டபுள் பிறந்த நாள்

ஏப்ரல் 1

ஸ்டீஃபென் ஃபிளெமிங் - ஏப்ரல் 1, 1973.  நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் ஊரினை சேர்ந்தவர் இவர். ஓர் அருமையான இடது கை பேட்ஸ்மேன். ஃப்லிக் ஷாட் மற்றும் புல் ஷாட் ரெண்டுலயும் வித்தைக்காரன். கிரிக்கெட் உலகத்துல சிறந்த சில கேப்டன்ஸ்'னு ஒரு பட்டியல் எடுத்தோம்னா அதுல இவரோட பெயர் நிச்சயம் இருக்கும். ஷேன் வார்ன், கிரேம் ஸ்வான் போல பல ப்லேயர்ஸ் இவரோட கேப்டன்ஸி டெக்கினிக்க பாராட்டிருக்காங்க. ஒன் டே கிரிக்கெட்'ல 8037, டெஸ்ட் கிரிக்கெட்ல 7,172 ரன்கள் அடிச்சிருக்காரு. இவர், ரிக்கி பொன்டிங், கங்குலி காலத்துல ரொம்ப பெயர் வாங்குன கேப்டன். இவர் மேல நெறய குறை வந்திருக்கு, 50-100 கன்வெர்ட் பண்றதுல ரொம்ப கஷ்ட படறாருனு. ஆனா அதை எல்லாம் இவர் தவுடுபுடி ஆகிட்டாரு. 2008ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளேயரா உள்ள வந்தாரு. அதுக்கு அடுத்த வருஷம் கோச் ஆகிட்டாரு. சென்னை அணி ரசிகர்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும். 2007ல கிரிக்கெட்'ல ரிடயர்மண்ட் அனௌன்ஸ் பண்ணாரு.

முரளி விஜய் - ஏப்ரல் 1, 1984. சென்னையை சேர்ந்த இந்திய கிரிக்கெட்டர். பதினேழு வயசுல வீட்டை விட்டு வெளிய வந்து, பில்லியர்ட்ஸ் கிளப்'ல வேல பாத்துட்டு டொமெஸ்டிக் கிரிக்கெட் ஆடிட்டு இருந்தாரு. ரொம்ப வருஷம், ரஞ்சி, ஃபர்ஸ்ட்  கிளாஸ் கிரிக்கெட்'ல தன்னோட வாழ்க்கை ஓடிச்சு. 2008ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை எடுத்தாங்க. அங்க தன் இவரோட வாழ்க்கைல திருப்பு முனையினே சொல்லலாம். அதுல சிறப்ப ஆடியது நாலஇந்தியா கிரிக்கெட் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியில செலெக்ட் ஆனார். அதுல சரியா விளையாடல, ஆனா 2012ல டெஸ்ட் கிரிக்கெட் அணி'ல செலக்ட் ஆனார். 7 வருஷம் டெஸ்ட் கிரிக்கெட் அணியில முக்கிய ஒப்பனரா இருந்தாரு. நிறைய பேர் CSK  குயோட்டா னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா பின்னாடி இவரோட டெஸ்ட்'ல விளையாடின ஆட்டத்த பாத்துட்டு ஏத்துக்கிட்டாங்க. 61 மேட்சஸ்'ல 4000 ரன்கள் கிட்ட அடிச்சிருக்காரு. 

ஸ்டீஃபென் ஃபிளெமிங் மற்றும் முரளி விஜய். ரெண்டு பேரும் சென்னை அணியில ஒண்ணா இருந்தாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை இது தான். 

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?