ஐபிஎல் திரில்லர் போட்டி

 இப்போது பலர் சென்னை அணியை சென்னை ஸ்பின்னர் கிங்ஸ் என்று வலைத்தளங்களில் கூறி மீம் போடுவர். அதற்கு காரணம், சென்னை அணி வாங்கிய சுழற்பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கை. ஆனால், 2014ம் ஆண்டிலேயே சென்னை அணி சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் நம்பிக்கை வைத்து, பயன்படுத்தினார்கள். இப்போது நாம் பார்க்கவுள்ள போட்டியிலும் அது தான் நடந்தது.

6 வருடங்களுக்கு முன், சென்னை மற்றும் ராஜஸ்தான் இடையே, ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சீ.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. பொதுவாக, அங்கு வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் பிட்சை பொறுத்த வரை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு சுழற்சி மற்றும் பிடிப்பு கிடைக்கும். அது மட்டும் அல்லாமல், பந்தின் வேகம் குறைந்தே பேட்ஸ்மேனை நெருங்கும். இதுவே பிட்சின் நிலவரம்.

சென்னை அணி மிகவும் நல்ல நிலையில் இருந்தது. இதற்கு முன் விளையாடிய 9 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று பட்டியலின் மேல் தளத்தில் இருந்தது. மறுபுறத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நல்ல தொடக்கம் கிடைத்திருந்தாலும், ஆட்டத்தில் சிறு தேய்வு காணப்பட்டது. 9 போட்டிகளில் 6 போட்டிகளை வென்று இருந்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, மாலைநேரத்தில்   முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஓர் குறிப்பிட்ட ஸ்கோரை இலக்காக வைத்து விட்டால், பின்னர் அதை 2வது பேட்டிங்கில் சிறிது கடினமாக இருக்கும் என்கிற ஓர் சிறிய கணக்கு.

அன்று விஜய் ஷங்கர், ஐபிஎல் தொடரில் விளையாடுகின்ற முதல் போட்டி. உள்ளே இறங்கினார்கள் வாட்சன் மற்றும் மாற்றுமுயற்சியாக அன்கிட் ஷர்மா. முதல் 5 ஓவர்களில் வெறும் 25 ரன்கள் அடித்திருந்தார்கள். இருவருமே ரன்களை அடிக்க முடியாமல், தவித்தனர். தோனி, தெளிவாக பத்ரீயிடம் பந்தினை கொடுத்து, ஒரு புறத்தில் அவரை பந்துவீச வைத்தார். 4 ஓவர்களில் 3 ஓவர்கள் அவர் பவர்பிளே ஓவர்களுள் முடித்தார். மறுபுறத்தில், மோஹித் ஷர்மா ஒரு ஓவர், ஈஸ்வர் பாண்டே ஒரு ஓவர் என வீசினார்கள். ஆனால் 6வது ஓவர், ரவிச்சந்திரன் அஷ்வினிடம் பந்தினை ஒப்படைக்க, தடுமாறிக்கொண்டிருந்த அன்கிட் ஷர்மா தாக்கினார். ஸ்லாட் லைனில் பந்து வீச 2 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அந்த ஓவரில் மட்டுமே அடித்து பவர்பிளே இறுதியில் 42/0 என கொண்டுவந்தார். ஆனால், அவரின் விக்கெட்டை கைப்பற்றியதும் ரவிச்சந்திரன் அஷ்வின் தான். முதல் ஓவரில் ரன்கள் கொடுத்ததால், அவரை நிறுத்தி வைக்காமல், மீண்டும் அவரிடம் பந்தினை ஒப்படைத்தார். இம்முறை மிக பொறுமையாக பந்தினை வீச, சிக்ஸர் அடிக்கும் ஆசையில் லாங் ஆண் திசையில் நின்றிருந்த டுவெயின் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து விட்டு சென்றார். ஆனால், வாட்சன் மிகவும் தெளிவாக ரன்களை சேர்த்தார். 10வது ஓவரை வீசிய விஜய் ஷங்கர் பந்து வீச, அந்த ஒரு ஓவரை குறிவைத்து அடித்தார். ரன்களின் கணக்கு மீண்டும் சரியாக வந்தது. சிக்ஸருடன் அரை சதத்தை எட்டினார். அரை சதத்தை எட்டிய அடுத்த  பந்தில் தனது விக்கெட் விழுந்தது. அந்த விக்கெட்டுடன் அணியின் சிறப்பான பேட்டிங்கும் விழுந்தது. அன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தினம் என்றே கூறலாம். 20 ஓவர்களில் 12 ஓவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களே வீசினார்கள். குறிப்பாக தோனி அன்று மிகவும் துணிச்சலுடன் 19வது ஓவரை ஜடேஜாவிடம் கொடுத்தார், அப்போது ஸ்கோர் 136/5, என இருந்தது. ஃபால்க்னெர் மற்றும் பின்னி, பௌண்டரிகளை குவிப்பதில் சிறப்பானவர்கள். ஆனால், அந்த ஓவரில் ஜடேஜா இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி, 4 ரன்களை மட்டுமே வழங்கினார். இறுதி ஓவரில், மோஹித் ஷர்மா 8 ரன்கள் மட்டுமே வழங்கி 1 விக்கெட்டை குவிக்க, 148/8 என்று நினைத்ததை விட குறைந்த ஸ்கோரில் முடித்தது. ஜடேஜா 4 வர்களில் 2/18 என்று சிறப்பாக பந்துவீசினார். விக்கெட் பட்டியலில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வாட்சன், 51 ரன்கள் அடித்தார்.

149 இலக்குடன் உள்ளே வந்தார்கள் டுவெயின் ஸ்மித் மற்றும் பிரண்டன் மெக்கலம். சென்னை அணியில் பத்ரீ முதல் மூன்று ஓவர்களி பவர்பிளே வீசினால், இங்கு அன்கிட் ஷர்மா ராஜஸ்தான் அணியிற்காக வீசினார்.  மிகவும் சிறப்பாக, ஃபீல்டர்களின் அமைப்பிற்கு ஏற்ப பந்துவீச, வலது கை பேட்ஸ்மேனான மெக்கல்லம் லெக் கல்லி திசையில் நின்றிருந்த கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து விட்டு சென்றார். அதே போல் ரெய்னாவும் கேட்ச் கொடுத்து விட்டு செல்ல, பவர்பிளே ஓவர்களின் முடிவில், 48/2 என ஸ்கோர் இருந்தது, அதற்கு காரணம் டுவெயின் ஸ்மித் கொடுத்த சிறப்பான தொடக்கம். உள்ளே இறங்கினார் டூ ப்ளஸிஸ். இருவரும் சிறிது நிதாரணமாக விளையாடி,  ஒன்று இரண்டு என ஓடி ரன்களை சேர்த்தார்கள்.  ஆனால், பத்தாவது ஓவரின் முடிவில், டுவெயின் ஸ்மித், கெவின் கூப்பர் வீசிய திடீர் பௌன்சரில், தவறி அடித்து கீப்பரிடம் கேட்ச் கொடுத்து விட்டுச்சென்றார். திடீர் முடிவாக அஷ்வினை உள்ளே இறக்கினார். அவர் சிறிது பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தால், பின்னர் போட்டியை முடித்து விடுவதற்கு மிக எளிதாக அமையும் என்ற எண்ணத்துடன். அவரும் டூ ப்ளஸிஸும் மிக பொறுமையாக விளையாடினர். பந்து வழக்கத்தை விட மெதுவாக பேட்ஸ்மேனை வந்தடைந்தது. பின்னர், 15வது ஓவரில் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது விக்கெட்டை இழக்க, இக்கட்டான நிலையில் இருந்தது சென்னை அணி. தோனி, உள்ளே வந்தார். ஒன்று இரண்டாக பௌண்டரிகளை அடிக்காமல் கணக்குடன் விளையாடினார். டூ ப்ளஸிஸ், 18வது ஓவரில் தனது விக்கெட்டை இழக்க, கடைசி 2 ஓவர்களில் 25 ரன்கள் தேவை என்று இருந்தது. ஜடேஜா உள்ளிறங்க, டோனி மீண்டும் நிதாரணமாக ஒன்று, இரண்டுகளாக சேர்த்தார். 19வது ஓவரில் ஜடேஜா முக்கிய சிக்ஸர் ஒன்றை அடிக்க, ஆட்டம் இன்னும் முடியவில்லை என்று அறிவித்தார். லடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்று இருந்ததது. முதல் பந்து ஜடேஜா 1 ரன்னை எடுக்க, 11 ரன்கள் 5 பந்துகளில் தேவை என்று வந்தது. ஸ்ட்ரைக்கில் இருந்தது தோனி. 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்தார். ஃபால்க்னெர் ஹாஃப் வாலி பந்தினை வீச. தோனி அதை லாங் ஆண் திசையில் மடக்கி சிக்ஸர் அடித்தார். கணக்கு 4 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்று சென்னை அணியிற்கு சாதகமாய் இருந்தது. அடுத்த பந்து, டீப் கவர் திசையில் பந்தினை அடித்து வெகு விரைவாக 2 ரன்கள் ஓடினார்கள். 3 ரன்கள் 2 பந்துகளில் தேவை. மீண்டும் கவர் திசையில் 2 ரன்கள் எடுக்க, ஓவர் த்ரோவ் போனது காரணமாக, 3வது ரன்னையும் எடுத்து வெற்றிபெற செய்தார்.
"உன்ன மாறி நா எத்தன பேர பாத்திருப்பேன், பொடிப்பயலே" என்று தோனி தனது ஆட்டத்தின் மூலம் கூறுகின்றார்.

ஆட்ட நாயகன் விருதை பெற்றது - ரவீந்திர ஜடேஜா ( 4-0-18-2)(11*(5)) காக கொடுக்கப்பட்டது.

          

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?