இரு முக்கிய ஐ.பி.எல் போட்டிகள்

ஏப்ரல் 4, 2013 மற்றும் ஏப்ரல் 4, 2019


ஏப்ரல் 4, 2013 :

                          மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே நடந்த போட்டி. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் மட்டையினை வீச வந்த பெங்களூரு அணிக்கு, அவ்வளவு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. முதல் ஓவரில் தில்லாகராதனே தில்ஷான் தனது விக்கெட்டை இழந்தார். பின் முதல் 3 ஓவர்களில், 9/1 என்கிற ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில், தத்தளித்து கொண்டு இருந்தது பெங்களூரு அணி. நான்காவது ஓவரை வீசுவதற்கு அன்றைய தேதியில் முதல் ஐபிஎல் போட்டியினை விளையாட வந்த ஜஸ்பிரிட் பும்ரா. அன்று எவருக்கும் தெரியாது, இந்த 19 வயது சிறுவன் பிற்காலத்தில் இந்திய அணியின் முன்னனி பந்து வீச்சாளராகவும் மற்றும் உலக தரத்தில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார் என்று. இவர் பந்து வீசுகிறார், விராட் கோலி பேட்டிங் செய்கிறார். முதல் மூன்று பந்துகளில், விராட் கோலி அவரின் பந்துகளை நன்குகளாகவும், ஆறுகளாகவும் அடிக்கின்றார். ஆனால், அதே ஓவரில், விராட் கோலியின் விக்கெட்டை பறிக்கிறார் பும்ரா. தனது முதல் ஐபிஎல் போட்டியில் மிகவும் சிறப்பான விக்கெட்டை எடுத்து கிரிக்கெட் உலகத்தில் தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டார். அதற்கு அடுத்து மயங்க அகர்வாலும் பும்ராவின் பந்தில் இரையானார். பொறுமையாக விளையாடிக்கொண்டிருந்த கிறிஸ் கெயில், தனது ஆட்டத்தில் வேகத்தினை கூட்டினார். அவரின் சிறப்பான ஆட்டத்தினால், மற்றும் அவர் கடைசி வரை விளையாடியதால் பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 156/5 என்கிற ரன்களை அடிக்க முடிந்தது. கிறிஸ் கெயில் தனிப்பட்ட முறையில், அவர் 92*(59) ரன்கள் அடித்தார். அதில் 11 நான்குகள் மற்றும் 5 ஆறுகள் அடித்திருந்தார். அடுத்து பேட்டிங் செய்ய வந்த மும்பை அணி சிறப்பான தொடக்கத்தினை கொடுத்தார்கள். ஆனால் டெண்டுல்கர் மற்றும் பாண்டிங் இருவரும் தங்களுடைய விக்கெட்டுகளை உடனுக்கு உடன் இழந்தந்தனர். ஆதலால், முதல் 10 ஓவர் முடிவில் 62/2 என்கிற ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரோஹித் ஷர்மாவும் சொர்ப்ப ரங்களுக்கு ஆட்டம் இழந்த பொழுது மும்பை அணி மிகவும் பரிதாப நிலையில் இருந்தது. ஆனால் தினேஷ் கார்த்திக் மற்றும் அம்பத்தி ராயுடு அப்பரிதாப நிலையிலிருந்து மும்பை அணியினை மீட்டெடுத்தனர். கடைசி 4 ஓவர்களில் 51 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த போது, கிறிஸ்டின் வீசிய அந்த ஓவரில் 24 ரன்கள் அடித்து போட்டியினை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றினர். அனால் வினய் குமார் மற்றும் ஜெயதேவ் உனட்கட் போட்டியினை தங்களின் யார்கர் பந்துகளால், கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்கிற சூழ்நிலையினை கொண்டு வந்தனர். கடைசி ஓவரில், பந்து வீச வருகிறார் வினய் குமார், பேட்டிங்கில் இருப்பது அம்பத்தி ராயுடு. முதல் ஒப்பத்தில் 1 ரன் எடுத்தனர். இருந்தாவது பந்தில் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் இருந்தாரு. விக்கெட் ! தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். மூன்றாவது பந்தில் பேட்டிங்கில் இருக்கிறார் அம்பத்தி ராயுடு. மறுபடியும் விக்கெட் !. கடைசி மூன்று பந்தில் 9 ரன்கள் தேவை. ஹர்பஜன் 1 ரன் எடுத்து போலார்டிடம் கொடுக்கிறார். 2 பந்துகளில் 8 ரன்கள். 4 அடிக்கிறார் பொல்லார்ட். ஒரு பந்தில் 4 ரன்கள் தேவை. பொல்லர்டின் கால்களின் நடுவில் யார்கர் பந்தினை வீசுகிறார். 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பெங்களூரு அணி இந்த நெருக்கடியான போட்டியினை 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி மும்பை அணி எதிராக தங்களது பெங்களூரு மைதானத்தில் முதல் முறையாக கிடைத்த வெற்றி. ஆட்ட நாயகன் - கிறிஸ் கெயில் 

ஏப்ரல் 4, 2019:

                           டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே டெல்லி அருன் ஜைட்டலீ மைதானத்தில் நடைபெற்றது. ஹைதராபாத் அணி முதலில் டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்தது. டெல்லி அணியின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அவர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தனர். ஷ்ரேயஸ் ஐயர் மட்டும் 43 ரன்கள் அடித்ததனால் மற்றும் அக்சர் பட்டேலின் முக்கியமா கடைசி ஓவர்கள் அடித்த 2 ஆறுகள் காரணமாய் 129/8 என்கிற குறைந்த ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஹைதராபாத் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி டெல்லி அணியினை ரன்கள் எடுக்க விடாமல் தடுத்தது. அடுத்து பேட்டிங் செய்ய வந்தார்கள் ஹைதராபாதின் வீரர்கள். அவர்கள் சிறப்பாக தொடங்கினர். முதல் 6 ஓவரில், விக்கெட் எதுவும் இழக்காமல் 62 ரன்கள் எடுத்திருந்தனர். ஆனால் இரண்டு தொடக்க வீரர்களும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின் மனிஷ் பாண்டே மற்றும் விஜய் ஷங்கர், இருவருமே பொறுமையாக ரன்களை சேர்த்தனர். பின், இருவருமே தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆட்டத்தில் திருப்பு முனை ஏற்பட்டது. ஹூடாவும் அடுத்து தனது விக்கெட்டை இழந்தார். எங்கு கையில் எட்டியது வாயிற்கு எட்டாமல் பொய் விடுமோ, என்கிற பயம் அணைத்து ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் மனத்திலும் இருந்தது. ஆனால், மொஹம்மது நபி மற்றும் யூசுஃப் பதான் மிகவும் எளிமையாக 5 விக்கெட் வித்தியாசத்தில், 9 பந்துகளை மட்டுமே மிச்சம் வைத்து இப்போட்டியினை வென்று கொடுத்தனர். ஆட்ட நாயகன் - ஜானி பார்ஸ்டோ ( தனது சிறப்பான தொடக்கத்தினால்)     


Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?