2022 மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை Schedule வெளியானது !

2021ம் ஆண்டின் துவக்க காலத்தில் நடைபெறுவதாக இருந்த மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர், கொரோனா நோயின் காரணத்தினால் ஓர் ஆண்டு காலத்துக்கு தள்ளிவைத்தது ICC. 2020ம் ஆண்டில் நடைபெறுவதாக இருந்த பல தகுதி சுற்று போட்டிகள் தடைபட்டது. அப்போட்டிகளை மீண்டும் நிகழ்த்தி, அதன் பின் பங்குபெறும் அணிகளை தேர்வு செய்வது குறுகிய காலகட்டத்தில் சாத்தியமற்ற காரியம் ஆகும். ஆதலால், ஓராண்டுக்கு இத்தொடரை நாங்கள் தள்ளிவைக்கிறோம் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின், தற்போது ICC வெளியிட்ட அறிக்கையில், 2022ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மகளிர் உலகக்கோப்பை தொடரின் அட்டவணையை இணைத்துள்ளார்கள். 

2022ம் ஆண்டில், நியூஸிலாந்து நாட்டில் நடைபெறவிருக்கும், மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் அட்டவணையை தற்போது வெளியிட்டது ICC. இத்தொடர், மார்ச் மாதம் 4ம் தேதியன்று துவக்கம் பெற்று, ஏப்ரல் மாதம் 3ம் தேதியன்று நிறைவு பெரும். இவற்றுள் 8 அணிகள் அடங்கும், அதில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆஃப்ரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 5 ஐந்து அணிகள், முன்னதாகவே தகுதிபெற்றுள்ளார்கள். மீதம் உள்ள 3 அணிகளை தேர்வு செய்ய தகுதி சுற்று போட்டிகள் நடைபெறும். 

29 நாட்கள் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 31 போட்டிகள் இடம் பெரும். இதில் 6 நகரங்களான Christchurch, Mount Maunganui, Auckland, Hamilton, Wellington மற்றும் Dunedin. இவற்றுள் Christchurch நகரில் உள்ள Hagley Oval மைதானம் தான், இத்தொடரின் இறுதி போட்டியை நடைபெற செயல்படும். 

Bay Oval, Tauranga
Fri 04 Mar 2022    New Zealand v Qualifier*    
Sun 06 Mar 2022    Qualifier v India*    
Tue 08 Mar 2022    Australia v Qualifier *    
Fri 11 Mar 2022    Qualifier v South Africa*    
Mon 14 Mar 2022    South Africa v England*    
Wed 16 Mar 2022    England v India*    
Fri 18 Mar 2022    Qualifier v Qualifier

University Oval, Dunedin
Sat 05 Mar 2022    Qualifier v South Africa     
Mon 07 Mar 2022    New Zealand v Qualifier    
Wed 09 Mar 2022    Qualifier v England    

Seddon Park, Hamilton
Sat 05 Mar 2022    Australia v England*    
Thu 10 Mar 2022    New Zealand v India*    
Sat 12 Mar 2022    Qualifier v India*    
Mon 14 Mar 2022    Qualifier v Qualifier    
Thu 17 Mar 2022    New Zealand v South Africa*     
Mon 21 Mar 2022    Qualifier v Qualifier*    
Tue 22 Mar 2022    India v Qualifier*     

Basin Reserve, Wellington
Sun 13 Mar 2022    New Zealand v Australia     
Tue 15 Mar 2022    Australia v Qualifier     
Tue 22 Mar 2022    South Africa v Australia 
Thu 24 Mar 2022    South Africa v Qualifier    
Fri 25 Mar 2022    Qualifier v Australia 
Sun 27 Mar 2022    England v Qualifier     
Wed 30 Mar 2022    Semi-Final 1    

Eden Park, Auckland
Sat 19 Mar 2022    India v Australia*     
Sun 20 Mar 2022    New Zealand v England     

Hagley Oval, Christchurch
Thu 24 Mar 2022    England v Qualifier*    
Sat 26 Mar 2022    New Zealand v Qualifier    
Sun 27 Mar 2022     India v South Africa*     
Thu 31 Mar 2022    Semi-Final 2*
Sun 03 Apr 2022    FINAL*
மகளிர் உலகக்கோப்பை தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில் நடைபெறவிருக்கும், ஆண்களுக்கான 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் அட்டவணை எப்போது வெளியிடப்படும் ? என நம் மனதில் கேள்விகள் இருந்தாலும், விடை மக்களாகிய நம் கைகளில் தன் உள்ளது. நாம், உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி, பாதுகாப்பாக சில நாட்கள் கடந்தோமெனில், கொரோனாவின் பாதிப்பு குறையும். அவ்வாறு, குறைந்தால் இத்தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். அதன் பின், நிச்சயம் பல செய்திகள் வெளிவரும். 

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?