IPL 2021 செய்திகள் !

சென்ற மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில், 2021ம் ஆண்டு IPL தொடர், 8 அணிகளை வைத்தே நடைபெறும் எனவும், 2022ம் ஆண்டில் தான் கூடுதலாக 2 அணிகளை நியமிப்பார்கள் எனவும், IPL நிர்வாக சபை முடிவெடுத்துள்ளது. அதற்கு ஓர் முக்கிய காரணம், குறுகிய காலகட்டத்தில், Mega ஏலம் எனும் ஓர் மாபெரும் நிகழ்வை நடத்துதல் சாத்தியமற்றதாகும். இதனை தொடர்ந்து, வழக்கமாக நடைபெறும் Mini ஏலம் குறித்தும், IPL தொடரானது, இவ்வாண்டு எங்கு நடைபெறும் என்பதை குறித்தும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இவ்வாண்டின் IPL தொடரானது, இந்தியாவில் தான் பெரும்பாலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா நோயானது, விஸ்வரூபம் எடுத்து அச்சுறுத்தினால், சென்ற ஆண்டினை போன்று, இவ்வாண்டும் ஐக்கிய அரபு நாடுகளில் (UAE) நடைபெரும்வாறு மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, வழக்கமாக நடைபெறும் Mini ஏலம் குறித்து, IPLலின் நிர்வாக சபை தெரிவித்தது யாதெனில், "அணிகளுக்கு மத்தியில் வீரர்களை வாங்கி, விற்பதற்கும் (player trading) மற்றும், தேவையற்ற வீரர்களை வெளியேற்றுவதற்கும், ஜனவரி 21ம் தேதி தான் கடைசி நாள்". ஆகையால், mini ஏலம், பிப்ரவரி மாத காலகட்டத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த நகரில் mini ஏலம் நடைபெறும் ? எந்த நாள் நடைபெறும் ? என்பதை குறித்த தகவல்கள், இனி வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம். 

இவ்வாண்டின் சையத் முஷ்டாக் அலி தொடரானது, எவ்வாறு நடைபெற்று முடிவடைகிறதோ, அதனை மையமாக கொண்டு தான், இவ்வண்டின் IPL தொடரின், தலையெழுத்து முடிவெடுக்கப்படும். 

2021ம் ஆண்டின் IPL மற்றும் இங்கிலாந்து - இந்தியா கிரிக்கெட் தொடர், ஆகிய இரண்டினை 50 % பார்வையாளர்களுடன் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக, கூறப்படுகிறது. இது நடைபெறும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். அதன் முக்கிய காரணம், இவ்வாண்டின் இறுதியில் நடைபெறவிருக்கும், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை

  

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?