உலக கிரிக்கெட்டில் சாதனை
ஐபிஎல் வரலாற்றில் இன்று
கிறிஸ்டோஃபர் ஹென்றி கெயில் பற்றி கிரிக்கெட் உலகில் அறியாதோர் எவரும் இலர். குறிப்பாக 20 ஓவர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, நன்றாகவே தெரியும். 20 ஓவர் கிரிக்கெட்டின் ராஜா என்றே இவரை அழைக்கலாம். அவ்வளவு சாதனைகளை, 20 ஓவர் கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளார். அனைத்து வகை 20 ஓவர் போட்டிகளை சேர்த்தால், இவர் மொத்தம் 22 சதங்களை பதித்துள்ளார். அதில் பல சாதனைகளான, அதிக சிக்ஸர்கள், விரைவாக, குறைந்த பந்துகளில் எடுக்கப்பட்ட சதம் என பலவுண்டு. இந்த நாள், எவ்வகையான சாதனையை நிகழ்த்தினார் என்பதை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
இந்நாள், 7 ஆண்டுகளுக்கு முன், ஐபிஎல் கிரிக்கெட்டில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் புனே வாரியர்ஸ் இந்தியா இடையே நடந்த லீக் போட்டி. டாஸ் வென்ற புனே முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. எனக்கு தெரிந்து அவர்கள் செய்த மிகப்பெரிய குற்றம் இதுவே ஆகும். (தவறு செய்தாயே குமாரே ). உள் நுழைவது கிறிஸ் கெயில் மற்றும் தில்ஷான். அதற்கு பிறகு, அப்போட்டியினை அலசுவதற்கு ஒன்றுமே இல்லை. வெறியாட்டம் தான். கிறிஸ் கெயிலின் ருத்ரதாண்டவம். யார் பந்து வீசினாலும் சிக்ஸர் தான். பௌண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் புயலுடன் சேர்ந்த மழையாக சின்னசாமி மைதானம் முழுக்க பொழிந்தது. வெறும் 30 பந்துகளில் சதத்தினை அடைந்தார் கிறிஸ் கெயில். இறுதியில் 66 பந்துகளில் 175 ரன்கள்( தனிப்பட்ட முறையில்)அடித்து, ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணியின் இறுதி ஸ்கோர் - 263/5, என்கிற உச்சகட்டமான இலக்கினை அடைந்தார்கள். பந்துவீச்சாளர்கள் அவ்வடியிலிருந்து மீளவே பல காலம் ஆகியிருக்கும். அன்று பந்துவீச்சாளர்களை தாண்டி, அணியின் மற்ற வீரர்கள் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். அதன் காரணமாக அவர்கள் மீண்டும் பேட்டிங்கில் மீளவே முடியவில்லை. அதன் காரணமாக 20 ஓவர் முடிவில், 136/9 என்கிற குறைந்த ஸ்கோரில் சுருண்டனர். மனது பாதித்தால், அதிலிருந்து மீளுவது மிகவும் கடினம். அந்த 175*, உலகில் உள்ள அணைத்து வகையான 20 ஓவர் போட்டியில் உச்சகட்ட ரங்களாக அமைந்தது. மற்றும் வெகு விரைவாக அடிக்கப்பட்ட சாதங்களின் பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளது.
கிறிஸ் கெயில் எனும் அரக்கன் சினம்கொண்டால், விளைவு எதிரணியின் திண்டாட்டம். அந்த இன்னிங்சில் 13 பௌண்டரிகள் மற்றும் 17 சிஸேர்கள் கிறிஸ் கையில் மட்டுமே அடித்துள்ளார். ஆட்ட நாயகன் விருதினை சென்றது- இதை நான் தனியாகவே கூறவேண்டுமா, வாசகர்களாகிய உங்களுக்கே புரிந்திருக்கும் - கிறிஸ் கெயில் தான். கிறிஸ் கெயில் செய்த சாதனை, கண்டிப்பாக பின் வரும் காலங்களில் எவராவது முறியடிக்கலாம், ஆனால் இவர் அமைத்த அடித்தளம், பலருக்கு ஓர் முன்னோடியாக திகழும். கிரிக்கெட்டில் மக்களால் வரவேற்கப்பட்ட ஓர் முறையில், இவ்வாறும் விளையாட முடியும் !!!!
Comments
Post a Comment