இந்திய கிரிக்கெட் அணியின் நெருக்கடியான அட்டவணை - 2021


பரவலாக, சில உண்மைகள் காற்றில் மிதந்துக்கொண்டு இருக்கிறது. அவ்வாறு உள்ள உண்மைகள், 2021ம் ஆண்டில் இந்திய அணிக்கு அமைக்கப்பட்ட Schedule பற்றியும் இருக்கலாம். இவையனைத்திற்கும், காரணம் யாதெனில் என நீங்கள் கேள்வி எழுப்பினால், அதற்கு ஒரே விடை, Corona நோயினால் ஏற்பட்ட முடக்கம் தான். " நீங்கள் கூறும் சொற்கள் ஏதும் விளங்கவில்லை, சற்று புரியும்வாறு கூறுங்களேன் ", என பார்வையாளர்களின் மனக்குமுறலை என்னால் புரிந்துகொள்ள முடியுது. நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், இனி வரும் பக்கங்களில், ஒரு வரி விடாமல் படித்துக்கொண்டே வாருங்கள்.

இவ்வாண்டு, கொரோனா நோயின் பாதிப்பால், பல போட்டிகள் தடைபட்டது. பல சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டது. அதில் ஒன்றே, இவ்வாண்டின் நடக்கவிருந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடர். இவ்வாறு தடைபட்ட போட்டிகளையும், தொடர்களையும், பின் வரும் ஆண்டுகளில் நடைபெரும்வாறு அட்டவணை அமைக்க வேண்டும். இவ்வாறு, அமைக்கப்பட்ட அட்டவணையின் காரணத்தினால், எவ்வித ஓய்வுமின்றி, தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்களிலும் பங்குபெறும் அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலை, அனைத்து அணிகளுக்கு ஏற்பட்டாலும், தற்போது இந்திய கிரிக்கட் அணியின் 2021ம் ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டது. 

2021ம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணையை கூர்ந்து கவனித்தால், நாடுகள் கடந்து, 12 மாதங்களுக்கு தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் விளையாடும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ஆஸ்திரேலியாவுக்கு இடையே உள்ள கிரிக்கெட் தொடர், January மாத இடையில் நிறைவுபெறும். அது முடிவடைந்தவுடன், இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 மாத நீண்ட தொடரில் விளையாடவுள்ளார்கள். அதில் 4 T20க்கள், 4 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் அடங்கியுள்ளது. இவை, March மாதத்தில் முடிவடையும். முடிவடைந்த சில நாட்களிலேயே, 2021ம் ஆண்டின் IPL தொடர் நடைபெறும். இந்த IPL தொடர், March மாதத்தில் துவக்கம் பெற்று May மாதம் வரை நடைபெறும். அதுவும், 2021ம் ஆண்டில், புதிதாக ஒன்றல்லது இரண்டு அணிகள் சேர்க்கவுள்ளார்கள். Mega Auctionனும் நடைபெறும். ஆதலால், முதலிலிருந்து அணியை வடிவமைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. IPL தொடர் முடிவடைந்த பின், June மாதத்தில் இலங்கை நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள். அதில், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 T20 போட்டிகள் அடங்கும். இது முடிவடைந்தவுடன், இலங்கையிலேயே Asia Cup தொடர் நடைபெறும். இத்தொடர், ஜூலை மாத இடைக்காலம் வரை நடைபெறும். Asia Cup முடிவடைந்தபின், ஜிம்பாப்வே நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியா. இத்தொடரில், இளம் அணியை அனுப்பி சோதனை செய்யலாம். 3 ஒரு நாள் போட்டிகளைகொண்டதாக எழுதப்பட்டது. இது முடிவடைந்தபின், இம்முறை இந்திய நாடு இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும். முன்பைப்போன்று, இதுவும் ஓர் நீண்ட தொடராக அமைக்கப்பட்டது. 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கும். June, July, August, September எனும் நான்கு மாதங்களுக்குப் பிறகு, October மாதத்தில், இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் தங்கள் சொந்த நாட்டை வந்தடையும். சொந்த நாட்டை வந்தடைவதும், ஓய்வுக்காக கிடையாது. தென் ஆஃப்ரிக்கா அணிக்கு எதிராக ஓர் தொடர் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுள் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 t20 போட்டிகள் அடங்கும். இதனோடு தொடர்ச்சியாக, அதே மாதத்தில் 2021ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை, கட்டமைக்கப்பட்டது. 20 உலகக்கோப்பை முடிவடைந்தபின், November மாதத்தில், நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறது. இத்தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளும், 3 t20 போட்டிகளும் அடங்கும். இறுதியாக, 2021ம் ஆண்டின் December மாதத்தில், இந்திய அணி தென் ஆஃப்ரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும். அதில் 3 டெஸ்ட் போட்டிகளும் 3 t20 போட்டிகளும் அடங்கும்.

பதிவிடுவதற்கே, தலையை சுற்றும் அளவிற்கு பெரிதாக இருக்கும் என்றால், விளையாடவிருக்கும் இந்திய அணியின் மனநிலையை சற்று சிந்தித்து பாருங்கள். இவ்வாறு உள்ள வேலை பளுவை சமாளிக்கவேண்டுமெனில், ஒவ்வொரு தொடரிலும், பல வகையான இளம் வீரர்களை நியமித்து சோதிக்க வேண்டும். இவ்வாறு சோதனை செய்தால், வேலைபளுவையும் சமாளிக்கலாம், கூடுதலாக எதிர்கலாத்தை மனதில் கொண்டு அறுவடையும் செய்யலாம். வெளியே தெரியாத, திறமைவாய்ந்த இளம்வீரனும் ஒளியில் தென்படலாம்.     

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?