2021 விஜய் ஹசாரே தொடர் - தமிழ்நாட்டின் அணி
நாம் அனைவரும் அறிந்தவாறு, இம்மாத 18ம் தேதியன்று, விஜய் ஹசாரே தொடர் துவக்கம் பெரும். தற்போது நடைபெற்று நிறைவடைந்த சையத் முஷ்டாக் அலி தொடரை போன்றே தான் இத்தொடரும் அமையும். அதே பாதுகாப்பு முறைகள், அதே விதிகள். சையத் முஷ்டாக் அலி தொடரை போன்று, இதிலும் தமிழ்நாட்டின் கிரிக்கெட் அணியானது, இளம் வீரர்களையும் அனுபவமிக்க வீரர்களையும் கலந்தவாறு அமைந்துள்ளது.
சையத் முஷ்டாக் அலி தொடரைப்போன்று, இத்தொடரில் 38 அணிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த 38 அணிகளை 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு, போட்டியமைக்கப்பட்டு, அவற்றிலிருந்து குழுவுக்கு 1 அல்லது 2 அணிகளை நாக்கவுட்சுற்றுக்கு தேர்வு செய்வர். அதில் வெற்றிகளை கண்டுகொள்ளும் அணியானது, இறுதி சுற்றுக்கு தகுதி பெரும். அந்த இறுதி சுற்றை வெல்லும் அணியே, சாம்பியன் அணியாக அறிவிக்கப்படும்.
விஜய் ஹசாரே தொடருடன் இணைந்து, மகளிர் உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரும் நடைபெறும். அவற்றுக்கும் ஒரே விதிமுறைகள். வேறுபாடு யாதெனில், மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு 37 அணிகள் பங்குபெறும் ( 1 அணி குறைவு )
தற்போது தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கமானது, தாங்கள் பங்குபெறவிருக்கும் அணியை அறிவித்துள்ளது. அதன் அணிவகுப்பு : தினேஷ் கார்த்திக் (c), பாபா அபராஜித் (vc), பாபா இந்திரஜித், K. B. அருண் கார்த்திக், C. ஹரி நிஷாந்த், M. ஷாருக்கான், N. ஜெகதீசன், L. சூர்யப்ரகாஷ், M. கௌஷிக் காந்தி, J. கௌசிக், M. அஷ்வின், R. சாய் கிஷோர், M. சித்தார்த், R. சோனு யாதவ், K. விக்னேஷ், T. நடராஜன், A. அஸ்வின் கிரிஸ்ட், பிரதோஷ் ரஞ்சன் பால், G. பெரியசாமி, M. முகமத்
தற்போது, நிறைவடைந்த இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான தொடரில், நடராஜன் அவர்கள், தமிழகத்தின் பெருமையை உலகிற்கு கொண்டு சென்றுள்ளார். மிகவும் சிறப்பான பந்துவீச்சினை நிகழ்த்தியுள்ளார். அவரின் பங்கேற்பு, அணியினுள் இருக்கும் பல இளம் வீரர்களுக்கு ஓர் உத்வேகமாய் அமையும்.
அவரோடு, தினேஷ் கார்த்திக் பல கால அனுபவம், உள்நாட்டு கிரிக்கெட்டில் பாபா அபராஜித், அருண் கார்த்திக், அஸ்வின் கிறிஸ்ட் போன்றோர் நிகழ்த்திவரும் ஆதிக்கம், இளம் தலைமுறையினருக்கு நிச்சயம் வழிகாட்டும்.
சையத் முஷ்டாக் அலி தொடரின் கோப்பையை தட்டிச்சென்றவாறு, விஜய் ஹசாரே தொடரின் கோப்பையையும் தமிழகத்துக்கு அள்ளித்தர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
Comments
Post a Comment