2021 IND vs ENG - பார்வையாளர்களுக்கு அனுமதி !

முன்னதாக தெரிவிக்கப்பட்டது, சென்னையில் நடைபெறவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பது தான். ஆனால், நேற்று தமிழக அரசானது, ஊரடங்கை விலக்க 7ம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும், 50 % சதவீத பார்வையாளர்களோடு நடத்தலாம் எனும் செய்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் முதலில் அறிவித்தது யாதெனில், 50 சதவீத பார்வையாளர்களுடன் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடத்தலாம் என்பது தான். ஆயினும், தமிழ்நாட்டின் மாநில கிரிக்கெட் சங்கமானது ( TNCA ), பார்வையாளர்களின்றி போட்டிகளை நடத்த முடிவெடுத்துள்ளோம் என அறிவிப்பு வெளியிட்டது. ஆகையால், சென்னையில் நடக்கவிருந்த இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் டிக்கெட்டுகளை விற்பனையிடவில்லை.

அதன் பின் தான், தமிழக மாநில அரசானது, முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில், 50 சதவீத பார்வையாளர்களுடன், அனைத்து வெளிப்புற விளையாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்தலாம் என்பது தான். இந்த செய்தி வெளியானவுடன், தமிழக அரசு, இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாட்டின் மாநில கிரிக்கெட் சங்கம் ஆகிய மூவரும் கலந்துரையாடியது.

அவ்வாறு நடைபெற்ற கலந்துரையாடலின் பின் வெளியான தகவல் தான், இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கு, 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம், என்பதே ஆகும். முதல் டெஸ்ட் போட்டிக்கு, காலம் கடந்ததால், டிக்கெட்டுகளை விற்பனைக்கு விட இயலாது. ஆகையால், முதல் டெஸ்ட் போட்டி பார்வையாளர்களின்றி நடைபெறும் என்பதும், இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை குறித்து மேலும் சில நுணுக்கங்கள் வெளியாகியுள்ளது. சென்ற ஆண்டு தான், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்டிருந்த I, J மற்றும் K Standsகளை திறந்து வைத்துள்ளார்கள். அதன் பின்னரே, கொரோனா எனும் நோயின் பாதிப்பு அதிகரித்து, அணைத்து வித விளையாட்டு மற்றும் கூட்டுக்குழு நிகழ்ச்சிகள், முடக்கிவைக்கப்பட்டது. 

தற்போது, சென்னையில் போட்டி நடைபெறவிருப்பதால், அண்ணா பெவிலியன் Standஐ நாங்கள், பார்வையாளர்கள் அமர பயன்படுத்தமாட்டோம் எனும் அறிவிப்பு நுணுக்கம் வெளிவந்துள்ளது. கூடவே, I, J மற்றும் K ஆகிய மூன்று Standடுகள் திறக்கப்பட்டதால், 40,000 பார்வையாளர்கள் அமரவியலும். அவற்றுள் பாதியளவான 20,000 பார்வையாளர்களுக்கு இடம் பெறப்படும். இதில், அண்ணா பெவிலியனில் அனற அனுமதி இல்லையெனில், 15,000 மக்கள் அமர்ந்து போட்டியை காணவியலும். 

ஆகையால், பிப்ரவரி 13 முதல் 17ம் வரையிலுள்ள 5 நாட்களை உங்கள் நாட்காட்டியில் குறித்து விடுங்கள். பல நாள் காத்திருப்பு, இந்தியாவில் கிரிக்கெட் நடைபெறவுள்ளது. அதில், பார்வையாளர்களுடன் நடைபெறவுள்ளது. ஆயினும், பாதுகாப்பு சட்டங்களை கடைபிடியுங்கள், மகிழ்வோடு போட்டிகளை கண்டு திரும்புங்கள். இதுவே, அனைவரின் விருப்பமும்.

இதனோடு, தெரிவிக்கப்படும் மற்றோர் செய்தி, குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக பெரிய மைதானமான, மொடேரா மைதானத்தில், 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்பது தான். அதிகர்பூர அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?