2021 இலங்கை - இங்கிலாந்து தொடர் !!

இலங்கை அணியை குறித்து முதன் முதலில் வெளியிடப்பட்ட செய்தி யாதெனில், கண்டிப்பாக  தென் ஆஃப்ரிக்கா நாட்டுக்கு பயணம் மேற்கொள்வர். அதுவும், அட்டவணையிட்டவாறு, 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும் என்பதே தான். தலைப்பில், இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையே நடக்கவிருக்கும் தொடர் என எழுதிவிட்டு இங்கு தென் ஆஃப்ரிக்கா நாட்டைப்பற்றி குறிப்பிடுகிறாயே ? என நீங்கள் கேள்வி கேக்கலாம். மீண்டும் கூறுகிறேன், இப்பதிவு இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையே நடக்கவிருக்கும் தொடரை குறித்ததே.

அப்போது, ஏன் தென் ஆஃப்ரிக்கா ? இங்கிலாந்து - தென் ஆஃப்ரிக்கா தொடர், சில கொரோனா தொற்றுக்கள் உறுதியானதால், ரத்தானது. அதனைத்தொடர்ந்து, இலங்கை அணியும், தென் ஆஃப்ரிக்கா நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை விரும்பமாட்டார்கள் என அனைவரும் எதிர்பார்த்த தருணத்தில், இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணி, பயணத்துக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. அதன், அறிவிப்பை நான் இங்கே சிறிதாக பதிவிட்டேன்.

இலங்கை - இங்கிலாந்து தொடரை கண்டோமேனில், இங்கிலாந்து அணி வருகின்ற ஜனவரி மாதம், 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்கள். இதில், பயணம் மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்தின் அணி வகுப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன், அறிவிப்பை இப்பதிவில் நாம் பாப்போம்.

முன்னதாக நான் கூறியவாறு, Rory Burns மற்றும் Ollie Pope ஆகிய இருவரும், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள மாட்டார்கள். அவர்களுடன், Archer மற்றும் Stokes ஆகிய இரு சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

மொயின் அலி அவர்கள், ஒன்றரை ஆண்டுக்கு பிறகு, இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் மீண்டும் களமிறங்கவுள்ளார். அவருடன், Olly Stone எனும் இளம் வீரரையும் நியமித்துள்ளார்கள். இம்முறை 3 Wicket Keeperகளும் பயணம் மேற்கொள்வர். 

சென்ற முறை, 2018ம் ஆண்டில் இங்கிலாந்து அணி இலங்கைக்கு தொடர் பயணம் மேற்கொண்ட போது, இலங்கை அணியை ஒரு முறையும் வெற்றி பெற அனுமதிக்காமல், இங்கிலாந்து அணி வெற்றி வாகையை சூடியது. மீண்டும், இச்சம்பவத்தை நிகழ்த்துமா ?  

இங்கிலாந்து அணி : Joe Root(c), Moeen Ali, James Anderson, Jonathan Bairstow, Dom Bess, Stuart Broad, Jos Buttler, Zak Crawley, Sam Curran, Ben Foakes, Dan Lawrence, Jack Leach, Dom Sibley, 
Olly Stone, Chris Woakes, Mark Wood
    

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?