உலகக்கோப்பை 2019 நினைவுகள்

இதே நாளில், ஓராண்டிற்கு முன், இந்தியா மற்றும் அசுற்றலை இடையிலான போட்டி ஒன்று நடைபெற்றது.  நினைவுகளை நினைவு படுத்தும் தருணத்தில் நடைபெறும் போட்டி என்றே கூறலாம். ஆம், 2015ம் ஆண்டில் நடைபெற்ற அரை இறுதி சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்ததால், நாம் கோப்பையின் அருகே சென்று தொடாமல் சென்ற கதையாய் மாறியது. அன்று, அனைவரும் கண்ணீர் மல்க, இந்திய நாடு முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் தள்ளப்பட்டது. பலர் கூறுவார், 2016ம் ஆண்டில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் அவர்களை வென்று பழிதீர்த்தோம் என. ஆனால், உலகக்கோப்பையில் வாங்கிய அடி, உலகக்கோப்பையில் வென்றால் மட்டுமே சமம். மற்றும் ஆஸ்திரேலியா அணியின் கூடுதல் பலமாய், தாடையில் இருந்து மீண்டும் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் எவ்வித தயக்கமும் இன்றி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அன்று கென்னிங்டன் ஓவல் மைதானத்தில், பெட்டிங்கிற்கு ஏற்ப பிட்ச் அமைந்தது. இந்திய அணியினை சேர்ந்த அணைத்து வீரரும் அன்று பேட்டிங்கில் ஜொலித்தார்கள். தொடக்கத்தில் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா, தாங்கள் 6 ஆண்டுகளாக சிறப்புடன் செய்த செயலினை மீண்டும் தடங்கள் ஏதுமில்லாமல் செய்தார்கள். இருவரும் இனைந்து 100 ரன்கள் கூற்றை சேர்த்தனர். ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் பந்துவீச்சாளர்களை ஓர் குறிக்கோளுடன் எதிர்த்தார்கள். அக்குறிக்கோள், வெற்றியை வாகை சூட வேண்டும் என்பது தான். சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தவான் ஆனால், எங்கும் நிற்கவில்லை. இடையில், பந்துவீச்சின் காரணத்தினால், தனது கைகளில் அடித்தது. ஆனால், காயங்கள் இன்றி பயணங்கள் ஏதும் இல்லை என முதுமொழிக்கேற்ப தளராது விளையாடினார். குறிப்பாக தான் அன்று அடித்த கவர் டிரைவுகள் அருமையாக இருந்தது. சதத்தை அடைந்தார். மறுபுறம் கோலி, சிறிது ஓர் பந்திற்கு ஓர் ரன் என்கிற கணக்கில், விரைவாக ரன்களை சேர்க்க, ஸ்கோர் உயர்ந்தது. தவான் 117 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வழக்கத்திற்கு மாறாக ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அதிரடி ஆட்டத்திற்கு என மட்டுமே. 37 ஓவர்களில் முடிவில் 220/2 என ஸ்கோர் இருந்தது. இவர்கள் 350 குறிவைத்தார்கள். அவ்வாறு அடித்தால் மட்டுமே வெற்றியை கைப்பற்ற முடியும். ஏனெனில் இது பேட்டிங்கை சார்ந்த பிட்ச். ஹர்திக் பாண்டியா, தனக்கு நியமிக்கப்பட்ட வேலையினை சிறப்பாக செய்தார். கோலியும், ஹாதிக்குடன் சேர்ந்து ஒரு பந்திற்கு ஒரு ரன் என்கிற வகீதத்தில் விளையாடியவர், பௌண்டரிகளால் சரமாரியாக ரன்களை குவித்தார். கோலி அரை சதத்தை எட்டினார். ஹர்டிக் 2 27 பந்துகளில் 48 ரன்களை குவித்து, 2 ரன்களால் அரை சதத்தை தவற, ஆனால் தேவையானதை அளித்துள்ளார். இதற்கு மேல் கோழி சாதம் அடிப்பார்மற்றும் தோனி சிறிது விரைவாக ரன்கள் சேர்க்க வேண்டும் என்கிற கட்டாயம். ஓரளவிற்கு அது நடந்தது. தோனி விரைவாக பௌண்டரிகளுடன் ரன்களை சேர்த்தார், ஆனால் கோலி தனது சதத்தை கொண்டுவராமல் 80 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் ராகுல் 1 சிக்ஸர் மற்றும் 1 பௌண்டரியுடன் முடிக்க, 50 ஓவர்களில் முடிவில் 352/5 என அடித்தார்கள். ஆஸ்திரேலியா அணியை பொறுத்த வரை இமாலய இலக்கு. ஆனால், தங்கள் அணியின் பெட்டிங்கினாள் அதை சாத்தியம் செய்ய முடியும் என்கிற எதிர்பார்ப்பு.



ஆஸ்திரேலியா அணியும், இந்தியர்களை போன்று மிகவும் சிறப்பாக தொடங்கினார்கள். முதல் நான்கு வீரர்களான டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடினார்கள். இவர்கள் ஆடிய ஆட்டத்திற்கு, நிச்சயம் ஆஸ்திரேலியா அணி வென்று விடுவார்கள் என பலர் நினைத்தார்கள். ஆனால் 37வது ஓவரில் உஸ்மான் கவாஜா தனது விக்கெட்டை இழக்க, போட்டியின் போக்கு மாறியது. அது வரை வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த நிலையில், அவர் சென்றவுடன் மட மட வென விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. இடையினில் அலெக்ஸ் கேரி, சிறிது பிடி கொடுத்து விளையாடினாலும் அவருடன் இனைந்து விளையாடும் பொருட்டு யாவரும் இல்லை அன்றைய தினத்தில். வலுவிழந்த இடைத்தர வீரர்களின் வீழ்ச்சி நன்றாக வெளிப்பட்டது . இதற்கு முன்தைய போட்டியிலும், மேற்கு இந்திய தீவுகள், ஆஸ்திரேலியா அணியின் இடைத்தர வீரர்கள் மற்றும் தொடக்க வீரர்களை வீழ்த்தி விளையாடினார்கள். ஆனால், இன்று தொடக்கம் நன்றாக அமைந்தது, இடைத்தரம் மீதும் துண்டிக்கப்பட்டது. பும்ரா அன்று சிறப்பாக பந்துவீசவில்லை என்றாலும், இறுதி சடங்கு காரியத்தை நன்கு செய்தார். அலெக்ஸ் கேரி மட்டும் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் அடித்திருந்தார். மாற்றோர் தங்களின் விக்கெட்டை பரிசாக கொடுத்து விட்டு சென்றார்கள். 316 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.


ஆட்ட நாயகன் விருதை வென்றது ஷிகர் தவான்.

         

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?