ICC செய்திகள்
தற்போது, ICC கிரிக்கெட் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அவ்வறிவிப்பில் வெளியான செய்தி, " 2021ம் ஆண்டில் அட்டவணை செய்யப்பட்டுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை தொடர், நினைத்தவாறு இந்தியாவில் நடைபெறும் " என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வப்போது, 2020ம் ஆண்டில் நடக்கவிருந்த தள்ளிவைக்கப்பட்ட 20 ஓவர் உலகக்கோப்பை தொடரானது, 2022ம் ஆண்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் எளிமையாய் கூறினால், 2022ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை, ஆஸ்திரேலியாவில் நடைபெறும்.
முழு நிகழ்வுகளையும் கண்டோமேனில், இவ்வறிவிப்பின் பின்னலை நாம் புரிந்துக்கொள்ளலாம். 2020ம் ஆண்டில், ஆஸ்திரேலியா நாட்டில், 20 ஓவர் உலகக்கோப்பை நடைபெறவுள்ளதாக, முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், உலகினையே கட்டுக்குள் வைத்து ஆண்டுக்கொண்டிருக்கும் கொரோனா எனும் கொடிய நோயின் வலையில் சிக்காமல், பாதுகாத்துக்கொள்ள, ICCயின் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் இனைந்து ஓர் முடிவெடுக்கின்றார்கள். இவ்வாண்டு, ஜூலை மாத காலத்தில், அந்த முடிவினை வெளியிடுகின்றார்கள். அந்த முடிவு, " இவ்வாண்டின் 20 ஓவர் உலகக்கோப்பையை நாங்கள் தள்ளிவைக்கிறோம். கூடுதலாய், 2021ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2023ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடர்களை, அவ்வண்டுகளில் உள்ள அக்டோபர் மற்றும் நவம்பர் மாதகாலங்களுக்கு நாங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்", என வெளியிட்டார்கள். அப்போது, 2021ம் ஆண்டில் நடக்கவுள்ள மகளிர் உலககோப்பை தொடரை பற்றிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால், இப்போது, அதற்கும் ஓர் தீர்வும் வெளிவந்துள்ளார்கள்.
ஆகையால், 2021ம் ஆண்டின் உலகக்கோப்பை நினைத்தவாறு இந்தியாவில் நடைபெறும். 2022ம் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறும். 2021ம் ஆண்டின் மகளிர் உலகக்ப்ப்பை தொடரை, 2022ம் ஆண்டுக்கு நாங்கள் தள்ளிவைக்கின்றோம், என்கிற அறிவிப்புடன் வெளிவந்தது. இதற்கு, காரணத்தை அறிய முயர்ந்த தருணத்தில், அவர்கள் கூறியவை " தகுதி சுற்றின் காலத்தை மேலும் அதிகரிக்க, இவ்வாறு ஒரு திட்டம். கொரோனா எனும் நோயின் இடையூறால், பல போட்டிகள் தடைசெய்யப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்ய இவ்வாறு தேதிகளை ஒரு ஆண்டு காலத்திற்கு தள்ளிவைத்துள்ளோம்" என குறிப்பிட்டனர்.
அப்போது 2021ம் ஆண்டின், தகுதி சுற்றுகளை பற்றி என்ன கருத்து ?. 2020ம் ஆண்டிற்கென அமைக்கப்பட்ட தகுதி சுற்றும், அதில் தகுதி பெற்ற அணிகளும் மாற்றமின்றி 2021ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்குபெறுவர், என பதிகள் வெளிவந்தது. ஆகையால் 2022ம் ஆண்டின், 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு புது விதமான தகுதி சுற்றுகளும், விதிமுறைகளும் அமைக்கப்படும்.
மகளிர் உலகக்கோப்பை தொடருக்கு, மேலும் 3 அணிகள் தகுதி பெறவேண்டும். அதற்கென உள்ள தகுதி சுற்று போட்டிகளைப்பற்றி, மேலும் வரும் நாட்களில் அறிவிப்புகள் வெளியிடப்படும்.
Comments
Post a Comment