Syed Mushtaq Ali Trophy செய்திகள்

இவ்வாண்டு, Syed Mushtaq Ali Trophy எனும் உள்நாட்டு தொடர் நிச்சயம் நடைபெறும் எனவும் வேறு எந்த உள்நாட்டு போட்டிகளும் நடைபெறாது எனவும் முன்பே அறிவிப்புகள் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது இந்த தொடர் எங்கே நடைபெறும், ஒவ்வொரு Groupபிலும் எந்தெந்த மாநிலங்கள் இடம் பெற்றுள்ளது என்பதை பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா, இந்தோர் மற்றும் வடோடரா ஆகிய ஆறு நகரங்களில், பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடத்தப்படும்.

இதில் பங்கேற்கும் மாநிலங்களை 6 குழுவாக பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு நகரம் என வகுத்து உள்ளார்கள். 

Elite A - இதில் உள்ள அனைத்து போட்டிகளும் Bangaloreல் நடைபெறும். Jammu and Kashmir, Karnataka, Punjab, Uttar Pradesh, Railways, Tripura ஆகிய மாநிலங்கள் இந்த குழுவினுள் இடம்பெற்றுள்ளது. 

Elite B - இதில் உள்ள போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெறும். இங்கு Odisha, Bengal, Jharkhand, Tamil Nadu, Assam மற்றும் Hyderabad ஆகிய மாநிலங்கள் அடங்கும். 

Elite C - வடோடரா'வில் நடைபெறும் அனைத்து போட்டிகளில் Gujarat, Maharashtra, Chhattisgarh, Himachal Pradesh, Baroda மற்றும் Uttarakhand ஆகிய மாநிலங்கள் இடம்பெறும்.

Elite D - Services, Saurashtra, Vidharbha, Rajasthan, Madhya Pradesh மற்றும் Goa ஆகிய மாநிலங்கள் இடம்பெறும் இந்த Groupல் உள்ள அனைத்து போட்டிகளும் Indoreல் நடைபெறும். 

Elite E - மும்பையை மைதானமாக தேர்வு செய்யப்பட்ட இந்த குழுவில் Haryana, Andhra Pradesh, Mumbai, Delhi, Kerala மற்றும் Pudhucherry ஆகிய மாநில அணிகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெறும்.

Plate Group - சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த குழுவில் Chandigarh, Meghalaya, Bihar, Nagaland, Manipur, Mizoram, Sikkim மற்றும் Arunachal Pradesh ஆகிய எட்டு மாநிலங்கள் அடங்கும்.

கொரோனா நோயின் காரணமாக, வெறும் ஆறு நகரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பதற்கு எந்த ஒரு Guarantee'யும் இல்லை.

ஆனால், அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் IPL தொடருக்கான அணிகளில், இந்த இளம் இரத்தங்கள் இடம்பெற வேண்டுமெனில், இந்த Syed Mushtaq Ali Trophy தொடரில் நன்கு விளையாட வேண்டும். தங்களின் முழு வீச்சினை வெளிக்காட்ட வேண்டும். 

இதன் Knockout போட்டிகள், Ahmedabadல் புதுப்பிக்கப்பட்ட மொடேரா மைதானத்தில் தான் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. 

இத்தொடர் 10ம் ஜனவரி அன்று துவங்கி 31ம் ஜனவரி அன்று நிறைவு பெறும்.

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?