SL vs ENG - முதல் Test, நான்காம் நாள் Reivew

நேத்து, Sri Lanka போராட ஆரம்பிச்சவங்க, இன்னிக்கி திரும்ப battingக்கு அவங்களால எந்த எல்லை வரைக்கும் போராட முடியும்ன்னு பல நாள் கழிச்சு, உலகத்துக்கு காமிச்சாங்க. இங்க, இங்கிலாந்து teamமோட பக்கத்துலயும் சில positives இருக்கு, Sri Lankan teamமோட பக்கத்துலயும் சில positives இருக்கு. இங்கிலாந்து ஜெய்க்குற நிலைமையில இருக்காங்கன்னு, வெளில இருக்கிறவங்களுக்கு பாத்தா தெரியும். ஆனா, match பாத்தவங்களுக்கு தான், Sri Lankaவோட போராட்டம் எப்படி இருந்துச்சுன்னு புரியும். 

நேத்து, 70 runs கிட்ட அடிச்சிருந்த Thirimanne, இன்னிக்கி தன்னோட centuryய reach பண்ணுறாரு. 8 வருஷம் கழிச்சு, test cricketல Thirimanne அடிக்கிற முதல் century இது. கடைசியா, 2013ல Bangladeshக்கு எதிர்க்க century அடிச்சது. அதுக்கு அடுத்து test cricketல அவரோட average எடுத்து பார்த்தோம்னா, 20  இருந்துச்சு. ஒரு top order batsmanனுக்கு, இந்த averageலாம் பத்தாது.

Rootடோட ஒரு வருஷ தவத்தை நாம பெருமையா பேசும்போது, Thirimanneவோட 8 வருஷ தவத்தை நாம பாரட்டலைன்னா நல்லா இருக்காது. இன்னிக்கி அவரு ஆடுன ஆட்டம், அவ்ளோ நேர்த்தியா இருந்துச்சு. மனசுல ஒரு அமைதி. அந்த அமைதியோடு சேர்ந்து புத்திசாலித்தனம். இது ரெண்டும் கலந்த வகையில தான் Thirimanneவோட ஆட்டம் இருந்துச்சு.

அவரு creaseல இருக்கும்போது, trial runs'அ cross பண்ணி, 150 runsக்கும் மேல target வெக்கப்போறாங்கன்னு, எல்லாரும் எதிர்பாத்துட்டு இருந்தாங்க. பழைய Sri Lankaவ பாத்த மாதிரியே இருந்துச்சு. ஆனா, அது எல்லாத்தையும் தவிடு புடியாகினது, Jake Leach. 

Jake Leach பத்தி சொல்லனும்னா, கடைசி 2 வருஷத்துல வெறும் 2 first class matches தான் ஆடுனாரு. அதுக்கு காரணம், தனக்கு இருந்த வியாதி. உடம்பு சரி இல்லாம போயி, நெஞ்செரிச்சல் காரணமா அவதிப்பட்டு, Crohn's disease வந்து, எங்க நம்மளால test cricketல மறுபடியும் விளையாட முடியாதோன்னு பயமாகிடுச்சு. ஆனா, அது எல்லாத்தையும் கடந்து, இப்போ திரும்ப உள்ள வந்து, 5 wickets எடுத்திருக்காரு.

இவரோட bowling பொறுத்த வரைக்கும், செம drift ஆகுது. Sharp turn இருந்ததுனால, Sri Lankaவால ஒண்ணுமே பண்ண முடில. Of

course, Mathews நல்லா ஆடுனாலும், அவரு துணையா வேற யாரும் lower orderல support பண்ணல. 359 runsக்கு all out ஆகுறாங்க. இங்கிலாந்துக்கு target 75 runs. 

இங்கிலாந்து தான் easyயா ஜெயிக்க போறாங்கன்னு நெனச்சுட்டு இருக்கும்போது, within few minutes, 14 runsக்கு 3 wickets விழுந்து கெடந்துச்சு. அதுக்கு காரணம், ஒரு பக்கம் எம்புல்டெனியா'வோட sharp turnனு சொன்னாலும், இன்னொரு பக்கம் இங்கிலாந்து batsman கிட்ட இருந்த அவசரம் தான். 

அந்த மூணு wickets விழுந்ததும் அப்புறம், Dan Lawrence மறுபடியும் எப்படி பொறுமையா கையாளனும்னு, தன்னோட game மூலமா காட்டுறாரு. 36/3ன்னு score இருக்கும்போது, bad ight காரணமா, இன்னிய நாள் தடைபடுது.   

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?