SL vs ENG - இரண்டாம் Test, முதல் நாள் Review

இந்த ரெண்டாவது test matchக்கு நாம வந்துட்டோம்னா, gameக்கு ஒரு 2 நாள் முன்னாடியே, Sri Lankan team சில changes announce பன்றாங்க. சில players'அ rule out பன்றாங்க. Series ஜெயிக்க முடியலைனாலும், drawவாச்சும் பண்ணனும், அதே நேரத்துல கௌரவத்தோட இந்த series'அ முடிக்கணும்'ன்னு ரொம்ப தீவிரமா இருந்தாங்க. அப்படி இருக்கும்போது, Galleல flat track அமையுது.

Toss ஜெயிக்கிற Sri Lanka, முதல்ல batting choose பண்ராங்க. James Anderson, இந்த matchல உள்ள வர்றாரு. வந்த உடனே 2 wickets எடுக்குறாரு. Flat track கொடுத்தாலும் சரி, Spin track கொடுத்தாலும் சரி, எங்க வேணும்னாலும் என்னால bowling போட்டு wicket எடுக்க முடியும்ன்னு திரும்பவும் ஒரு வாட்டி சொல்லுறாரு. 

Pitchல எதுவுமே இல்லைன்னா என்ன, நான் crease'உம் shoulder'உம் பயன்படுத்தியே wicket எடுப்பேன்னு சொல்லாம சொல்லுறாரு. 600 test wickets எடுத்த ஜாம்பவான்னா சும்மாவா ?. ஆனா, அவரை தாண்டி வேற யாரும் ஒழுங்கா bowl பண்ண முடில. அதுனால, Sri Lankaவுக்கு ஓரளவுக்கு நல்ல நாளா அமஞ்சியிருக்கு. 

என்னப்பா சொல்லுற, Mathews century போட்டிருக்காரு, Sri Lanka வெறும் 4 wickets மட்டுமே இழந்து 229 runs அடிச்சி, solid positionல இருக்காங்க, நீ என்னனா ஓரளவுக்கு நல்ல நாள்னு சொல்லுற ? அப்படி புரியாதவங்களுக்கு, கீழ நான் சில explanation கொடுக்கப்போறேன். படிச்சிகிட்டே வாங்க.

Sri Lankan team பண்ண சில மாற்றங்கள், நல்லாவே வேலை செஞ்சுது. முதல்ல, திரிமன்னே. முதல் testல அடிச்ச centuryக்கு அடித்து தொடர்ச்சியா ரெண்டாவது 40+ score அடிக்குறாரு. 2015க்கு அப்புறம், திரிமன்னே தொடர்ச்சியா அடிக்கிற 40 + score இது தான். அவரும், Mathews'உம் ஆடுன ஆட்டம், 7/2ல இருந்து, கூடுதலா ஒரு 69 runs partnership கொடுத்துச்சு. 

அதுக்கு அடுத்து, சண்டிமல். திரும்பவும் நல்ல நேர்த்தியான ஆட்டம். அந்த சமயத்துல attack பண்ணா, எப்போ success கிடைக்கும்னு தெளிவா தெரிஞ்சி வெச்சுகிட்டு செயல்படுறாரு. அவரும், Mathewsஉம் சேர்ந்து 117 runs அடிக்கிறாங்க. அதுல, இவரு மட்டும் 52 runs. 

அப்புறம், Mathews. ஒரு பக்கம் நாம, வயசானாலும் இன்னும் styleஉம் performanceஉம் குறையவே இல்லன்னு Andersonன பாராட்டுனாலும், இன்னொரு பக்கம் Old Wine and friends improve with ageங்கிற பழமொழி சரியானதுன்னு திரும்ப திரும்ப நிரூபிச்சிக்கிட்டே இருக்காரு நம்ம Mathews.

அவரை பொறுத்தவரைக்கும் plan ரொம்ப simple. இன்னிக்கி pitchல எதுவுமே இல்ல, நாளையோட பாதி வரைக்கும், flat trackகா தான் இருக்கப்போகுது. இந்த England bowlerகள நாம் tired ஆகிட்டு, அதே நேரத்துல அவங்க batting வரும்போது, இன்னும் காஞ்சுபோன ஒரு pitchல விளையாடுனாங்கன்னா, spinnersக்கு நிச்சயமா ஏதாவது support கிடைக்கும். இதை தெளிவா செஞ்சிட்டு போகுறாரு. 

நான் ஏற்கனவே சொன்னேன்ல, இன்னிக்கி நாள் ஏன் ஓரளவுக்கு Sri Lankaவோட பக்கம் போச்சுன்னு. Flat Track'அ நல்லா பயன்படுத்தி, score பண்ணியிருந்தா, இன்னும் நல்ல நிலைமையில இருந்திருக்கலாம். ஆனா, இப்படி பொறுமையா விளையாடின

து, நாளைக்கி ஒருவேளை சின்ன scoreகுள்ள தடுத்து நிறுத்த, நிச்சயமா யோசிச்சிருப்பாங்க.       

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?