இந்தியாவில் IPL 2021 ?

தற்போது, சில சுவையான தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியமானது, இவ்வாண்டில் நடைபெறவிருக்கும் IPL தொடரை, இந்திய மண்ணில் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது. இத்தொடர், வழக்கம் போன்று ஏப்ரல் மாதத்தில் துவக்கம் பெற்று, மே மாத இறுதியில் நிறைவு பெரும். அதன் முழு விவரங்களை இப்பதிவில் நாம் காண்போம்.

சென்ற ஆண்டு, கொரோனா நோயின் பாதிப்பால், இந்தியாவில் நடைபெறவிருந்த IPL தொடரை, ஐக்கிய அரபு நாடுகளுக்கு ( UAE ) மாற்றியமைத்தது. அதிலும், பார்வையாளர்களின்றி வீரர்கள் மட்டும் கண்டு மகிழுள்ளவாறு அமைக்கப்பட்டது. ஆனால், இம்முறை இந்தியாவில் தான் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளரான அருண் துமால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

"அனைத்து வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். நினைத்தவாறு ஏப்ரல் மாத காலகட்டத்தில் நிச்சயமாக நடைபெறும்" என்று கூறியுள்ளார். தற்போது சையத் முஷ்டாக் அலி தொடர் முடிவடைந்தது. அதற்கு பின், விஜய் ஹசாரே கோப்பை தொடர் நடைபெறும். அத்தொடரும் நிறைவடைந்த பின்னரே IPL நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, சில நுணுக்கங்கள் கிடைத்துள்ளது. அந்த நுணுக்கங்களின் அடிப்படையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானங்களில் இவ்வண்டி IPL தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் உள்ள நான்கு மைதானங்களான வான்கடே மைதானம், ப்ராபோர்ன் மைதானம், DY பாட்டில் மைதானம் மற்றும் Reliance மைதானம் ஆகியவற்றை தேர்வு செய்துள்ளார்கள். கூடுதலாக, புனே நகரில் உள்ள Maharashtra Cricket Association மைதானத்தையும் தேர்வு செய்துள்ளார்கள். ஆகையால் லீக் போட்டிகளை நடத்த மொத்தம் 5 மைதானங்கள்.

இவையில்லாமல், நாக்கவுட் போட்டிகளை நடத்த, உலகின் மிக பெரிய மைதானமான, சமீபத்தில் கட்டப்பட்ட, அகமதாபாத் நகரில் உள்ள மொடேரா மைதானத்தில் நடத்தலாம் என்று திட்டங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகையால், IPL எனும் ஜுரம், வருவதற்கு முன்பாகவே பரவத்துவங்கியுள்ளது.

சென்ற வருடம் நடைபெற்ற IPL, தொலைக்காட்சியில் பார்வையிட்டோரின் எண்ணிக்கை அதிகமென கூறப்படுகிறது. இதற்கு முன், கண்டிராத அளவிற்கு மக்கள் தொலைக்காட்சி மற்றும் OTTயில் IPL தொடரை கண்டுள்ளார்கள். ஆகையால், இவ்வாண்டில் முன்பை விட அதிக பார்வையாளர்கள் கிடைப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமல்லாது, இவ்வாண்டில், போட்டிகளை நேரில் கண்டுகொள்ள மைதானத்தின் உள்ளே, மக்களை அனுமதிக்கலாம் என்று சிறிய எண்ணம் உள்ளது. 100 சதவீதம் மக்கள் இல்லையென்றாலும், 50 அல்லது 25 சதவீத மக்களையாவது அனுமதிக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன், பாதுகாப்பு வேலைகளை செய்து வருகின்றார்கள்.

ஆகையால், இன்னும் 2 மாதம் தான். இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா துவக்கம் பெற்றுவிடும். கொண்டாட்டமும், கலவரமும் தான் !


"வருது வருது, விலகு விலகு 
IPL வெளியே வருது"  

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?