ஓர் அறிவிப்பும் - ஓர் சம்பவமும்
அடுத்த 2 மாதங்களுக்கு, என்னுடைய பதிவுகள், பேசும் வழக்கில் எழுதப்படும். அங்கங்கே ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். IPL பற்றிய தகவல்களும், போட்டிகளின் Analysisகளும், என்னுடைய Youtube பக்கங்களில், காணொளியாக பதிவிடப்படும். எனவே, Blogல், அப்போட்டியில் திருப்பு முனையாக இருக்கும் ஓர் தருணத்தைப் பற்றியே எழுதப்படும். அவ்வாறு உள்ள Analysisகளின் link கீழே உள்ளது. Click செய்து பாருங்கள்.
இப்போ, ஒரு சம்பவத்தை சொல்றேன், கேளுங்க. இது IPL சம்பவம் கெடயாது. ஆனா, t20ல நடந்த ஒரு சம்பவம். இந்த சம்பவத்தை நெனச்சு ஒவ்வொரு இந்தியனும், இன்னிக்கி வரைக்கும் பெருமை பட்டுட்டு இருக்காங்க. இனியும் பெருமை படுவாங்க.
2007ம் ஆண்டுல நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் காரணமா, இந்த t20 மோகம், எல்லாருக்கும் பரவுச்சு. அந்த உலகக்கோப்பை'ல நடந்த சம்பவம் தான் இது.
இன்னிக்கி, சரியாய் 13 வருஷத்துக்கு முன்னாடி, சூப்பர் 8 stageல, இந்தியாவும் இங்கிலாந்தும், Durbanல meet பன்றாங்க. அந்த matchல பேசுறதுக்கு ரொம்பவும் முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு. India முதல்ல பேட்டிங் செஞ்சு 18வது ஓவர்'ல 171/3னு நல்ல நெலமைல இருக்காங்க. அப்போ யுவராஜ் சிங் அவர்களுக்கும், ஆண்ட்ரே ஃபிளிண்டாஃப் அவர்களுக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்படுது. 18வது ஓவர் வீசிய Flintoff'அ, யுவராஜ் சிங், 2 பௌண்டரி அடிச்சாரு. அதப்பாத்துட்டு, Flintoff சொன்னது, " ரொம்ப சுமாரான ஷாட் இது. பேட்'ல மாட்டுனது'னால ball போய்டுச்சு, நான் உன்ன என்ன பண்ணுறேன் பாரு. உன் கழுதையே நெறிக்குறேன்" தீப்பொறியா அமைஞ்சுது. யுவராஜ் சிங், " என் கையில என்ன இருக்கு ? இதை வெச்சு groundல இருக்குற எல்லா பக்கமும் சிக்ஸ் அடிக்கப்போறேன். " அயோடினு ரொம்பவும் கோவத்தோட reply பன்றாரு. மைதானத்துல, வாக்குவாதம் நடந்து முடியுது, ஆனா யுவராஜ் அவர்களுக்கு கோபம் குறையல. 19வது ஓவர் ல bowling போட வந்தாரு, ஸ்டுவர்ட் பிராட். யுவராஜ் சிங், விடவே இல்ல. முதல் பந்து, Deep Mid Wicket'ல ஒரு sixer அடிக்குறாரு. அடுத்த ball, யுவராஜ் சிங்'ஓட favourite shot ஆன, flick shotல sixer. சரி, மூணாவது ballல, ஏதாவது வித்தியாசமா போடுறாரான்னு எதிர்பாத்துட்டு இருக்கும்போது, Outside off stumpல ball வீசுறாரு, extra cover மேல ஒரு sixer. 3 on 3 !. சரி, 4வது பந்துல around the wicketல வந்து bowling போட, full toss, சும்மா நச்சுனு ஒரு சிக்ஸர். அடுத்த ரெண்டு ballஉம், lengthல வீசினாங்க. அந்த ரெண்டு பந்தையும், Deep Square Legலயும், Deep Long Onலயும் sixes அடிச்சாரு. 6 sixes அடிச்ச உடனே தான் வெறியே அடங்குச்சு. இதுல, வெறும் 12 ballsல 50 ரன்கள் அடிக்குறாரு. இன்னி வரைக்கும், fastest 50காண இந்த சாதனையை யாரும் முறியடிக்கல.
யார் வேணும்னாலும், எது வேணும்னாலும் பேசிட முடியாது. அப்டி பேசினா, இப்டி தான் வெனையா போயி முடியும். இன்னொன்னு, கங்குலி'கு அடுத்து யுவராஜ் சிங், Flintoff அவர்களுக்கு புரிய வெச்சாரு,நீ அடிச்சா நான் திரும்ப அடிப்பேன்'னு. "நாங்க யாருக்கும் சளச்சவங்க கெடயாது"'னு, மறுபடியும் ஒரு வாட்டி, உலகத்துக்கு சத்தமா சொன்னாங்க.
" நான் வம்பு தும்பு சண்டையெல்லாம் வரமாட்டேன் டா
Comments
Post a Comment