RCB vs MI | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, இன்னொரு high scoring thriller gameஅ நாம witness பண்ணோம். தொடர்ந்து ரெண்டாவது, thriller போட்டியா அமைஞ்சிருக்கு. அதே நேரத்துல, இந்த வருஷத்தோட ரெண்டாவது super over gameஆவும், இந்த match அமைஞ்சிருக்கு. ஆனா, இது super overருக்கான போட்டியே கெடயாது. ஆனா, எப்படி super over வரைக்கும் போச்சு ? அதுக்கு காரணம், on-fieldல RCB பண்ண சில mistakes தான். என்ன mistakes பண்ணாங்க, அதுல எது turning point'அ அமைஞ்சுதுன்னு இந்த blogல பார்க்கப்போறோம்.

அதுக்கு முன்னாடி, இந்த match'ஓட Post Match Analysis video, என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். 

MI toss ஜெயிச்சு bowling choose பண்ணாங்க. Finch, Padikkal ரெண்டு பேரோட அருமையான start காரணமாலும், அப்புறம் Mr. 360யான ABD மற்றும் ஷிவம் துபே'யோட aggressive finish'னாலயும் பெங்களூரு 201/3னு நல்ல score அடிச்சிருக்காங்க. துபாய் pitchல இதை chase பண்ணுறது ரொம்பவும் கஷ்டம். ஆனா, dew வரும்னு நம்பிட்டு இருந்தாங்க. 

MI battingகு வராங்க. ஆரம்பத்துலயே, முக்கியமான wickets'ஆன ரோஹித் ஷர்மா, De Cock, சூரியகுமார் யாதவ் எல்லாரும் சீக்கிரமா out ஆகிட்டாங்க. ஆனா, இஷான் கிஷான் தனியொரு ஆளா போராடுனாரு. ரொம்பவும் நேர்த்தியான ஆட்டம். Indian teamமோட WK slotகு இப்போ competition அதிகமாகிடுச்சு. அவரோட சேர்ந்து, Pollardடும் செம காட்டு காட்டுனாரு. கடைசி 6 ஓவர்ல 100 runs கிட்ட அடிக்கணும்'னு நெலமையிருக்கும் போது, நெனச்ச மாதிரி dew வருது. அது கூடவே, pacers யாரும் இல்லாததுனால, leg spinners bowl பண்ணிட்டு இருந்தாங்க. Situationனும் சாதகமா அமைஞ்சிடுச்சு. இருந்தும், கடைசில போராடி Super Overகு இழுத்துட்டு போனாங்க. அங்க, Super Overல 8 runs targetஅ கடைசி ballல chase பண்ணி, RCB win பண்ணாங்க. 

இங்க, match கிட்டத்தட்ட 12th overலேயே முடிஞ்சிடுச்சு. அங்க இருந்து MIகு chance கெடச்சதுக்கு ஒரு முக்கிய காரணம், deathல 2-3 catches RCB விட்டாங்க. ஆனா, அதையெல்லாம் தாண்டி உண்மையான திருப்புமுனை, இந்த match ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே வந்துருச்சு. 

எது, match ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே வா ? ஆமாம். Team Selectionல RCB பண்ண தப்பு தான் super over வரைக்கும் கொண்டு போச்சு. போன matchல Steyn, Umesh எல்லாரும் அடி வாங்குனாங்க. அது காரணமா, Steynனா வெளில எடுத்து வெச்சுட்டு, Isuru Udanaவ கொண்டு வந்தாரு. கூடவே, Josh Phillipe சரியா விளையாடாதுனால, அவருக்கு பதிலாவும் கூடவே, ரோஹித் ஷர்மாவோட wicket'அ எடுக்குறதுக்காகவும், Zampa'வ உள்ள கொண்டு வந்தாரு. இந்த ரெண்டு selection கூட ஓரளவுக்கு work ஆச்சுனாலும், Kohli பண்ண தப்பு, Umesh Yadavஅ வெளில எடுத்து வெச்சுட்டு, Gurukeerat Singhஅ உள்ள கொண்டு வந்தது தான். இங்க, Gurukeerat Singh, battingகாக மட்டும் தான் use பண்ண முடியும். அது காரணமா, deathல pacer option இல்லாம struggle பண்ணாங்க. இதுக்கு, ஒன்னு Umesh yadavஏ எடுத்து வெச்சிருக்கலாம். இல்லனா, young Indian Pacers யாரையாவது select பண்ணி, try பண்ணி பாத்திருக்கலாம். ஆனா, இந்த ஒரு choice காரணமா, நேத்து almost தோத்திருப்பாங்க. இதே choiceஅ வெச்சுட்டு, இதுக்கு அப்புறம் வர்ற matchesல use பண்ணா, நிச்சயமா தோல்விய சந்திப்பாங்க.       

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?