Two Matches | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, ரெண்டு matches நடந்துச்சு. அந்த ரெண்டு matchesல, நடந்த turning point situations பத்தி தான் இந்த blog'ல நாம பார்க்க போறோம். மொதல்ல, பெங்களூரும் ராஜஸ்தானுக்கு, Abu Dhabiல மோதுறாங்க. இந்த matchல, ராஜஸ்தான் toss ஜெயிச்சு, batting choose பன்றாங்க. ஆனா, அதுக்கு ஏத்த அளவுக்கு top order perform பண்ணல. ஆனா, மஹிபால் லோம்ரோர் இடையில, தனியாளா, ஒரு தூணு மாதிரி நின்னு 47 runs அடிச்சாரு. அவருக்கு அடுத்து தேவாதியாவும் ஆர்ச்சரும் அடிச்சு முடிச்சாங்க. 154/6னு ஒரு decent score அடிக்கிறாங்க. Still, அந்த score பத்தலை. அதுக்கு அடுத்து வழக்கம் போல, தேவ்துட் படிக்கல் செமயான start கொடுக்குறாரு. அதோட சேர்ந்து, Virat Kohli ஒரு முக்கியமான 50 அடிச்சு, match'அ ஜெயிச்சு கொடுத்தாரு.
இந்த matchஓட Post Match Analysis videoகு - https://www.youtube.com/watch?v=quKCFWhuVJo click பண்ணுங்க
ஆனா இந்த matchல உண்மையான turning point, RCBயோட spinners தான். Pitchல ball batகு நெனச்சத விட மெதுவா வருதுங்கிற விஷயத்தை புரிஞ்சிகிட்டு, மொள்ள வீசுனாங்க. இங்க Washington Sundar மற்றும் Yuzvendra Chahal வீசுன overs தான் உண்மையான turning point.
இதுக்கு அடுத்து, டெல்லியும் கொல்கத்தாவும் மோதுறாங்க. இந்த வாட்டி, Sharjahவுல. இதுல டெல்லி பொறுமையா ஆரம்பிச்சு அதுக்கு அப்பறோம் சரவெடியா முடிக்குறாங்க. கொல்கத்தாவை பொறுத்த வரைக்கும், ஆரம்பத்துல ஏகப்பட்ட wickets விட்டாலும், பின்னாடி Morgan மற்றும் Tripathi போராடுனாங்க. ஆனா, targetஅ reach பண்ண முடியாம, 18 runs வித்தியாசத்துல தோத்து போறாங்க.
இந்த matchஓட Post Match Analysis videoகு - https://www.youtube.com/watch?v=HDHcEAGMusQ click பண்ணுங்க
இந்த matchஓட turning point, ஷ்ரேயஸ் ஐயரோட aggressive knock தான், பிரிச்சு மேஞ்சாறு. அவரு கிட்ட இருந்து வந்த அந்த extra added runs, 228கு டெல்லியை கொண்டு போயி விட்டுச்சு.
இன்னிக்கி நடக்கப்போற match'ஓட Pre Match Analysis videos, என்னோட YouTube idல post பண்ணியிருக்கேன். அதோட links, கீழ post பண்ணிக்கிறேன்.
MI vs SRH, Pre Match Analysis - https://www.youtube.com/watch?v=IyOyc3CaOH4
CSK vs KXIP, Pre Match Analysis - https://www.youtube.com/watch?v=Bzz5Fgn3u78
Comments
Post a Comment