2021 இங்கிலாந்து - இந்தியா தொடர் செய்திகள் !!
இவ்வாண்டு, செப்டம்பர் மாதகாலத்தில், இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே நடக்கவிருந்த கிரிக்கெட் தொடர், கொரோனா நோயின் காரணத்தினால், 2021ம் அடுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இத்தொடர், நடைபெறுமா பெறாதா ?? என்கிற குழப்பங்களுடன் பலர் காத்திருக்க, " கண்டிப்பாக நடைபெறும் " என இந்திய கிரிக்கெட் வாரியம் பச்சை கோடி காட்டியுள்ளது. எப்போது நடைபெறும், எங்கே நடைபெறும் என்கிற கேள்விகள் பிறகு வெளிவர துவங்கியது. அதற்கு தற்போது பதில் அளிக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் அணி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், இத்தொடர் February மாதம் 3ம் தேதியன்று துவங்கி, மார்ச் மாதம் 28ம் தேதியன்று நிறைவு பெரும் என பதிவிடப்பட்டுள்ளது. இத்தொடரில், 4 டெஸ்ட் போட்டிகளும், 5 T20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் அடங்கும்.
இவற்றுள், மூன்று மைதானங்களை மட்டுமே தேர்வு செய்துள்ளார்கள். தமிழக ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சென்னை சேப்பாக்கத்தை அம்மூன்று மைதானங்களில் ஒன்றாக தேர்வு செய்துள்ளார்கள். அதோடு இணையாக, அகமதாபாத் நகரில் புதுப்பிக்கப்பட்ட, அதிக இருக்கைகளைக்கொண்ட Motera மைதானமும், புனே நகரில் உள்ள MCA கிரிக்கெட் மைதானமும் அடங்கும்.
ரசிகர்களை அனுமதிப்பார்களா ? என்கிற கேள்விக்கு தற்போது எவ்வித பதிலும் இல்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரை, இம்முறை 50 % ரசிகர்களுடன், போட்டிகளை நடத்த திட்டமிடுவர். இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று, கொரோனா நோயிற்கான மருந்தை தயாரிக்கிறது இந்திய அணி. மிக விரைவில், மக்களிடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், இனிமேல் கவலை இல்லை என ஒருபுறம் எண்ணினாலும், எப்போதும் வெளிவரும் என மருத்துவ துறையில் பணிபுரியோரை தவிர்த்து வேறு யாருக்கும் தெரியாது.
ஆனால், இரண்டாம் காரணம் யாதெனில், இவ்வாண்டின் இறுதியில், ICCயின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரை, இந்தியாவில் நடைபெறும். பார்வையாளர்கள் இல்லையெனில், இடமாற்றம் நடைபெறும், அஃதாவது, இந்தியாவிலிருந்து வேறு ஏதாவது நாட்டுக்கு மாற்றுவார்கள். அதை இந்தியா விரும்பாது. ஆதலால், எப்படியாவது பார்வையாளர்களை அமர்த்தி நடத்தவே விரும்புவர்.
சென்னை சேப்பாக்கத்தை என் தேர்ந்தெடுத்தார்கள் என கேள்வி எழுப்பினால், அதற்கான காரணம் இரண்டு தான். ஒன்று, ஊரடங்கை அறிவிப்பதற்கு சிறிது நாட்கள் முன்பு தான், சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள மூடப்பட்ட I, J மற்றும் K Standடுகளை மீண்டும் திறந்து வைத்தனர். அங்கு சில பார்வையாளர்களை அமர்த்தி நடத்த திட்டமாகவும் மற்றும் சென்னையில் உள்ள Pitch, டெஸ்ட் போட்டிகளுக்கு மிகவும் எதுவாக அமைந்திருக்கும்.
இதோடு இணையாக ஓர் செய்தி யாதெனில், அடுத்த ஆண்டின் IPL போட்டிகள், April மாதத்திலேயே துவக்கம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடர், நிறைவடையும் நாளானது 28ம் மார்ச். அங்கிருந்து, ஒன்றல்லது இரண்டு வாரங்களுக்குள் நடைபெற திட்டமிடுவர்.
சரி, இத்தொடரின் அட்டவணையை நாம் கண்டோமேனில்,
முதல் டெஸ்ட் : சென்னை, February 5-9
இரண்டாம் டெஸ்ட் : சென்னை, February 13-17
மூன்றாம் டெஸ்ட் ( பகலிரவு ) : அகமதாபாத், February 24-28
நான்காம் டெஸ்ட் : அகமதாபாத், March 4-8
இங்கிருந்து, 5 T20 போட்டிகள்
முதல் T20I : அகமதாபாத், March 12
இரண்டாம் T20I : அகமதாபாத், March 14
மூன்றாம் T20I : அகமதாபாத், March 16
நான்காம் T20I : அகமதாபாத், March 18
ஐந்தாம் T20I : அகமதாபாத், March 20
இறுதியாக 3 ஒரு நாள் போட்டிகள்
முதல் ODI : புனே, March 23
இரண்டாம் ODI : புனே, March 26
மூன்றாம் ODI : புனே, March 28
பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்கட்டும், இந்திய கிரிக்கெட் அணியையும், இந்திய ரசிகர்களையும் கைகளிலேயே பிடிக்கவியலாது. ஆயினும், உடல் ஆரோக்யம் மிகவும் அவசியம். ஏனெனில், கொரோனா நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை, இந்தியாவில் மட்டும் 1 கோடிக்கும் மேல் சென்றடைந்தது. அதில் இறந்தவர்கள் மட்டுமே 1, 41, 000 மக்கள் ஆகும். மருந்து வெளியாகியதும், சற்று நிம்மதியடையலாம்.
Comments
Post a Comment