2021 விஜய் ஹசாரே செய்திகள்
நான் முன்னதாக குறிப்பிட்டிருந்தேன், பிப்ரவரி மாதம் 18 தேதி முதல், இவ்வாண்டின் விஜய் ஹசாரே தொடர், துவக்கம் பெற வாய்ப்புகள் உள்ளது என்று. குறிப்பிட்டவாறு இல்லாமல், 2 நாட்கள் கழித்து, பிப்ரவரி 20ம் தேதியன்று துவக்கம் பெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, எந்தெந்த குழுவில் எந்தெந்த அணிகள் இடம்பெற்றுள்ளது என்பதை பற்றியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயின் விதிமுறைகள் பொறுத்தவரை, பிப்ரவரி மாதம் 13, 15 மற்றும் 17 தேதிகள் அன்று மூன்று பரிசோதனைகள் நடைபெறும். அதற்கு ஒரு வாரம் முன்பே, அனைத்து அணிகளும், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நகரத்துக்கு சென்று, அங்கு ஒதுக்கப்பட்ட உணவகங்களில் தங்களை தாங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
6 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு நகரை மையமாக வைக்கப்பட்டு, அங்கு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது BCCI. சூரத், இண்டோர், பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களை தேர்வு செய்துள்ளார்கள். கடைசி குழுவான, Plate Group அணிகளுக்கு, தமிழ்நாடை தேர்வு செய்துள்ளார்கள். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு நகரங்களில், Plate Group போட்டிகள் நடைபெறும் என்பதே ஆகும்.
நாக்கவுட் போட்டிகள் நடைபெறவிருக்கும் நகரத்தை, தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. நாக்கவுட் சுற்றுக்கு தகுதி பெரும் அணிகளுக்கு, மார்ச் மாதம் 2 மற்றும் 4ம் தேதிகளன்று இரண்டு கொரோனா பரிசோதனைகள் நடைபெறும்.
விஜய் ஹசாரே 2020-21 குழுக்கள் :-
Elite Group A : குஜராத், சட்டிஸ்கர், ஹைதராபாத், திரிபுரா, பரோடா, கோவா
இடம் - சூரத்
Elite Group B : தமிழ்நாடு, பஞ்சாப், ஜார்கண்ட், விதர்பா, மத்திய பிரதேஷ், ஆந்திர பிரதேஷ்
இடம் - இண்டோர்
Elite Group C : கர்நாடக, உத்தர் பிரதேஷ், கேரளா, ஒடிஷா, Railways, பீகார்
இடம் - பெங்களூரு
Elite Group D : டெல்லி, மும்பை, மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேஷ், ராஜஸ்தான், பாண்டிச்சேரி
இடம் - ஜெய்ப்பூர்
Elite Group E : பெங்கால், Services, ஜம்மு & காஷ்மீர், சவுராஷ்டிரா, ஹரியானா, சண்டிகர்
இடம் - கொல்கத்தா
Plate Group - உத்தரகண்ட், அசாம், நாகலாந்து, மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல் பிரதேஷ், மிசோரம், சிக்கிம்
இவையாறு குழுக்களில், சிறந்து விளங்கும் அணிகள் தான் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். ஆகையால், ஒவ்வொரு போட்டியும் மிகவும் அவசியம். ஏதேனும் ஒரு தோல்வி ஏற்பட்டாலும், அந்த தோல்வியின் காரணத்தினால், அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவியலாமலும் வெளியேறலாம். இவ்வாண்டில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில், நன்றாக விளையாடி வந்த கேரளம் அணி, சந்தித்த ஒரு தோல்வி, அவர்களை வெளியேற்றியது.
Comments
Post a Comment