யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்கவுள்ளார் ?...
சென்ற ஆண்டு, யுவராஜ் சிங் அணைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு அறிவித்த செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. ஓய்வு அறிவித்தபின், தான் " Global Canada T20 League " தொடரில் பங்கேற்று, அதில் டொரோண்டோ நேஷனல்ஸ் எனும் அணியை வழிநடத்தியதைப் பற்றியும், நாம் அறிந்திருப்போம். ஆனால் அறியாதது, இவ்வாண்டு இறுதியில் நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த "Big Bash League"ல் பங்குபெறவுள்ளார் எனும் செய்தியே. பல நாட்களாக, வதந்திகளில் பரவிக்கொண்டிருந்த இச்செய்தி, நேற்று மாலை நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்திய நாட்டின் வீரர்கள், உலகில் உள்ள மற்ற 20 ஓவர் லீக் போட்டிகளில் பங்குபெற வேண்டுமெனில், NOC ( No Objection Certificate )அதாவது ஆட்சேபனையின்றி சான்றிதழ் பெற வேண்டும். ஆனால், அதை ஓய்வு அறிவித்த வீரர்களுக்கு மட்டுமே வழங்கி வருகின்றனர். காரணம், தற்போது விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்ற 20 ஓவர் லீக் போட்டிகளில் பங்குபெற கூடாது என்கிற சட்டத்தை உருவாக்கி, அதை கட்டிக்காக்கின்றார்கள்.
இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு, 48 வயது முதியவரான பிராவின் தம்பே அவர்களுக்கு, இந்திய சர்வதேச அணியில் இடம்பெற வேண்டும் என்கிற கட்டாயம் ஏதும் இல்லை. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும், IPL தொடரிலும் பங்குபெற்றால் போதும் என்று தனது ஆசைக்காக விளையாடுவரும் ஓர் கிரிக்கெட் வீரர். இவ்வாண்டு IPL ஏலத்தில், கொல்கத்தா அணி இவரை விலைகொடுத்து வாங்க பலர் தங்களின் புருவங்களை உயர்த்தினர். 48 வயதுடைய வீரர் தற்போது IPL தொடரிலும் பங்குபெறவுள்ளார் என்று பலர் எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்க, BCCI நிர்வாகம், IPL தொடரில் பங்குபெறுவதற்கு தடை அறிவித்தது. காரணம், இவ்வாண்டில் நடக்கவிருந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியும் எவ்வித சான்றிதழும் இன்றி பங்கேற்றார். ஆதலால், இனி உள்நாட்டு கிரிக்கெட்டில் தன்னால் பங்கேற்க முடியாது.
அவ்வாறு உள்ள நிலையில், யுவராஜ் சிங் அவர்கள், இந்திய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து ஆட்சேபனையின்றி சான்றிதழை பெற்றுக்கொண்டார். ஆஸ்திரேலியாஸின் சர்வதேச கிரிக்கெட் வாரியமும், Big Bash தொடரில், யுவராஜ் சிங்கின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அவருக்கென, ஓர் அணியை மட்டும் தேடிக்கொண்டு வருகின்றார்கள்.
யுவராஜ் சிங் அவர்களை ஏதேனும் ஓர் அணி விலைகொடுத்து வாங்கினால், நிச்சயம் Big Bash தொடரில் அவர் விளையாடுவதை கண்டுக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, Big Bash தொடரில் பங்குபெறவுள்ள முதல் இந்திய கிரிக்கெட் வீரராகவும், பெயர் வாங்குவார்.
இவ்வாண்டின் Big Bash தொடர், டிசம்பர் மாதம் 3ம் தேதியன்று துவக்கம் பெற்று, 2021ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21ம் தேதியன்று நிறைவு பெரும். 15 கிரிக்கெட் மைதானங்களில், பார்வையாளர்கள் ஏதுமில்லாமல் நடைபெறும்.
ஆதலால், யுவராஜ் சிங் அனைவரிடம் கூறுவது, " வந்தா, ராஜாவாதான் வருவேன். அப்டி ராஜாவா வந்தா, ராஜாவுக்கு நூறு தோஸ்து"
Comments
Post a Comment