2020/21 Syed Mushtaq Ali Trophy - TN Squad செய்திகள்
இவ்வாண்டின், Syed Mushtaq Ali Trophy தொடர், வருகின்ற ஜனவரி மாதம், 10ம் தேதியன்று துவக்கம் பெற்று 31ம் தேதியன்று நிறைவு பெரும். இத்தொடரை நடத்த 6 மாநகரங்களை தேர்வு செய்தார்கள். அவற்றை தொடர்ந்து, இவ்வாண்டின் சார்பாக வேறு எந்த ஒரு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவாது என்பதும் நாம் அறிந்ததே. ஆனால், தற்போது தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கமானது, இத்தொடரில் பங்குபெறவிருக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளார்கள்.
6 குழுவாக பிரிக்கப்பட்ட அணிகளில், Elite Group B எனும் குழுவை சேர்ந்த அணியாக தமிழ்நாடு களமிறங்கவிருக்கும் நிலையில், இவர்களுடைய அனைத்து போட்டிகளும், கொல்கத்தாவில் உள்ள Eden Garden மைதானத்தில் நடைபெறும். சமீபத்தில் வெளியான தகவல் யாதெனில், தமிழக வீரரான முரளி விஜய் அவர்கள், தனிப்பட்ட காரணங்களால்
விலகியுள்ளார். அவரைத்தொடர்ந்து தமிழ்நாடு அணியின், வேகப்பந்து வீச்சாளரான K Vignesh அவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விளக்கியுள்ளார்
விலகியுள்ளார். அவரைத்தொடர்ந்து தமிழ்நாடு அணியின், வேகப்பந்து வீச்சாளரான K Vignesh அவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விளக்கியுள்ளார்
K Vignesh அவர்களுக்கு மாற்றாக இளம் வீரரான R S Jaganath Srinivas அவர்களை நியமித்துள்ளார்கள். இம்முறை, ரவிச்சந்திரன் அஷ்வின், நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் களமிறங்கியுள்ளதால், இங்கு பங்குபெற இயலாது.
இதெல்லாம் சரி தான், இந்த ஆண்டு, யாருடைய தலைமையில், தமிழகம் களமிறங்கவுள்ளது. சென்ற முறையை போன்று, இம்முறையும் தினேஷ் கார்த்திக் அவர்களின் தலைமையில் தான், தமிழகம் களமிறங்குகிறது. அவருடன், துணை தலைவராக, விஜய் ஷங்கர் அவர்கள் பணியாற்றவுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு பிறகு, அஸ்வின் கிறிஸ்ட் அவர்கள், மீண்டும் தமிழ்நாடு அணியினுள் களமிறங்கவுள்ளார். சந்தீப் வாரியர் அவர்கள் கேரளா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு, மாற்றியுள்ளார். ஆதலால், அவரும் தமிழ்நாட்டின் சார்பாக விளையாடுவார்.
அணியின் தேர்வாளரான திரு. வாசுதேவன் அவர்கள் கூறியது, "இந்த முறை களமிறங்கும் அணியானது, அனுபவமும் இளம் ரத்தங்களும் கலந்தவாறு அமைந்த ஓர் அணியாகும்."
தமிழ்நாடு அணி - தினேஷ் கார்த்திக் ( C ), விஜய் ஷங்கர் ( VC ), நாராயண் ஜெகதீசன், பாபா அபராஜித், பாபா இந்திரஜித், சாய் கிஷோர், M ஷாருக்கான், C ஹரி நிஷாந்த், KB அருண் கார்த்திக், பிரதோஷ் ரஞ்சன் பால், அஸ்வின் கிறிஸ்ட், M மொஹம்மத், G பெரியசாமி, சந்தீப் வாரீயர், J கௌஷிக், R சோனு யாதவ், முருகன் அஷ்வின், மணிமாறன் சித்தார்த், L சூர்யப்ரகாஷ், R S ஜெகன்னாத் ஸ்ரீனிவாஸ்.
சென்ற ஆண்டு, இறுதி போட்டி வரை அடைந்து அங்கு தோல்வியை கண்டதால், கோப்பையை தட்டி செல்ல இயலவில்லை. இம்முறை கோப்பையை கைப்பற்றுமா ?
தமிழ்நாட்டின் அணியானது, ஜனவரி மாதம் 2ம் தேதியன்று, கொல்கத்தாவுக்கு புறப்பட உள்ளது என தகவல்.
Comments
Post a Comment