சுட சுட KKR செய்திகள்

இப்பதிவு பேச்சு வழக்கில் எழுதப்பட்டது, இடையிடையே சில ஆங்கில வார்த்தைகளும் இடம்பெற்றிருக்கும். இன்னும் 1 வாரத்துல, IPL ஆரம்பிக்குற நேரத்துல, Kolkata Knight Riders அதாவது KKR அணி, சில changes announce பண்ணிருக்காங்க. அதுல சிலது பெருமையா இருக்கும், சிலது பரிதாபமா இருக்கும். ரெண்டுதோட விளக்கத்தையும் இந்த Blogல நான் தெளிவா explain பண்ண போறேன். படிச்சிகிட்டே வாங்க !!

முதல்ல பரிதாபம் படவேண்டிய விஷயத்தை பாப்போம். 48 வயசான, பிரவீன் தம்பே'வ KKR ஏலத்துல வாங்குன விஷயம் நம்ம எல்லாருக்கும் தெரியும். அதுக்கு அப்பறோம், BCCIயோட permission வாங்காம, CPLல contract sign பன்னதுனால அவர் இந்த வருஷம் IPLல விளையாடக்கூடாது'னு BCCI தெரிவிச்சுட்டாங்க. அதாவது, BCCIயோட permission இல்லாம, எந்த Indian Player'உம் வெளிநாட்டு tour'ல participate பண்ணக்கூடாது. ஆனா, retirement வாங்குன playersகு மட்டும் தான் permission கொடுப்பாங்க. இப்டி இருக்கும் போது, இந்தியா'ல இருக்குற domestic matchesலயும் IPLலயும் மட்டுமே விளையாட போற இவருக்கு exception கொடுக்கலாம். சரி, இப்போ விஷயம் என்னன்னா, அவர player'அ select பண்ண KKR teamகு, இப்போ coaching staff'அ வர்றப்போறாரு. இந்த செய்தி தான் ரொம்ப பரிதாபமா இருந்துச்சு. Indiaவ சேர்ந்த பல players, ரொம்ப காலத்துக்கு team lகுள்ளேயே விளையாடாம இருக்காங்க. அவங்களுக்கு overseas toursல participate பண்ணுற chance கொடுக்குறது'னால atleast அவங்கவங்க life காக earn பண்ணுற வாய்ப்பாவது கிடைக்கும். இதப்பத்தி BCCI தான் யோசிக்கணும்.

இப்போ ரெண்டாவது, அதாவது பெருமையை சேர்க்குற விஷயம் என்னனு பாக்கலாம். TKRகாக விளையாடின, Americaவ சேர்ந்த fast bowlerஆன Ali Khan, இப்போ KKRக்காக விளையாட போறாரு. Recentஅ Harry Gurney, Vitality T20 Blastல participate பண்ணி, தன்னோட தோள்பட்டையை காயம் பண்ணிகிட்டாரு. அதனால, அவருக்கு replacement'அ, Ali Khan'அ announce பண்ணிருக்காங்க. இதுல என்ன பெருமை, அப்டினு நீங்க கேக்கலாம். IPLல முதல் USA player participate பண்ண போறாரு. 2016ல Afghanistanன சேர்ந்த playerகள IPLல விளையாட chance கொடுத்தது'னால, இப்போ cricketல Afghanistanனோட வளர்ச்சியை நாம பாக்குறோம். அதுக்கு அடுத்து, USAல இருந்து ஒரு வீரர் விளையாட போறாரு. So, அங்க cricket develop ஆகா வாய்ப்பு இருக்கு. Associate Nationsல இருந்து இது மாதிரி பல வீரர்கள் IPLல விளையாடனும். கிரிக்கெட்ல இருக்குற Full Member Nations அதிகமாகனும். அதுக்கு, இதுவே ஒரு விதை !!!

Cricketன் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் ஓர் பாதயாத்திரையின் முதற்படி !! " சிறுதுளி பெருவெள்ளம் "



    

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?