ஒரு சம்பவம் தான் இந்த matchஓட ஜாதகத்தையே திருப்புச்சு. 

நாம நெறய பேர் சொல்லி கேட்டிருப்போம், ஒரு ballல match மாறும்'னு. இங்கயும் அதே தான் நடந்துச்சு. பஞ்சாப் second inningsல batting பண்ணும்போது, 18 ஓவர் முடிவுல, ஸ்கோர் 133/6னு இருந்துச்சு. அப்போ ரபாடா bowl பண்ண வராரு.  அந்த ஓவர்'ல ரெண்டு fours concede பன்றாரு. அது இல்லாம ஒரு single மட்டும் ஒரு double கெடைக்குறதுனால, 11 ரன் ஏற்கனவே வருது. அப்போ கடைசி ball வீச வராரு ரபாடா. அத மயாங்க் அகர்வால், OFF sideல அடிச்சிட்டு quick'அ 2 எடுக்குறாங்க. ஆனா, umpire'ஆன நிதின் மேனன், அதை one run shortனு decision சொல்றாரு. One Run Shortனா, இப்போ ரெண்டு ரன் எதுக்கு ஓடும்போது, மோதல் ரன்'ல அவசரத்துல crease'அ touch பண்ணாம, 2nd run ஓடுன, அப்போ one run shortனு decision கொடுப்பாங்க. அது தான் நடந்துச்சு. ஆனா, TV Replaysல பாக்கும்போது, மயாங்க் அகர்வால் ரொம்பவும் தெளிவா, batஅ crease குள்ள தேச்சிட்டு 2nd runகு ஓடிருக்காரு. ஆனா, one run short decisionஅ cancel பண்ணவே இல்ல. Umpiring Error காரணமா, Super Overகு match போச்சு. Incase அந்த 1 ரன் வந்திருந்தா, 3 ballsலேயே game முடிஞ்சிருக்கும். அந்த 1 ரன் எடுக்கணும்னு, situation வந்திருக்காது, அதை வெச்சி டெல்லி TIE பண்ணிருக்க மாட்டாங்க. இந்த ஒரு error, பஞ்சாப்கு தோல்விய பரிசா கொடுத்துச்சு. 

IPLல வருஷத்துக்கு இந்த மாதிரி ஏதாவது ஒரு umpiring errorஆவது நடக்குது. போன வருஷம், பெங்களூருக்கும் மும்பைக்கும் நடுவுல நடந்த matchல, கடைசி ball, Malinga NO - Ball வீசுவார். அதை, umpire கவனிக்காம விட்டதுனால, மும்பை ஜெயிச்சிருப்பாங்க. அதனால, இந்த மாதிரி umpiring errorsலாம் தவிர்க்கணும். World's Richest Leagueல இந்த மாதிரி errorலாம் நிச்சயம் எதுக்கமுடியாதது. 

                      

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?