மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தள்ளிவைப்பு !!
சில நாட்களாக, மகளிர் கிரிக்கெட் போட்டிகளை குறித்த செய்திகள், நிறைய வெளிவருகிறது. இந்த தசாப்தத்தை ( decade ) மகளிர் கிரிக்கெட்டின் எழுச்சியென்றே பெயர் சூட்டலாம். மகளிர் கிரிக்கெட்டின் மீது உள்ள ஆர்வமும், முக்கியத்துவமும் அதிகரிக்கும் அளவிற்கு அமைந்துள்ளது. இன்று வெளியாகிய செய்தி, சற்று மாறுதலுக்கு உரியதாக அமைந்தாலும், அதன் முழு முடிச்சினை அவிழ்த்தோம் என்றால், நிச்சயம் அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சி பொங்கும்.
தற்போது வெளிவந்த செய்தி யாதெனில், 2022ம் ஆண்டின் இறுதியில் நடைபெறவிருந்த, சர்வதேச மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை 2023ம் ஆண்டின் துவக்ககட்ட காலத்திற்கு தள்ளிவைத்துள்ளார்கள். பணிசுமையின் காரணத்திற்காக, இம்முடிவை ICC தேர்ந்தெடுத்துள்ளது. சரி, இதற்கும் நீங்கள் அவிழ்க்கவிருக்கும் முடிச்சிற்கும் என்ன சம்மந்தம் உள்ளது ?
மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை, ஆண்டிற்கு மிகவும் குறைந்த போட்டிகளில் மற்றும் பங்கேற்று விளையாடுவர். பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைவு. இவ்வாறு உள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்று நிறைவடைந்த 2020ம் ஆண்டின் மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரை பார்வையிட, ஏராளமானோர் திரண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக, இவ்வாண்டின் மகளிர் IPL தொடரின், இணையதள பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்பட்டது. எனவே, மக்களுக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளின் மீது ஆர்வம் பெருகியுள்ளது என்றே கூறவேண்டும்.
பார்வையாளர்களின் ஆர்வமும், எண்ணிக்கையும் அதிர்க்கரித்தால், மகளிர் கிரிக்கெட்டின் போட்டிகளும் அதிகரிக்கும். அதன் ஏற்பாடு தான், 2022ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சர்வதேச மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர். நேற்று, வெளிவந்த செய்தியாதெனில், மகளிர் கிரிக்கெட்டை நாங்கள் 2022ம் ஆண்டின் Commonwealth போட்டிகளில் இணைக்கவுள்ளோம். இரண்டாவது முறையாக, கிரிக்கெட் எனும் விளையாட்டு, Commonwealth ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளது. மகளிர் கிரிக்கெட்டுக்கு இதுவே முதல் முறை. ஆதலால், 2022ம் ஆண்டில், மகளிருக்கென ஓர் 20 ஓவர் உலகக்கோப்பை, Commonwealth தொடர் மற்றும் 50 ஓவர் சர்வதேச உலகக்கோப்பை.
இவ்வாறு அமைந்த ஏற்பாடுகள், மகளிர் கிரிக்கெட்டுக்கும் ICCக்கும் பணிச்சுமையை அதிகரிக்கும். குறுகிய காலகட்டத்தில், 2 ICC தொடர்களை நடத்துதற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. உடல்சுமை மற்றுமில்லாமல் மனச்சுமையும் ஏற்பட்டுவிடும். இதனை, கருத்திற்கொண்டு இம்முடிவை தேர்வு செய்துள்ளார்கள்.
ஆயினும், மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டாகும். கிரிக்கெட்டின் அடுத்தகட்டத்தை நோக்கி ஓர் பயணம். ICCயின் தொடர்களைக் கடந்து, இனி வரும் காலங்களில், மகளிர் கிரிக்கெட்டுக்காக பல போட்டிகளை ஒதுக்கவேண்டும். அதற்கு, தகுதியுள்ள sponsor களமிறங்க வேண்டும். Sponsor இல்லாததால், ஏற்படும் இன்னல்களைப்பற்றி, இந்திய சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையான, செல்வி ஸ்மிர்தி மந்தனா அவர்கள், ஓர் நேர்காணலில் தெரிவித்துள்ளார்கள்.
முக்கியத்துவமும், ஆதரவும் கடந்து பணிக்கேற்ற சம்பளமும் வழங்கப்பட வேண்டும். அதற்கு, இவ்வாறு உள்ள sponsorகள் களமிறங்கவேண்டும். சமீபத்தில், இந்திய அணியை சேர்ந்த மகன், மகளிர் மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்காக MPL நிறுவனம் sponsorship ஒப்பந்தமிட்டுள்ளது. இந்த sponsorship, 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமிட்டுள்ளது. இது மட்டும் நன்றாக நடைபெற்றால், மகளிர் கிரிக்கெட்டுக்கென உள்ள மவுசும், தேவையும் அதிகரிக்கும்.
Comments
Post a Comment