ஐந்தாவது ஐபிஎல் அணி

இவ்வணியைபற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு டீனேஜில் இருக்கும் சிறுவர்களை போல் தான். சரி எது, தவறு எது என்று தெரியாமல், செய்யும் செயல்களில் தவறு ஏற்படும். அது மட்டுமின்றி, பார்க்கும் விஷயங்களில் மேல், ஆசை கொள்வதும் தான் மற்றும் ஓர் பக்குவமின்றி செயல்படுவது, அவசரத்தினால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் இக்காலத்தில் கிடைக்கும் அனுபவங்கள் மிகவும் கசப்பானவையாக அமையும். இன்னொன்னு டீனேஜின் வாழ்க்கையினை தவிர்த்து, நம் வாழ்க்கையில் சில மனிதர்களை பாத்திருப்போம், தங்கள் மேற்கொள்ளும் செயல்களில் ஆரம்பம் மிகவும் அருமையாக இருக்கும் ஆனால் பின்னர் வருகின்ற தடைகள் மற்றும் இன்னல்களை பெரிய செய்ய தெரியாமல், சிக்கி தவித்து, சொதப்பலாகிவிடும். இவ்விரண்டும் நான் குறிப்பிடுகின்ற அணி வேறு எதுவும் இல்லை, கிங்ஸ் 11 பஞ்சாப் அணி.

முதலாம் ஐபிஎல் தொடரில் மற்றும் 2014ம் ஆண்டில் மட்டுமே, இவ்வணியினால் அடுத்த சுற்றினை அடைய முடிந்தது. மற்ற அணைத்து ஆண்டுகளிலும் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும், ஆனால் பின்னர் மிகவும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். குறிப்பாக 2011, 2013, 2017, 2018, 2019 என்கிற ஐந்து ஆண்டுகளில் இவர்கள் நிச்சயமாக தகுதி பெற்றுவிடுவார்கள் என அனைவரும் நினைத்தார்கள். ஆனால் அணைத்து எதிர்பார்ப்பும் வீண். ஏலத்தில் இவர்களின் யுக்தி, வருகின்ற அணைத்து வீரர்களையும் வாங்கிவிட வேண்டும், என்கிற எண்ணம். சரியான எண்ணம் இல்லாததே இவ்வணியின் பிரச்சனை. ஆனால், 2014ம் ஆண்டில் இவர்கள் வெளிப்படுத்திய ஆட்டம், அவ்வாட்டத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் இவ்வணியினை பாராட்டலாம். 

இப்பொழுது நான் ஏன் இவ்வணியினை டீனேஜ் சிறுவர்கள் போல் என்று கூறினேன் என்பது இப்பொழுது புரிந்திருக்கும். ஆனால், அவ்வாறு கசப்பான அனுபவங்கள், அச்சிறுவனை மிகவும் வலிமையாக செதுக்கும். பின்,  தன்னுடைய வாழ்வில் மிகவும் வெற்றிபெற்றவனாக திகழ்வான். ஆனால் இவ்வாறு அவர்களை கூறினாலும், திருத்திக்கொள்ள வேண்டியது, தங்கள் அணியின் வெளிநாட்டு வீரர்களை, சரி பார்த்து தேர்வு செய்வது. தங்கள் அணியினுள், அனுபவம் வாய்ந்த வீரர்களை ஒழுங்காக தேர்வு செய்வது. இப்பொழுது இருக்கின்ற அணி, பலம் வாய்ந்ததா உள்ளது ஆனால், தங்கள் மன அழுத்தத்தினை நன்றாக கையாள வேண்டும். அதற்கு, அணியினை சேர்ந்த பயிற்சியாளர்கள், துணை புரிந்து, இனைந்து  வீரர்களை பக்குவப்படுத்தி தொடருக்கு தயார் செய்ய வேண்டும். எளிமையாக கூற வேண்டும் என்றால், இத்தயாரிப்பில் தான் இதனை ஆண்டுகளாக ஒழுங்கா செய்யவில்லை. இனி வரும் காலங்களில், இத்தவரினை சரிசெய்வர் என்று இனி வரும் காலாங்கில் பார்ப்போம்...........     

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt