BCCIன் அறிவிப்புகள்
இன்று, இந்திய கிரிக்கெட் வாரியத்தை சார்ந்த நபர்கள் அனைவரும் இணைந்து, 89வது ஆண்டு கால கலந்துரையாடலில் சந்தித்தது. இதன் குறிக்கோள் யாதெனில், 2021ம் ஆண்டின் IPLதொடரை குறித்த ஒரு ஒளிவெளிச்சம், இந்திய சர்வதேச அணியின் தேர்வாளர்களை குறித்த ஓர் செய்தி மற்றும் 2021ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், எந்தந்த மாநகரங்களில் போட்டி நடைபெறும், என்பதை பற்றியும் ஒரு செய்தி. இதன் முழு விவரத்தை இப்பதிவில் நாம் பார்ப்போம்.
இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலுக்கு முன்பாகவே, பலர் குறிப்பிட்டது 2022ம் ஆண்டில் தான், 10 அணிகளைக்கொண்ட IPL தொடர் நடைபெறும் எனவும், இவ்வாண்டில் குறுகிய காலத்திற்குள் 2 அணிகளுக்கான ஏலத்தை நடத்தி, பின்னர் சீட்டுக்கட்டைப்போன்று மொத்தமாக ஏலம் வைப்பது சாத்தியமற்றது. ஆகையால், இவ்வாண்டின் IPL வழக்கத்தைப்போன்று 8 அணிகளைக்கொண்டு தான் நடைபெறும். ஆனால், 2022ம் ஆண்டில், ஆணித்தரமாக இரு அணிகள் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது
இரண்டாம் தகவலானது, இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்களாக சேத்தன் ஷர்மா, அபே குருவில்லா மற்றும் டெபாஷிஷ் மோஹன்ட்டி. மூன்று இடங்களுக்காக பல நபர்கள் போட்டியிட்டனர். அவர்களுள் முக்கிய நபரான அஜித் அகார்கரும் அடங்குவார். ஆயினும், சேட்டன் ஷர்மா'வின் தேர்வு மகிழ்ச்சியளிக்கிறது.
அதனைத்தொடர்ந்து, 2021ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், எந்தெந்த மாநகரங்களில் போட்டிகள் நடைபெறும் என்பதன் தெளிவு. அதற்கான, அரசல் புரசல் தகவல்களை நான் காலையில் ஓர் பதிவிட்டிருந்தேன். அதன் செய்தியும் உண்மையே.
Comments
Post a Comment