நெருக்கடிகளை சமாளிக்குமா இங்கிலாந்து ?
2020ம் ஆண்டில், கொரோனா நோயின் பாதிப்பு, பல கிரிக்கெட் போட்டிகளை தடைக்கு உள்ளாகியது. கிரிக்கெட் மட்டும் அல்லது, மற்ற விளையாட்டுகள், ஏன் விளையாட்டினை கடந்து மற்ற துறைகளையும் பாதித்துள்ளது. இவ்வாறு உள்ள பாதிப்புகளை ஈடுகட்ட, 2021 எனும் ஆண்டினை ஓர் வாய்ப்பாக பார்க்கின்றார்கள். ஆனால், இவ்வாறு ஈடுகட்ட வேண்டிய செயல்பாடு, மலையளவு இருக்கிறது என்பது தான் செய்தியே.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக, இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியின், 2021ம் ஆண்டில் அமைந்துள்ள அட்டவணையை நாம் பார்த்திருப்போம். அதில், இந்தியாவுக்கு ஒரு மாதம் கூட இடைவெளியில்லாமல் அமைந்துள்ள நெருக்கடியான காலகட்டம் என்னவென்று நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர்களையடுத்து, இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் அணியின் அட்டவணை, அவர்களது வீரர்களை கண்டு பயமளிக்கிறது.
இந்தியாவிற்காவது பல போட்டிகள் தடைபட்ட நிலையில், இவ்வாறு ஓர் நெருக்கடியான சூழல் அமைந்தது சாத்தியம். இங்கிலாந்து அணி தான், ஜூலை மாத காலகட்டத்திலேயே, கிரிக்கெட்டை மீண்டும் துவக்கி வைத்துள்ளார்களே, பின் ஏன் நெருக்கடியான சூழல் என நீங்கள் கேள்விகள் எழுப்புதலை என்னால் நன்கு புரிந்துக்கொள்ள முடிகிறது.
2020ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்த இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் உண்டான கிரிக்கெட் தொடர் தான், 2021ம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெறுகிறது. 2020ம் ஆண்டின் செப்டம்பர் மாத காலகட்டத்தில் நடைபெறவிருந்த, நெடுந்தொடரான இங்கிலாந்து - இந்தியா தொடர் தான், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவக்கம் பெற்று, மார்ச் மாத இறுதியில் நிறைவு பெறவிருக்கிறது.
இதனோடு, 2021ம் ஆண்டின் இடைகாலகட்டத்தில், இந்தியாவிற்கு எதிரே நடைபெறவிருக்கிறது Home கிரிக்கெட் தொடர். இதற்கடுத்து பாகிஸ்தானுடன் மீண்டும் உள்நாட்டில் ஓர் தொடர். அதன் பின், இலங்கையோடு மீண்டும் ஒரு தொடர். பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக, பாகிஸ்தானில் ஒரு கிரிக்கெட் தொடர்.
கூடுதலாக, வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரான, Ashes கிரிக்கெட் தொடர். நியூஸிலாந்து நாட்டிற்கு எதிரே, நியூஸிலாந்தில் ஒரு கிரிக்கெட் தொடர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தடைபட்ட கிரிக்கெட் தொடரும், ஈடுகட்ட திட்டமிட்டுள்ளார்கள். இவற்றையெல்லாம் கடந்து, 2021ம் ஆண்டின் ICC 20 ஓவர் உலகக்கோப்பை தொடரும், இவ்வாண்டின் இறுதியில், இந்தியாவில் நடைபெறவிருக்கிறது.
ஆதலால், நெருக்கடியான கிரிக்கெட் காலம், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு காத்திருக்கிறது. இதில், பல போட்டிகள், சொந்த மண்ணைக்கடந்து, வெளிநாடுகளில் தான் நடைபெறுகிறது. ஆதலால், பணிச்சுமை மிகவும் அதிகமாக இருக்கும். இதனை ஈடுகட்ட, உள்நாட்டு வீரர்கள் மற்றும் County வீரர்களுக்கு, சர்வதேச அளவில் வாய்ப்பளித்து, சுழற்சி முறையில் பயன்படுத்தவுள்ளார்கள் என அறிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் அணியின் Captain'களான, மோர்கன் ( ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் ), மற்றும் ரூட் ( டெஸ்ட் கிரிக்கெட் ) தெரிவித்தது, இந்தியாவிற்கு எதிரான தொடரிலும் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மட்டுமே, அணியின் மூத்த மற்றும் முக்கிய வீரர்கள் பயன்படுத்தப்படுவர். மீதம் உள்ள தொடர்களில், பல வீரர்களை நாங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தவுள்ளோம் எனவும், இவ்வாறு உள்ள பரிசோதனையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காலங்கள் கடந்து, சர்வதேச கிரிக்கெட் என்பது, குறிப்பிட்ட 15 வீரர்களை மட்டுமே வைத்து விளையாடும் போட்டிகளாக அல்லாமல், தற்போது சுழற்சி முறையில் பயன்படுத்தும், அடித்தளமாக அமைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment