MPL - இந்திய அணியின் புதிய Sports Merchandise Sponsor
இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியின் புதிய Kit Sponsorராக, MPL நிறுவனம் நியமிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் நிறைவடைந்த IPL தொடரின் title sponsor உரிமத்தை Dream 11 எனும் online கிரிக்கெட் prediction app, கைப்பற்றியது. Startup நிறுவனமாக துவங்கப்படுவோரின் வளர்ச்சி இதோடு நிற்கவில்லை. Esports என்றழைக்கப்படும் online விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும், startup நிறுவனமான MPL, இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியின் Kit Sponsor உரிமத்தை கைப்பற்றியது மேலும் மகிழ்ச்சியை வரவழைக்கிறது. அதன் முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
இந்திய அணியின் Kit Sponsorகளாக திகழ்ந்த நிறுவனங்கள் யாவை என தேடினால் பலவற்றின் பெயர் வெளிவரும். Sahara, Star, Ceat, Oppo போன்று பல நிறுவனங்கள் sponsorராக பணிபுரிந்துள்ளது. ஆனால், இவையனைத்திற்கும் ஏதேனும் ஓர் பின்புலம் இருந்திருக்கும். ஆனால், எவ்வித பின்புலமுமின்றி படிப்படியாக மேலே வந்தது, MPL மற்றும் Dream11னின் சாதனையாகும். தங்களின் திட்டத்தை மட்டுமே நம்பி முதலீடு செய்து, வெற்றியடைந்த இந்நிறுவனங்கள், வளர்ந்து வரும் வணிகர்களுக்கு ஓர் முன் உதார்ணம்.
இந்த உரிமம், அடுத்து வரவுள்ள இந்திய - ஆஸ்திரேலியா தொடரிலிருந்து, 2023ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடர் முடிவடையும் வரை அமலில் இருக்கும். இந்நிறுவனம் தான், சர்வதேச ஆண்களுக்கான கிரிக்கெட் அணி, சர்வதேச மகளிர் கிரிக்கெட் அணி, மற்றும் 19 வயதிற்கும் கீழ் உள்ள சர்வதேச கிரிக்கெட் அணிக்கு, விளையாட்டு பொருட்களை வழங்கும். விளையாட்டு பொருட்கள் மட்டுமில்லாமல் Jerseyகளையும் வழங்கும், எனவே ஒப்பந்தமிட்டுள்ளது.
இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியின் Presidentடான சௌரவ் கங்குலி அவர்களும், BCCIயின் Honorary Secretaryயான ஜெய் ஷா அவர்களும், மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். " இளம் நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்க நாங்கள் கடமை பட்டுளோம். புதிய கிரிக்கெட் காலகட்டத்தை, புதிய நிறுவனத்துடன் அழகாக துவங்கவுள்ளோம்" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்கள்.
Comments
Post a Comment