2019 ஆண்டு - ஸ்டோக்'ஸின் தரமான சம்பவம்

மரத்தினால் செய்யப்பட்ட, ஓர் 5 அங்குல கோப்பையை, கைப்பற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் பெரிதும் போராடுவர். இவ்விரு அணிகளும், எதிரெதிரே மோதிக்கொண்டால், அப்போட்டியை பார்வையிட களம் வந்த பார்வையாளர்களுக்கு ஓர் முரட்டு விருந்தாக அமையும். அப்போட்டியில் இடையில் உள்ள தருணங்கள், போட்டியிடும் விதம், ஆக்ரோஷத்தனம், சண்டைக்காட்சிகள் என மிக மிக அற்புதமாய் அமையும். இவ்வாறு, இரு அணிகளும் தீவிரம் காட்டுவதன் முக்கிய காரணம், 138 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஓர் சம்பவம் தான். அச்சம்பவமும், அதனால் மாற்றியமைக்கப்பட்ட வரலாற்றுக்கு மற்றோர் பதிவில், நான் முழு விவரத்துடன் பதிவிடுகிறேன். 

2019ம் ஆண்டில், உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின், இரு அணிகளும் ஆஷஸ் போட்டியில், இனைந்து போரிட துவங்கினர். முதல் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித்தின் இரட்டை இன்னிங்ஸ் சதங்களின் காரணத்தால், 251 ரன்கள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இரண்டாம் போட்டியில், லபூஷனே'வின் தடுப்பு முயற்சி, சமன் என்கிற முடிவை வழங்கியது. ஆஸ்திரேலியா அணியை பொறுத்த வரை, 3ம் போட்டியை வெற்றிபெற்றால், ஆஷஸ் கோப்பையை கைப்பற்ற இயலும். அதே தருணத்தில், இங்கிலாந்து அணிக்கு, இப்போட்டியை வென்று, தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க, ஆஷஸ் கோப்பையை கைப்பற்ற ஏதேனும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் மனதினுள் இருந்தது. 

மூன்றாம் டெஸ்ட் போட்டி, லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது, தேதி : 22 - 26 ஆகஸ்ட் மாதம், 2019 

முதல் நாள்:

முதல் நாள் போட்டி, மழையின் காரணத்தால், பெரிதும் பாதிப்படைந்தது. இருப்பினும், சிறிதளவு போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாளில், ஆஸ்திரேலியா அணி 179 ரன்களுக்கு, அனைத்து விக்கெட்டுகளை இழந்து, ஆயுதமின்றி நின்றது. டேவிட் வார்னர், அதிகபட்சமாக 65 ரன்கள் குவித்தார். மழையின் இடையூறு, பேட்ஸ்மேன்களுக்கு எதிர்மாரையாக அமைந்தது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கோ, குழந்தையின் கைகளில் ஈட்டப்பட்ட சொப்பு சாமான்களை போன்று, அவர்களுக்கு ஏற்றவாறு, விளையாடினார்கள். பந்துவீச்சாளர்களின் பட்டியலில், ஜோஃப்ரா ஆர்ச்சர், 6 விக்கெட்டுகளை கைப்பற்றி முன்னிலையில் இருந்தார். 

இரண்டாம் நாள் :

இரண்டாம் நாள், மழை ஏதும் இல்லாமல், பளீரென வெயில் அடிக்க, போட்டி நடைபெறுவதற்கான நிபந்தனையுடன் காணப்பட்டது. ஆயினும், இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவையும் கடந்து, மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டென்லி அவர்கள் மட்டுமே இரட்டை இலக்க (digit) ரன்களை பதிவிட்டார். முதல் நாள் மழை, இரண்டாம் நாளில், மறைமுகமாக தாக்கியது. இங்கிலாந்து அணி 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆதலால், ஆஸ்திரேலியா அணி, 112 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஹேசில்வுட், 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸ்திரேலியா அணிக்கு, வெற்றி மிகவும் அருகில், தங்கள் கண்களில் தெரிந்தது. களமிறங்கினர், ஆஸ்திரேலியா அணியின் ஒப்பனர்கள். ஆனால், இரண்டாம் இன்னிங்சிலும் சறுக்கல் ஏற்பட்டது. இரு ஒப்பனர்களுமே, சொற்ப ரன்களுக்கு வெளியேற, விக்கெட் வேட்டை மீண்டும் பயணித்துக்கொண்டே இருந்தது. லபூஷனே'வை தவிர்த்து இடையில் உள்ளோர், தாங்கள் ஈட்டிய துவக்கத்தை, பயன்படுத்திக்கொள்ளாமல், வெளியேறினர். லபூஷனே, தந்து அரை சதத்தை நிறைவு செய்தார். இரண்டாம் நாளை, ஆஸ்திரேலியா அணி 171 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில்  முடிவுக்கு கொண்டு வந்தது, 283 ரன்கள் முன்னிலையுடன்.

மூன்றாம் நாள் :

மூன்றாம் நாளில், லபூஷனே 80 ரன்களுடன், வெளியேறினார். அவரை தொடர்ந்து, வேறு யாரும், ரன்களை ஈட்டாதததன் காரணத்தினால், 246 ரன்களுக்கு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, ஆஸ்திரேலியா அணி. இரண்டாம் இன்னிங்சில், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும், ஏதேனும் வகையில், தங்களுடைய பங்களிப்பை வெளிக்காட்டினர். 

இங்கிலாந்து அணிக்கு, 359 ரன்களை குவித்தால், வெற்றி நிச்சயம் என்கிற இமாலய இலக்கை வாழங்கியது ஆஸ்திரேலியா அணி. களமிறங்கினர். மீண்டும், துவக்கம் நன்றாக அமையவில்லை. இரு ஒப்பனர்களும், சிறிது கால இடைவெளியில் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய ரூட் மற்றும் டென்லி அவர்கள் இருவரும் அரை சதங்களை குவித்தார்கள். இந்த டெஸ்ட் போட்டியில், முதல் தருணம், பேட்டிங் துறை ஆதிக்கம் செலுத்தியது. இதன் உத்வேகம், இந்த டெஸ்ட் போட்டியின் முக்கியத்துவம். மூன்றாம் நாளையோ, 156 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்த நிலையில் முடித்தது, இங்கிலாந்து அணி.

நான்காம் நாள் ( இறுதி நாள் ) :

களத்தில் கால் தடத்தை பதித்திருந்தார் பென் ஸ்டோக்ஸ். ஜோ ரூட் 77 ரன்களுக்கு விடைபெற்றார். அவருக்கு பின் களமிறங்கிய பேர்ஸ்டோ'வுடன் இனைந்து 86 ரன்கள் கூற்றாக கட்டியமைத்தார்கள். 245கு 4 விக்கெட்டுகளை இழந்து, மேலும் 113 ரன்களை ஈட்டினால் வெற்றி நிச்சயம் என்று, மிகவும் வசதியான நிலையில், காணப்பட்டது இங்கிலாந்து அணி. ஆஸ்திரேலியா அணிக்கோ, கோப்பையை கைப்பற்ற வேண்டம் என்கிற நிபந்தனை. அதற்கு விக்கெட்டுகளை கைப்பற்றி, அழுத்தத்தை வழங்க வேண்டும். 

வழங்கினர். முதலில் பேர்ஸ்டோ, 36 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டார். ஹெசிலவுட், மீண்டும் சீறினார். அடுத்து, பட்லர். 1 ரன்னுக்கு வீழ்த்தப்பட்டார். பின்னர், வோக்ஸ். இவரும் 1 ரன்னுக்கு வீழ்த்தினர். அழுத்தம் தற்போது, இங்கிலாந்து மற்றும் ஸ்டோக்ஸின் மீது திரும்பியது. 2019ம் ஆண்டு உலகக்கோப்பையின் நட்சத்திர நாயகன், மீண்டும் அணியை கரை சேர்பானா ? இல்லையேல், ஆஸ்திரேலியா அணி, தங்களுடைய வெற்றி முத்திரையை பதிக்குமா ?

பின்னர், களமிறங்கிய விக்கெட்டுகளும் சாய்ந்துக்கொள்ள, 286/9 என்கிற நிலையுடன் தவித்துக்கொண்டு இருந்தது. களத்தில் நின்றுக்கொண்டிருந்த ஸ்டோக்ஸ் அவர்களின் மனதில் " ஐந்தாம் நாளுக்கு, இப்பொடியை தள்ளினால், வெற்றிபெறுவது ஆஸ்திரேலியா அணியாக தான் இருக்கும். போட்டியை சமன் செய்ய இயலாது. ஒன்று வெற்றி, அல்லது தோல்வி. யார் நன்றாக விளையாடுகின்றாரோ, அவரையே வெற்றி வந்து சேரும்" என்று சூழலை புரிந்துக்கொண்டார். 

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில், அதிரடியாக விளையாடும், தனக்கு உரிய ஓர் ஆட்டத்தை இங்கு ஆடினார். அடிக்க துவங்கினார். சிக்ஸர்களும், ஃபோர்களுமாய் குவித்தார். ரன்கள் பீறிட்டு வந்தது. மீண்டும், ஆஸ்திரேலியா அணியின் பக்கம், அழுத்தம் திரும்பியது. மறுபுறத்தில் இருக்கும் லீச்சிடம், முடிந்தவரை ஸ்ட்ரைக் வழங்காமல், தானே விளையாடிக்கொண்டிருந்தார். எவ்வாறாவது, லீச் அவர்களை ஸ்ட்ரைக்கில் வர வைக்க வேண்டும், என்கிற பிடிவாதம், ஆஸ்திரேலியா அணியிடம் இருந்தது. காரணம், ஸ்டோக்ஸ் மறுபுறத்தில், தனியொருவனாக நின்று, அனைத்து பந்துவீச்சாளர்களையும் வெளுத்து வாங்கினார். சதத்தை அடைந்தார். ஆயினும், போட்டி முடிவடையவில்லை. ரன்களின் அருகில் நெருங்க நெருங்க, அனைவரிடமும் படபடப்பு அதிகரித்தது. அதற்கு, இடையில், ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த லியொன் அவர்கள், ஓர் ரன் அவுட்டை தவற விடுவார். போட்டி இன்னும் நிறைவடையவில்லை, வெற்றியாளர் யார் என்கிற கேள்வி அதிகரித்துக்கொண்டே இருந்தது. 

ஆஸ்திரேலியா அணியே வெற்றிபெறும் என்கிற முடிவிற்கு வந்தபின், சில நேரம் கழித்து, ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா ? என்கிற கேள்விக்கு வந்தடையும் இடைவெளிக்குள், ஸ்டோக்ஸின் உக்கிரத்தை வெளிக்காட்டும். ஆயினும் போட்டி நிறைவு பெறவில்லை. நடுவரின் தீர்வில் ஏற்பட்ட தவறு, போட்டி முடிவடைந்ததுக்கு பின், சர்ச்சைக்கு இடம் வகுத்தது.                      

358/9 என்கிற நிலையில் இருந்தது. இப்போட்டி, கிரிக்கெட் உலகின் மூன்றாவது, டைட் டெஸ்ட் போட்டியாக மாறிவிடுமோ என்கிற அச்சமும், அனைவரிடத்திலும் நிலவியது. அவ்வாறு, உள்ள நிலையில், கவர்ஸ் திசையில், நான்கு ரன்களை குவித்து, வெற்றியை ஈட்டி தந்தார். ஆட்ட நாயகன் விருதை பெற்றதும், ஸ்டோக்ஸ் அவர்கள் தான். தன்னுடைய ஆட்டமிழக்காத 135, எத்தனை ஆண்டு காலம் ஆனாலும், பலரால் போற்றப்படும். தனது, கிரிக்கெட் வாழ்வினை புரட்டிப்பார்த்தால், 2019 எனும் ஆண்டு, பெரிதாக குறிப்பிடப்பட்ட ஆண்டாக அமைந்திருக்கும். 2019ம் உலகக்கோப்பை சிறப்பம்சம், பின்னர் ஆஷஸ் சம்பவம் என பலவற்றை பட்டியலிடலாம். அதே தருணத்தில், ஆஸ்திரேலியா அணிக்கு, கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாத நிலையாக மாறியது. 
பார்வையிட்ட அனைத்து ரசிகர்களிடமும், ஸ்டோக்ஸ் கூறுவது " Scene முடியுறதுக்கு முன்னாடி scene போட கூடாது ".

ஆனால், இதைக்கடந்து, இந்த ஓர் ஆட்டம், என்னைப் பொறுத்த வரை, தன்னம்பிக்கையின் சிகரமாகும். 

" யானைக்கு தேவை தும்பிக்கை, மனுஷனுக்கு தேவை நம்பிக்கை !!! "    
 

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?