பார்வையாளர்களின்றி முதல் 2 Test போட்டிகள் - IND vs ENG

சென்ற ஆண்டு கொரோனா நோய் வயப்பட்டு, உலகமே வீட்டிற்குள் முடங்கி கிடந்தது. அந்த முடக்கத்தான் காரணத்தினால், பல நாட்களாக விளையாட்டு போட்டிகள் ஏதுமின்றி கடந்து சென்றது. மீதம் நாட்களில், போட்டிகள் துவக்கம் பெற்றாலும், பார்வையாளர்கள் ஏதும் இல்லாது, காலி மைதானங்களிலேயே நடத்தப்பட்டது. அதையும் கடந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகள், பார்வையாளர்களை வைத்து, விளையாட்டு போட்டிகளை நடத்தினர். ஆனால், தற்போது இந்திய நாடு இம்முடிவை ஏற்க மறுத்துள்ளது.

ஓராண்டு காலத்திற்கு பிறகு, இந்திய மண்ணில் விளையாடவுள்ள முதல் கிரிக்கெட் தொடர் தான், அடுத்த மாதம் துவக்கம் பெறவிருக்கும் இந்தியா - இங்கிலாந்து தொடர். இதில், 4 டெஸ்ட் போட்டிகளும், 5 T20I போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் அடங்கும். சென்னை, அகமதாபாத் மற்றும் புனே ஆகிய மூன்று நகரங்களில் தான் போட்டிகள் நடைபெறும் என்கிற தகவலும் நாம் அறிந்ததே.

அறியாத சில தகவல்களை இப்போது நான் உங்கள் முன் எடுத்து வைக்கிறேன். இந்தியாவின் மத்திய அரசாங்கமானது தெரிவித்தது யாதெனில், 50 % பார்வையாளர்களுடன் அனைத்து விளையாட்டு போட்டிகள் மற்றும் இசை கலைவிழாக்களை நடத்தலாம் என்பதே. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்களின் உடல்நலத்தை கருத்திற்கொண்டு, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்ற முடிவெடுத்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையை கருத்திற்கொண்டு, அதை முழுமனதுடன் வரவேற்றது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். ஆகையால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

அகமதாபாத் நகரில் கட்டப்பட்டிருக்கும், உலகின் மிகவும் பெரிய மைதானமான, Motera மைதானத்திலும், பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை அனுமதித்தால், ரசிகர்களுக்கு நன்றாக அமைந்தாலும், நோயின் பாதிப்பும் அதிகரிக்கும்.

இத்தொடர், பிப்ரவரி மாதம் 5ம் தேதியன்று துவக்கம் பெற்று, மார்ச் மாதம் 28ம் தேதியன்று நிறைவு பெரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரின் இடையே, வருகின்ற பிப்ரவரி 18ம் தேதியன்று, IPL ஏலமானது நடைபெறும் என்று பேசப்படுகிறது. 

   

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?