மோர்கனின் கதகளி ஆட்டம்

இன்று, ஒரு ஆண்டிற்கு முன், இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள், மேன்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது. ஓல்ட் டிராஃபோர்ட் என்கிற பெயர், நமது செவிகளில் ஒலித்தால், அதிக ஸ்கோர் போட்டி என்றே தோன்றும். அவ்வாறு, பேட்டிங்கை சார்ந்த மைதானமாக திகழ்ந்து வருகின்றது. ஜூன் மாதங்களில், இங்கிலாந்தில் கோடை காலம் நடைபெறும் தருணத்திலும், வெப்பம் தாக்காது குளுகுளு வென்று இருக்கும். மற்றும், மைதானம் அமைந்திருப்பது, மேன்செஸ்டரில் உள்ள சமுத்திரத்திற்கு அருகில். பலத்த காற்றும் வீசும். ஆதலால், ஓர் அதிரடி பேட்டிங் விருந்து, பார்வையாளர்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது என கண்டிப்பாக நம்பலாம்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, எவ்வித யோசனையும் இல்லாமல், பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அன்று ஆஃப்கானிஸ்தான் அணி இரையாகியிருக்கக் கூடாது என்பதே எண்ணமாக இருந்தது. காரணம், அவர்களிடம் இருந்தது சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் அரைகுறை வேகப்பந்து வீச்சாளர்கள். அஃதாவது, குறைந்த வேகத்தில் பந்தை வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள். பலத்த காற்று வீசும் மைதானத்தில், சுழற்பந்து வீச்சிற்கு பெரிதும் வேலை இருக்காது. ஆனால், இவ்வுலக கோப்பை தொடரின் முழுவதுமாக, ஆஃப்கானிஸ்தானிடம் இருந்த குறைபாடு இது தான். அதனை, நன்கு புரிந்து கொண்டு, தொடரின் தொகுப்பாளர்களான இங்கிலாந்து அணி, முதற்பந்திலிருந்து அதிரடியாக விளையாடினர்.  ஜானி பார்ஸ்டோ மற்றும் ரூட்டிற்கு இடையில் இருந்த  ரன்களின் கூற்று மிகவும் அருமையாக இருந்தது. இருவருமே அரை சதங்கள் குவித்தனர். ஆனால், அவர்களாவது சிறிது நேரம் கடைபிடித்து, தரையோரத்தில் மட்டுமே விளையாடினர். 30 ஓவர்களின் முடிவில், 164/2 என ஸ்கோர் இருந்தது. இங்கிருந்து, பொதுவாக எதிர்பார்க்கப்படும் மதிப்பெண் 300 ரன்கள் அருகில். ஆனால், அன்று இங்கிலாந்து அணி, ருத்திரத்தாண்டவம் ஆடியது. களமிறங்கினார், இங்கிலாந்து அணியின் தலைவர் மோர்கன். குல்படின் நைப் செய்த தவற்றும், ஆஃப்கானிஸ்தான் அணியிடம் இருந்த குறைபாடும் அன்று நன்கு விளங்கியது. ரஷீத் கானிடம் பந்தை ஒப்படைத்தார். இடது கை பேட்ஸ்மானுக்கு, கால் சுழற்பந்து வீச்சாளரை, களமிறக்குவது மிகவும் தவறு. பந்து வெளியே செல்லாமல், உள்ளே திரும்பும். மற்றும், அன்று சுழற்பந்து வீச்சாளருக்கு பெரிதும் வேலை இல்லை, என்பதை உணர்ந்திருந்தால் இதனை செய்திருக்க மாட்டார். ஆனால், தவறாக செய்தார். செய்யும் தவற்றுக்கு தண்டனை வழங்க வேண்டாமா? கொடுத்தார். மோர்கன், தனியொருவர் மட்டுமே 17 சிக்ஸர்கள் அடித்தார். அதிலும் அவர் டீப் லெக், டீப் மிட் ஆண், லாங் ஆண் திசைகளில், மடக்கி சிக்ஸர் அடிக்கும் பொருட்டு வீசப்பட்டார். அவரும், பரிதாபம் இன்றி,  விளாசினார். இங்கிலாந்து ரசிகர்களுக்கு, உள்ளமும் உடலும் குளிர, ஆஃப்கானிஸ்தான் அணியிற்கு "ஆளை விடுங்கடா சாமி" என்பது போன்று இருந்தது. 200க்கும் மேல் ஸ்ட்ரைக் சதவீதத்தில் நொறுக்கினார். சதம் அடித்தார். 71 பந்துகளில் 148 ரன்கள் குவித்து, ஆட்டமிழந்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், பேட்ஸ்மேன் அடித்த அதிக சிக்ஸர்கள் இது. இறுதியில், மொயீன் அலி சில பௌண்டரிகள் அடிக்க, 397/6 என ஸ்கோருடன் முடித்தார்கள். கடைசி 20 ஓவர்களில் 233 ரன்கள் அடிக்கப்பட்டது. ரஷீத் கான் வீசிய 9 ஓவர்களில் 110 ரன்கள் வழங்கியுள்ளார். உலகக்கோப்பையில், ஓர் பந்துவீச்சாளர் வழங்கிய அதிக ரன்களின் பட்டியலில் முதல் இடம். அனைவரும், அவர் மீது நம்பிக்கை கொள்ள, மோர்கன் அவை அனைத்தையும் உடைத்தெறிந்தார். ஒரு சுழற்பந்து வீச்சாளரும் விக்கெட் கைப்பற்றவில்லை.

ஆஃப்கானிஸதான் அணியின் பேட்டிங்கை பற்றி கூற எவ்வித செய்தியும் இல்லை. வழக்கம் போன்று, பொறுமையாக விளையாடி, இறுதியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதில் ரஷீத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நீங்கள் என்னை வினவலாம், சுழற்பந்திற்கு வேலை ஏதும் இருக்காது என கூறினீர், ஆனால் அதில் ரஷீத் மற்றும் எவ்வாறு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்? என. இங்கு தான் மோர்கனின் தந்திரத்தையும், யுக்தியையும் புரிந்துக்கொள்ள வேண்டும். அதில் ரஷீத், கால் சுழற்பந்து வீச்சாளர். இங்கு வேகத்திற்கு வேலையுண்டு ஆனால் சுழற்சி இல்லை என புரிந்த மோர்கன், வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கும் தருணங்களில் மட்டுமே அதில் ரஷீதிடம் பந்தை வழங்கினார். இவரும், பிட்சில் வேகம் உள்ளது என அறிந்து, சிறிது வேகத்துடனும், வேகம் குறைத்தும் மாற்றி மாற்றி வீசினார். அதற்கு ஏற்றவாறு, அருகில் உள்ள காலி இடங்களில், ரன்களை கட்டுப்படுத்தும் எண்ணத்தில், ஃபீல்டர்களை அமைத்து நிறுத்தினார். அதன் காரணமாக விக்கெட் கைப்பற்றினார். ஆனால், குல்படின் நைப் இதனை செய்ய தவறியதால், இங்கிலாந்து அணி மிக எளிதாக ரன்களை அடித்தார்கள். அனுபவத்தின் பயன், இங்கிருந்து தெரிந்திருக்கும்.

"யானைக்கும் அடி சறுக்கும்" என்கிற பழமொழி ரஷீத் கானை காணும்போது நன்கு விளங்கியது

ஆட்ட நாயகன் விருது - சந்தேகமின்றி மோர்கன்.  

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?