#raisethebat Test Series - 2020

3 மாத இடைவெளியிற்கு பின், ஓர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதுவும், பழமைவாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து கிரிக்கெட் எனும் விளையாட்டை தொடர்ந்தார்கள். இதனுடன் இனைந்து, முதல் போட்டியில் பங்குபெற்ற அணிகள், கிரிக்கெட்டின் கண்டுபிடிப்பாளரான இங்கிலாந்து மற்றும் அவர்களின் 9 தலைமுறை பகையாளியான மேற்கு இந்திய தீவுகள் ஆகும். கேட்பதற்கே சுவாரஸ்யம் கூடுகின்றதா ? இத்தொடரில் எவ்வித சம்பவங்கள் நடைபெற்றது என இனி வரும் பக்கங்களில் நான் பதிவிடுகின்றேன்.

முதல் டெஸ்ட் போட்டி - சௌதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனான ரூட் அவர்களுக்கு, இரண்டாம் பிள்ளை பிறக்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் அவர் பங்குபெறவில்லை. ஆதலால், அவருக்கு பதிலாக, ஸ்டோக்ஸ் அவர்கள், தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். முதல் போட்டியில், முதல் இரு நாட்களுக்கு மழையின் பாதிப்பு, சௌதாம்ப்டன் மைதானத்தில் இருந்தது. டாஸ் வென்ற ஸ்டோக்ஸ் அவர்கள், இரண்டு அணுகுண்டுகளை வீசுமளவிற்கு இரு செய்திகளை தெரிவித்தார். முதல் செய்தி யாதெனில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளனர் என்பதும், இரண்டாம் செய்தி, ஸ்டுவர்ட் ப்ரோடு அவர்கள், இப்போட்டியில் இடம் பெறமாட்டார் என்பதும் தான். 

இவ்விரு முடிவுகள், அவர்கள் போட்டியில் பாதிப்பு ஏற்படும் என்பது அப்போது புரிந்திருக்காது. ஆனால், பின்னர் உள்ளுக்குள் உரைத்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 204 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்குகளையும் இழந்து இருந்தனர். ஹோல்டர் அவர்கள் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர், களமிறங்கியது மேற்கு இந்திய தீவுகள் அணி. க்ரீக் ப்ராதவெய்ட், ஷேன் டௌரிச், ரோஸ்டன் சேஸ் மற்றும் பர்ரோக்ஸ் அவர்களின் சிறப்பான ஆட்டங்களின் காரணத்தினால், 318 ரன்கள் எடுத்து, 114 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.  இங்கிலாந்து அணியின் இரண்டாம் இந்நிகஸில் 313 ரன்கள் குவித்தது. அதற்கு, முக்கிய காரணம், சிப்லே, க்ராவ்ளே மற்றும் ஸ்டோக்ஸ் ஆட்டங்களினால். இலக்கு, வெறும் 200 ரன்கள் தான் என்றாலும், மேற்கு இந்திய தீவுகள் அணி, முதலில் மிகவும் தடுமாற்றத்தில் இருந்தது. 4 விக்கெட்டுகளை தொடக்கத்தில் இழக்க, ஆட்டம் சூடுபிடித்தது. இங்கிலாந்து அணி, மிகவும் போராடியது. ஆனால், ப்ளாக்வுட்'டின் ஆட்டம், அனைத்தையும் பாழாக்கியது. ஆதலால், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், மேற்கு இந்திய தீவுகள் அணி, ,முதல் போட்டியை வென்றது. " 11ஸ் ரொம்ப முக்கியம் பிகிலே"

2ம் போட்டியை கண்டோம் என்றால், ரூட் அணியின் தலைவராக களமிறங்க, ப்ரோடு அவர்களும் உள்ளே வந்தார். ஆனால், இம்முறை ஆண்டர்சன் வெளியேறினார். இம்முறை, மேற்கு இந்திய தீவுகள் அணி, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. மான்செஸ்டர் மைதானத்தில், மழையின் பாதிப்பு சௌதாம்ப்டன் மைதானத்தை விடவும் அதிகமாய் இருந்தது. ஆனால், இம்மைதானம், வேகப்பந்துவீச்சிற்கு மிகவும் வழிவகுத்தது. இங்கிலாந்து அணி, தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும், சிப்லே மற்றும் ஸ்டோக்ஸின் சதங்கள், முற்றிலும் மேற்கு இந்திய தீவுகள் அணியை பின்னுக்குத்தள்ளியது. ஆனால், ரோஸ்டன் சேஸ் மட்டும் 5 விக்கெட்டுகளை குவித்தார். இருப்பினும், இங்கிலாந்து அணி 469 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்கியது. இடையிடையே சில விக்கெட்டுகளை இழந்தாலும், ப்ரத்வெய்ட், ப்ரூக்ஸின் அரை சதங்கள் அணியை வேட்டையில் வைத்தது. 272ரன்களை அடித்தால், ஃபோலோ ஆன், என்பதை தவிர்க்கலாம். இவ்வாறு உள்ள நிலையில், 240/4 என்கிற நிலையில் இருக்க, இங்கிலாந்து அணியிற்கு புது பந்து கைக்கு வருகின்றது. மட மட வென நான்கு விக்கெட்டுகள் விழ, இவர்கள் ஃபோலோ ஆன், என்கிற விதியை தவிர்ப்பார்களா ? என்கிற சந்தேகம் அனைவரின் மனதிலும் இருந்தது. ஆனால், ரோஸ்டன் சேஸ், களத்தில் நின்றதால், ஃபோலோ ஆன், என்கிற விதியை தவிர்க்க முடிந்தது. 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணி, 182 ரன்களில் முன்னிலை பெற்று இருந்தது. மீண்டும் களமிறங்கினர், இங்கிலாந்து அணி. இம்முறை வழக்கத்திற்கு மாறாக, ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் களமிறங்க, ரங்களின் வேகத்தை உணர்த்தியது. ஸ்டோக்ஸ் அவர்கள், மீண்டும் ஓர் அரை சதத்தை குவிக்க, டெஸ்ட் போட்டியில் இம்முறை வெகு விரைவாக இடப்பட்ட ஓர் அரை சதம் என்றே கூறலாம். 129/3 என்கிற நிலையில், மீண்டும் டிக்ளேர் அறிவிக்க, மேற்கு இந்திய தீவுகளின் இலக்கு, 312 ரன்கள். தொடக்கத்தில், சென்ற ஆட்டத்தை போன்று, 4 விக்கெட்டுகளை இழந்தார்கள். ஆனால், ப்ளாக்வுட் மற்றும் பர்ரோக்ஸ் அரை சதங்களை ஈட்டினர். ஆனால், இறுதி செஷனில், அணைத்து விடிக்கெட்டுகளை இழந்து ஆட்டம் இழந்தது மேற்கு இந்திய தீவுகள் அணி.

மூன்றாம் போட்டி. தீர்ப்பு வழங்கும் போட்டி. இம்முறை மேற்கு இந்திய தீவுகள் அணி, தவறு செய்கின்றது. கார்ன்வால் அவர்களை களத்தில் இறக்கினர். மற்றும், மீண்டும் மேற்கு இந்திய தீவுகள் அணி, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.  இம்முறை, தொடக்கத்தில் நான்கு விக்கெட்டுகள் சரிவு ஏற்பட, அணியை காப்பாற்றினர், ஒல்லி போப் மற்றும் ஜோஸ் பட்லர். இவர்களின் ஆட்டம், ஓரளவிற்கு மீட்டுக்கொடுத்தாலும், மீண்டும் எழுந்தது மேற்கு இந்திய தீவுகள் அணி. 280/8 என்கிற நிலையிற்கு, இங்கிலாந்து அணியை தள்ளிச்செல்ல, 300 ரன்களுக்குள் ஆட்டம் முடிந்து விடும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், ப்ரோட் அவர்களின், மின்னல் வேக ஆட்டம், போட்டியின் தலைவிதியை மாற்றியது. 45 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். அந்த ஒரு ஆட்டம், இங்கிலாந்து அணியை 369 ரன்கள், என்கிற இடத்தை அடையச்செய்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்கினர். மிகவும் மோசமான ஆட்டம். பேட்டிங்கை தொடர்ந்து பந்துவீச்சில், ப்ரோட் அவர்கள், தனது ஆதிக்கத்தை செலுத்தினார். ஹோல்டர் மற்றும் டௌரிச் அவர்களின், எதிர்ப்பு, மீண்டும் ஓர் முறை போலோ ஆன், என்கிற விதியை தவிர்க்க செய்தது. 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, மேற்கு இந்திய தீவுகள் அணி. 172 ரன்கள் முன்னிலை பெற, இங்கிலாந்து அணியின் ஒப்பனர்களான சிப்லே மற்றும் பிரின்ஸ் அவர்களின் அரை சதங்கள், தங்களின் படகினை சிறிதும் இன்னல்கள் இன்றி செலுத்தியது. சிப்லே அவர்கள் ஆட்டமிழந்த பின், ரூட் களமிறங்கினார். வெகு விரைவாக ஓர் அரை சதத்தை கொண்டு, இங்கிலாந்து அணி 226 ரன்கள் குவித்து டிக்ளேர் அறிவித்தது. மேற்கு இந்திய அணிகளின் இலக்கானது, 399 ரன்கள். மேற்கு இந்திய தீவுகள் அணியின் பேட்டிங் மேலும் மோசமடைய, பிராட் அவர்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500வது விக்கெட்டை ஈட்டினார். இதனையொட்டி, இந்த போட்டியில், இரு இன்னிக்ஸுகளை இணைந்து, 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆதலால், இங்கிலாந்து அணி போட்டியையும் தொடரையும் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை பெற்றது - ஸ்டுவர்ட் ப்ரோட்.

தொடர் நாயகர்கள், ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் ரோஸ்டோன் சேஸ். 3 மாத இடைவெளி, கிரிக்கெட்டை சிறிதும் பாதிக்காமல், அதன் அழகை மேலும் அதிகரித்தது.              

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?