2021 இந்தியா - இங்கிலாந்து தொடர், இந்தியாவின் அணி

சில மணி நேரங்களுக்கு முன்பே, இந்திய கிரிக்கெட் அணி, வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், காயங்களுடனும் போராட்டத்துடனும், மூத்த வீரர்களின்றி, வெற்றியை கண்டது. ஆம், தொடர்ச்சியாக இரண்டாம் முறை, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை, ஆஸ்திரேலியாவிலேயே வென்றது இந்திய அணி. அதிலும், இம்முறை முக்கிய புள்ளிகள் ஏதும் இல்லாமல் ஜெயித்து சாதனையை படைத்தார்கள். அதனை தொடர்ந்து, தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான அணியை நியமித்துள்ளார்கள்.

இந்த அணி, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறவிருக்கும் அணியாகும். இந்திய கிரிக்கெட் அணியின் தலைக்கட்டுகளான விராட் கோலி, இஷாந்த் சர்மா ஆகியோர், மீண்டும் அணிக்குள் இடம்பெறுகிறார்கள். இந்த தொடர், அடுத்த மாதம் துவங்கி, மார்ச் மாத இறுதியில் நிறைவு பெரும் என இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது.


இவர்கள் இல்லாமல், Net பந்துவீச்சாளராக சிலரை நியமித்துள்ளார்கள். அவர்கள், அன்கிட் ராஜ்புட். அவேஷ் கான், சந்தீப் வாரியார், க்ரிஷ்ணப்பா கௌதம், மற்றும் சௌரப் குமார். கூடுதலாக, K S பாரத், அபிமன்யு ஈஸ்வரன், ஷாபாஸ் நதீம், ராகுல் சஹார், பரியங்க பஞ்சல்.

அப்போ சைனி மற்றும் நடராஜன் ஆகியோரை என் நியமிக்கவில்லை என்கிற கேள்வி அனைவரின் மனதில் ஏற்பட்டிருக்கலாம். இவர்கள் மிகவும் நன்றாக செயல்பட்டிருந்தாலும், மற்ற வீரர்களுடன் ஒப்பிடும்போது, சற்று மங்கிய நிலையில் தான் இருந்தது. அது மட்டுமில்லாமல், விளையாடுவதோ சேப்பாக்கத்தில். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தான் இங்கு மவுசு அதிகம். அந்த ஒரு செய்தியையும் மனதில் வைத்துக்கொண்டு இம்முடிவை தேர்ந்து எடுத்திருப்பர் என்பது என் கருத்து.

அக்ஸர் படேலுக்கு என் திடீர் மதிப்பு ? இவ்வாண்டின் IPL தொடரிலும் சரி, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சையத் முஷ்டாக் அலி தொடரிலும் சரி, பந்துவீச்சில் மிகவும் நன்றாக செயல்பட்டு வருகிறார். கூடுதலாக, தேவையான நேரங்களில் மட்டையை சுழற்றவும் தெரியும். ஜடேஜா இல்லாத இந்த தருணத்தில், சுந்தருக்கு பின்புலமாக இவரை நியமித்துள்ளார்கள்

        

 

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?