SL vs ENG - இரண்டாம் Test, நான்காம் நாள் Review
பொதுவா, ஒரு test matchல என்னதான் dominant performance கொடுத்தாலும், ஏதாவது ஒரு sessionல சொதப்பிட்டா, மொத்த matchசுமே கை'ய விட்டு போயிடும். சிங்கத்தோட மொத்த உழைப்பையும் வீணடிச்சு, அதோட பரிசை எப்படி ஒரு Hyena, பிடிங்கிட்டு போவுதோ, அப்போ ஒரு depressed situation ஏற்படும். அந்த மாதிரி ஒரு சொதப்பல் தான், இங்க Sri Lankaவுக்கு நடந்திருக்கு.
நேத்து, 339/9னு இருந்த England, அதுக்கு அப்புறம் வெறும் 5 runs தான் add பன்றாங்க. இந்த பக்கம் Embuldeniyaவோட சம்பவத்தை தூக்கி சாப்புட்ற மாதிரி, அந்த பக்கத்துல இருந்து Dom Bess மற்றும் Jake Leach, சரமாரியான சம்பவம் செய்யுறாங்க. ஒன்னும் இல்ல, 4வது நாள்ல இருந்த ஒரு turn, மூணாவது நாள்ல விட அதிகமா இருந்துச்சு.
Pitch'அ பொறுத்த வரைக்கும், ஏகப்பட்ட deviation இருந்துச்சு. கூடவே, நல்ல bounce'உம் இருந்துச்சு. இந்த ரெண்டு விஷயத்தையும் சரியா use பண்ணுறாங்க. காத்துல நல்ல flight பண்ணி bowl பண்ணிட்டு இருந்தாங்க. Batsmanனோட பொறுமையா எந்த அளவுக்கு சோதிக்க முடியுமோ, அந்த அளவுக்கு சோதிச்சு, ஆசைய காட்டிட்டே இருந்தாங்க.
Slip, short leg, Silly pointன்னு bowlerரோட turnனுக்கு ஏத்த மாதிரி, field set up மாத்திட்டே இருக்காரு Root. Sri Lankaவுக்கு, அவங்க ஊர் conditionsல விளையாட முடியாம, அவசர பட்டு பட்டு out ஆகிட்டே இருந்தாங்க. இதுல நெறைய எடத்துல தவறான shots பார்க்க முடிஞ்சுது.
இதுலயும் Embuldeniya மட்டும் exception. என்னடா இது, இந்த series முழுக்க, Embuldeniya Embuldeniyaன்னு சொல்லிட்டே இருக்கியே, விட்ட அவருக்கு writingலேயே சிலை ஏதாவது வெச்சுடுவா போலயே ?ன்னு இந்த post படிக்கிற ஒவ்வொருவருக்கும் எண்ணம் வந்திருக்கும். ஆனா, அவருக்கு மட்டும் இந்த series, ஒரு வரப்பிரசாதம்.
ஆமா, இந்த seriesல மீதி எல்லாரும் சொதப்புனாப்போவும் சரி, சில பேர் அப்போப்போ performance கொடுத்தப்போவும் சரி, இவரோட game கொஞ்சம் கூட குறையல. Sri Lankaவோட strike bowlerரா இவர் emerge ஆகி இருக்காரு. அதை தாண்டி, இந்த கடைசி inningsல, ஓரளவுக்கு நல்லா batting பண்ணி, 164ன்னு ஒரு target கொடுக்க முடிஞ்சுது. இவரோட 40 runs எடுத்துட்டா, மிஞ்சுறது, குப்பை தான்.
ஆனா, அதை தாண்டி ஒருத்தருக்கும் spin play பண்ண தெரியல. எல்லாரும் அவசரப்பட்டுட்டு தான் இருந்தாங்க. இந்த அவசரதுனால, ஒரு session முழுக்க சொதப்பி, அதுக்கு அடுத்து திரும்ப விளையாடுன England easyயா chase பண்ணிட்டு போயிட்டாங்க.
Comments
Post a Comment