SL vs ENG - இரண்டாம் Test, இரண்டாவது நாள் Review

நேத்து, நாள்ல பொறுத்த வரைக்கும், Sri Lanka நெனச்சத விட கொஞ்சம் பொறுமையா விளையாடுனாங்க, flat pitch'அ ஒழுங்கா use பண்ணலன்னு நான் சொல்லிட்டு இருந்தேன். ஆனா, அதை தாண்டி Angelo Mathews'ஓட ஆட்டம் நல்ல இருந்துச்சுன்னு சொன்னேன். கூடவே, Andersonனுக்கு வயசானாலும் இன்னும் அவரோட performance குறையவே இல்லனும் சொல்லியிருந்தேன். அது எல்லாமே நடந்துச்சு.

முதல்ல, நான் Anderson கிட்ட இருந்து ஆரம்பிக்குறேன். மனுஷனுக்கு, வயசே ஆவதான்னு நமக்கு நாமளே கேட்டுக்குற அளவுக்கு, இன்னும் அதே control'ஓட bowl பண்ணிட்டு இருக்காரு. Test cricketல தன்னோட 30வது 5 wicket haul எடுக்குறாரு. Fast Bowlerகள்'ல Richard Hadlee மட்டும் தான் இவரை விட அதிக 5 wicket hauls எடுத்து இருக்காரு ( 36 ). 

வானத்துல மேகம் இருந்தா மட்டும் தான் effectiveவா இருப்பாரு, Clouderson அப்படி இப்படினு குறை சொன்னவன் எல்லாருக்கும், தான் யாருனு இன்னொரு முறை நிரூபிச்சிட்டு போறாரு. Cricketல ஒரே கட்சி தான், ஒரே கொடி தான், அது இந்த Andersonனோடது தான் bowling மூலமா சொல்லிட்டு போயிட்டு இருக்காரு. இன்னிக்கி நாள் முடிக்கும்போது, 40 runs கொடுத்து அதுல 6 wicketடுகள கழட்டி எடுத்திருக்காரு. 

இவரை தாண்டி, Sri Lankaவோட performance, impressiveவா இருந்துச்சு. நேத்து நல்லா ஆடுன Mathews, இன்னிக்கி நாள் ஆரம்பிக்கும்போதே தன்னோட wicketட கொடுத்துட்டு போகுறாரு. ஆனா, இவருக்கு அடுத்து கீழ்தளத்துல விளையாடுன batsman எல்லாரும் ஏதோ ஒரு வகையில contribute பன்றாங்க.

எங்க ரொம்ப சின்ன scoreல restrict ஆயிடுவாங்களோன்னு எல்லா Sri Lankan fans'உம் பயந்துட்டு இருக்கும்போது, யாமிருக்க பயமேன்'ன்னு Dickwella நின்னு விளையாடுறாரு. ஒரு எடத்துலயும், தன்னோட timing miss ஆவல. இறங்கி வந்து அவரு அடிச்ச ஒவ்வொரு drives'உம் அருமையா இருந்துச்சு. ரொம்ப positive'ஆன approach.

அவரு கூட No.8ல உள்ள வந்த Dilruwan Perera, ரொம்ப neatடா defend பண்ணி விளையாடுறாரு. Dickwell 92க்கு out ஆனதுக்கு அப்புறம், Dilruwan Perara கொஞ்சம் கொஞ்சமா chance எடுக்க ஆரம்பிச்சாரு. நெறய எடத்துல gaps'உம் pick பண்ண ஆரம்பிச்சாரு. இவங்க ரெண்டு பேரோட ஆட்டம், 381ன்னு ஒரு நல்ல scoreருக்கு கொண்டு போயி நிப்பாட்டிடுச்சு. 

இங்கிலாந்து teamம பொறுத்த வரைக்கும், ஒரு spinner கூட wicket எடுக்கல. Wickets எடுத்தது எல்லாமே pacers தான். ஆனா, Sri Lankaவுக்கு அப்படி இல்ல. வழக்கம் போல Embuldeniya, சடங்கு வேலைகள்ல ஆரம்பிக்குறாரு, 2 wickets மூலமா. 

Formoutல இருக்குற Dom Sibley மற்றும் Zak Crawley, spinனுக்கு எதிர்க்க இந்த தொடர் முழுக்க ரொம்ப தடுமாறுறாங்க. அதோட தொடர்ச்சி தான், இன்னிக்கி score எதுவும் பெருசா பண்ணாம, தங்களோட wicketடுகள கையில கொடுத்துட்டு போனது. அதுக்கு அப்புறம், வழக்கம் போல, Root நின்னு கப்பலை சரி செய்யுறாரு. அவரு கூட, Bairstow நல்லா ஒத்துழைக்குறாரு.

இங்க, Sri Lankaவை பொறுத்தவரைக்கும், அவங்களோட திட்டம் ஓரளவுக்கு சரியா வேலை செய்யுது. என்னதான், 400க்கும் மேல score அடிக்காம 381க்கு all out ஆனாலும், ரொம்ப நேரம் நின்னு விளையாடுனது, pitch'அ காய வெக்குது. அப்படி காஞ்சு போயி, புழுதி பறக்க ஆரம்பிக்கும் போது, Sri Lankan team all out ஆவுறாங்க. 

So, obvious'அ spinனுக்கு எடுத்துக்கொடுக்க ஆரம்பிக்குது. இந்த ஆரம்பமும், Embuldeniyaவோட நல்ல performance'உம், Englandதுக்கு எமனா அமையுது. நாளைக்கி, இங்கிலாந்து எப்படி spin bowlingக கையாளுறாங்கன்னு பாப்போம். நிச்சயமா, Root சமாளிச்சிடுவாரு. ஆனா, மத்தவங்களோட கதை நாளைக்கி தான் தெரியும். 

        

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?