BCCIயின் ஆலோசனை குழு - Jan 17
தற்போது, இந்தியாவின் உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட் தொடரான, Syed Mushtaq Ali தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்திய சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, இந்த ஆண்டின் ரஞ்சி தொடரையும், நடத்தவேண்டும் என்கிற முடிவில் ஆணித்தரமாக உள்ளார்கள். அதனைக்குறித்தும், பிற்காலத்தில் நடைபெறவிருக்கும் பல கிரிக்கெட் தொடர்கள் குறித்தும் விவாதிக்க, வருகின்ற 17ன் தேதியன்று, ஓர் ஆலோசனை குழு நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
இந்தியாவின் தலைசிறந்த உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான, ரஞ்சி தொடர், கொரோனா நோயின் காரணத்தினால், தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயின் காரணத்தினால் தான், இவ்வாண்டு நடைபெறவிருந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரும் மற்றும் துலீப் கோப்பை தொடரும், நடைபெறாமல் வெளியானது. சையத் முஷ்டாக் அலி தொடரை முதலில் நடத்தவேண்டும், என்பதன் முக்கிய காரணம், இதனை மிக விரைவில் நடத்தி முடித்துவிடலாம் என்பதும், IPL தொடருக்காக ஒவ்வொரு அணிகள் தேர்வு செய்ய எதுவாக அமையும் என்பதற்காகவும் தான்.
ரஞ்சி தொடர் நடைபெறாமல், ஒரு ஆண்டும் இதுவரை இருந்ததில்லை. ஆதலால், ரஞ்சி தொடரை, வருகின்ற பிப்ரவரி மாதம், நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதன், அதிகார அறிவிப்பை, வருகின்ற 17ம் தேதியன்று, நடைபெறவிருக்கும் ஆலோசனை குழுவிற்கு பிறகு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப்பற்றி மட்டும் அல்லாது மேலும் சில விஷயங்களை விவாதிக்கவே, இந்த ஆலோசனைக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. அவை,
1. ICC வெளியிட்ட 2023-31 வரையிலுள்ள Future Tours Programme ( FTP ) ( பிற்கால சுற்றுப்பயணங்கள் திட்டம்) அடிப்படையில், அடுத்த ஆண்டு 10 அணிகளைக்கொண்ட IPL தொடர் நடைபெறவிருக்கிறது. 10 அணிகளைக் கொண்டு நடத்தவேண்டுமெனில், குறைந்தது 2 முழு மாத காலம் இடைவெளி வேண்டும். அந்த 2 மாத இடைவெளிக்கு, அனைத்து சர்வதேச கிரிக்கெட் அணிகளும் கட்டுப்பட்டு, தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்குவதற்கு, ஓர் ஆலோசனை.
2. 2021ம் ஆண்டின் இறுதியில், 20 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இத்தொடர் நடைபெறுவதற்கு முன்பு, வரியை விலக்க வேண்டும் என்று ICC அறிவித்துள்ளது. அதற்கு, இந்திய மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. ஆகையால், இதனைக்குறித்து கலந்துரையாட வேண்டும்
3. பெங்களுருவில் உள்ள National Cricket Academyல் மேலும் சில வேலையாட்களை நியமிக்க வேண்டும்.
4. பீகாரின் கிரிக்கெட் வாரியத்திற்குள் மேலும் சில பிரச்சனைகள் நிலவிக்கொண்டு வருகிறது. அதை சரி செய்ய வேண்டும்.
5. மும்பையில் உள்ள BCCIயின் அலுவலகத்தில், மேலும் சில பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
6. 2020-21ல் இருந்து நடைபெறவிருக்கும், உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களைப்பற்றியும் கலந்துரையாட வேண்டும்.
இவையில்லாமல், இவ்வாண்டு இந்திய கிரிக்கெட்டின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதிலிருந்து, நாம் கண்டறிவது ஒரு செய்தி தான். ஒரு நாள் கிரிக்கெட்டின் அழிவு காலம் ஆரம்பமாகியுள்ளது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளும் அதிகரித்துக்கொண்டிருக்க, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
இதற்கு ஒருபுறம் தெரிவிக்கும் கருத்து யாதெனில், ICC ODI Super Leagueல் 8 தொடர்களை 3 ஆண்டு காலத்திற்குள் நடத்த வேண்டும். அதனால், ஒரு தொடருக்கு 3 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே விளையாடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, தான் 8 கிரிக்கெட் தொடர்களை, நடத்தி முடிக்கவியலும். இனி, எப்போது தான் 5 ஒரு நாள் போட்டிகளைக்கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு என்னிடம் நிரம்பவே காணப்படுகிறது. காலம் தான் பதில் கூறவேண்டும்.
Comments
Post a Comment