RR vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment


ராஜஸ்தானுக்கும், பஞ்சாபுக்கும் நடுவுல நேத்து match நடந்துச்சு. ரெண்டு பேருக்குமே இது do or die match தான். என்னதான் பஞ்சாப் தோத்து, அதையும் மீறி outside chance இருந்தாலும், அதா வெச்சு உள்ள வரணும்னா net run rate ரொம்பவே அவசியம். இன்னொரு பக்கம், ராஜஸ்தான் தோக்குறத பத்தி யோசிக்கவே கூடாது. Toss ஜெயிச்ச RR, முதல்ல fielding choose பன்றாங்க. Gayle அடிச்ச அடியினால 185/4னு நல்ல score அடிக்கிறாங்க. இருந்தாலும், சமீபத்துல dew வந்து வேலை செய்யுறது காரணத்துனால, இந்த score லாம் பத்தலையோன்னு ஒரு feeling இருந்துச்சு. அந்த நெனப்புக்கு ஏத்த மாதிரி, RR திரும்ப batting பண்ணி, உக்கிரமா chase பன்றாங்க. 

இந்த match'ஓட Post Match Analysis videoCric_Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க !

மதம் புடிச்ச யானை மாதிரி வெறிகொண்டு மேல வந்துக்கிட்டு இருந்த Punjab'அ, எப்படி அடக்கி சாச்சாங்க ? அதுவும் இல்லாம, RR'கிட்ட ஆரம்பத்துல இருந்த form, நடுல காணாமப்போயி அப்புறம் திரும்ப எப்படி பழைய form'அ கண்டுபிடிச்சாங்க ? இந்த மாதிரி இருக்குற எல்லா கேள்விகளுக்கும், இந்த blogல நான் answer பண்றேன்.

இந்த match'அ பொறுத்த வரைக்கும், RR கிட்ட ஒரு clear cut plan இருந்துச்சு. பஞ்சா'போட in-form bowling attackல யாரை பிரிக்கணும்னு ஒரு plan இருந்துச்சு. அதுல முதல் sketch'உ, முஹம்மத் ஷாமி'ய குறி வெச்சது. அதுக்கு அடுத்து, KXIPயோட ரெண்டு spinners'ஆன முருகன் அஷ்வின் மற்றும் ரவி பிஷ்ணோய்'ல யாரையாவது ஒருத்தர அடிக்க ஆரம்பிச்சது. work ஆச்சு. இது இல்லாம, KL Rahul'ஓட slow innings. மறுபடியும் மறுபடியும், strike rate'அ increase பண்ணுறதுல தடுமாறிட்டு இருக்காரு. இதெல்லாம் தான் பஞ்சாப்'கு தோல்வியை பரிசலிச்சுது.       

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?