ஒரே நாளில் இரு கோப்பைகள் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

இந்நாளில், இரு முறை ஐபிஎலின் இறுதி போட்டி நடைபெற்றது. முதலில் 2012ம் ஆண்டு, பின்னர் 2018ம் ஆண்டு.

2012ம் ஆண்டு - ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் புதிரான மற்றும் தீர்வு செய்ய இயலாத ஆண்டு என்றே கூறலாம். இரு அணிகளை ஒப்பிட்டு, அதனுள் இவ்வணி தான் வெற்றி பெரும், என்று நாம் நினைக்கலாம், ஆனால் அதற்கு எதிர்மாறாகவே பல போட்டிகள் அமைந்துள்ளது. இதில், கொல்கத்தா அணி, ஆண்டின் தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மறுபுறத்தில், சென்னை அணி, தள்ளாடிய நிலையில், பிளே-ஆஃப் சுற்றை அடைந்தது. கொல்கத்தா அணி, முதல் இரண்டு இடங்களில் நின்றதால், குவாலிஃபையர் 1ஐ வென்று நேரடியாக இறுதியை அடைந்தது. மறுபுறம், சென்னை அணி, நெட் ரன் ரேட் வகித்ததில் சில புள்ளிகள் காரணமாக முன்னிலை பெற்று பிளே-ஆஃப் சுற்றை அடைந்தது. ஆனால், பிளே-ஆஃப் சுற்றில் சென்னை அணி சீறியது.  மும்பை அணியை எலிமினேட்டர் போட்டியில் அடித்து துரத்த, குவாலிஃபையர் 2ம் போட்டியில், சென்னை சேப்பாக்கத்தில், டெல்லி அணியை வைத்து குதிரை தாண்டி விளையாடியது. அதன் காரணமாக இறுதி போட்டியை அடைந்தது சென்னை அணி. இறுதி போட்டி நடைபெற்ற இடம், சென்னை சேப்பாக்கம் மைதானம். அதன் சென்னை அணியிற்கு தான் வெற்றி சதவீதம் அதிகம் என்று எண்ண வேண்டாம். காரணம், இதற்கு முன், லீக் போட்டிகளில் இவ்விரு அணிகளிலும், சென்னையில் மோதிய போட்டியில், கொல்கத்தா அணி வென்றது.

டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கொல்கத்தா அணி அவ்வாண்டில் தங்களின் பந்துவீச்சிற்காக மிகவும் பெயர் வாங்கிய அணி. அவ்வாறு காணப்படும் அணியினை எதிர்த்து மிகவும் எளிதாக 190/3 என்று இமாலய இலக்கை அடித்தது சென்னை அணி. ஹஸி மற்றும் முரளி விஜய் சிறப்பாக தொடங்க, பின்னர் ரெய்னா தனது உச்சகட்ட அதிரடியினை வெளிப்படுத்தினார். வெறும் 38 பந்துகளில் 73 ரன்களை குவித்தார். சுனில் நரைனிற்கு அன்று மறக்க வேண்டிய நாளாக அமைந்தது. ரெய்னா, அவரை குறிவைத்து படையளித்தார். சென்னை அணி, இதனை வென்றால் தங்களின் மூன்றாவது கோப்பையை கைப்பற்றியதாகும் மற்றும் தொடர்ச்சியாக 3 கோப்பைகள். மறுபுறம் கொல்கத்தா அணி, தங்களின் முதல் கோப்பையை வெல்ல போராடியது. தொடக்கத்திலேயே, கம்பீர் தனது விக்கெட்டை இழக்க, சென்னை அணியிற்கு தான் வெற்றி நிச்சயம் என அனைவரும் நினைத்தார்கள். ஆனால், சிறிது நேரம் கூட அந்த நினைப்பு நீடிக்கவில்லை. யாவரும் எதிர்பாராது மண்விந்தர் பிஸ்லா, அன்று ருத்திர தாண்டவம் ஆடினார். ஐபிஎல் கிரிக்கெட்டின் சிறப்பே இது தான். இந்தியாவில் உள்ள பல இளம் வீரர்களால் தங்களின் திறமையை உலகிற்கு வெளிக்காட்ட முடியும். வெகு விரைவாக 48 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். மறுபுறம் காலிஸ், சிறப்பாக ஓர் அரைசதத்தினை எட்ட, அங்கே சென்னை அணியின் கைகளிலிருந்து போட்டி நழுவிச்சென்றது. ஆனால், இருவரின் விக்கெட்டுகளை கைப்பற்ற, போட்டியில் இன்னமும் உயிர் உள்ளது என அனைவரும் நினைத்தார்கள். ஆனால், இறுதி ஓவரில், மனோஜ் திவாரி, இரண்டு பௌண்டரிகளை அடித்து கோப்பை வென்றுக்கொடுத்தார். ஆட்ட நாயகன் விருதினை பெற்றது மாணவிந்தர் பிஸ்லா.

2018ம் ஆண்டு- ஐபிஎல் கிரிக்கெட் அடுத்த கட்டத்தினை அடைந்த ஆண்டு என்றே கூறலாம். LBW சரி பார்க்க 3ம் நடுவர் தேர்வு வந்தது. கேமராவின் தரம் உயர்த்தப்பட்டது. ஒளிபரப்பின் தரமும் உயர்வடைந்தது. அணிகளின் அணிவகுப்பு, புரியாத புதிராகவே அமைந்து இருந்தது. குறிப்பாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி, இரு ஆண்டுகள் தடையின் பிறகு, மீண்டும் ஐபிஎல் தொடருக்கு களம் இறங்கியது. அதில், சென்னை அணியின் வீரர்களின் அணிவகுப்பினை அனைவரும் கேலி செய்தனர். காரணம், பல வீரர்களின் வயது 30க்கும் மேல் இருந்தது. சென்னை அணியின் வருகையை சிறப்பாக அமைக்க வேண்டாமா? அனுபவம் வாய்ந்த வீரர்களை வைத்து இறுதியினை அடைந்தது சென்னை அணி. தங்களின் பேட்டிங் மிகவும் வலுவாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு, பழைய சென்னை அணியினை பார்த்த வாறு இருந்ததது. மறுபுறம், ஹைதராபாத் அணி. தங்களின் பந்துவீச்சிற்காகவே பெயர் வாங்கிய அணி என்று கூறலாம். சிறிய ஸ்கோரினை அடிப்பார்கள். அதனை வைத்தே பந்துவீச்சாளர்கள் எதிராணியினை துவம்சம் செய்வார்கள். இவ்வாறே, லீக் போட்டிகளை கடந்து வந்தார்கள். ஒரு புறம் பேட்டிங்கின் ராஜா , மாரு புறம் பந்துவீச்சில் ராஜா. இதில், இவ்விரு அணிகள் லீக் போட்டிகளில் இரு முறையும், குவாலிஃபையர் சுற்றில் ஒரு போட்டியிலும் மோதிக்கொண்டது. ஆனால், மூன்றையும் ஜெயித்தது சென்னை அணி தான். இதற்கு முன், ஐபிஎல் தொடரை பொறுத்த வரை, இரு அணிகள் நான்கு முறை மோதிக்கொண்டால், அதில் மூன்று முறை மட்டுமே ஒரு அணியினால் ஜெயிக்க இயலும், நான்காம் முறை  மற்ற அணியே ஜெயிக்கும். ஆனால், அன்று .........

டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். கேன் வில்லியம்சன், அவ்வண்டின் தொடக்கத்திலிருந்து இப்போட்டி வரை சிறப்பான பேட்டிங்கை மட்டுமே வழிகாட்டினார். இன்றும் அது தான்  நடந்தது. ஆனால், இறுதியில், சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை நன்கு கட்டுப்படுத்தியதால் 178/6 என்கிற ஸ்கோரை எட்டியது ஹைதராபாத் அணி. அணியின் அதிக ஸ்கோர் அடித்தது கேன் வில்லியம்சன் - 47.

சென்னை அணி மிகவும் பொறுமையாகவே தொடங்கியது. தொடக்கத்தில் டூ ப்ளஸிஸ் தனது விக்கெட்டை இழந்தார். வாட்சன் அன்று முதற் 10 பந்துகளில் ரன் ஏதும் அடிக்காமல் விளையாட, இன்று அவர் சொதப்பிடும் வாய்ப்புகள் பல உண்டு என அணைத்து ரசிகர்களும் நினைத்தார்கள். ஆனால், அன்று அவ்வாறு நடக்க வில்லை. சிறிது நேரம் எடுத்துக்கொண்டதன் காரணம், பின்னாடி சீறி பாய்வதற்காகவே என்று அப்போது புரியவில்லை ஆனால் பின்னர் புரிந்தது. தனியாளாக, தன மீதி நம்பிக்கை வைத்த அணியிற்காக, எவ்வித எல்லையாக இருந்தாலும், அதனை அடைய வேண்டும் என்கிற மனதின் வெறி, அவரை ஊக்கப்படுத்தியது. 117 ரன்கள் 57 பந்துகளில் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் சந்தீப் ஷர்மா வீசிய ஒரு ஓவரில், 3 சிஸேர்கள் மற்றும் 2 பௌண்டரிகளை அடிக்க, அவரின் எல்லையை எதிராணியிற்கு உணர்த்தியது. இறுதியில் 2 ஓவர்கள் மீதம் வைத்து சென்னை அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்று, தங்களின் 3ம் கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை வென்றது ஷேன் வாட்சன்.  வருகையென்றால் இவ்வாறல்லவா இருக்க வேண்டும், என்று உலகிற்கு காட்டினார்கள். குறிப்பாக 4 முறை ஒரே அணியினை வென்று, ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்த நம்பிக்கையை உடைத்தெறிந்து சென்னை அணி.



   

           

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt