பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்மிர்தி மந்தனா
பொதுவாக, இந்திய நாட்டை சேர்ந்த பல சாரார்கள், கிரிக்கெட்டின் ரசிகர்களாய் இருப்பர். தங்களின் அணி வெற்றிபெறுகிறதோ, தோல்வியடைகிறதோ, அதை பற்றி சிறிதும் கவலைக்கொள்ளாமல், தங்கள் அணியை விட்டுக்கொடுக்காது பேசுவர். கிரிக்கெட் வீரர்களை மிகவும் போற்றுவர், கொண்டாடுவர். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கென ஓர் ரசிகர் கூட்டம். வலைத்தளங்களில் ஆரோக்யமான முறையில் பல முரண்பாடுகள், பல வாக்குவாதங்கள் நடைபெறும். ஆனால், இவையனைத்தும் ஆண்கள் விளையாடும் கிரிக்கெட்டை மட்டுமே சாரும்.
பெண்களை பொறுத்த வரை, தங்களின் குடும்பத்திற்காகவும், தங்களுடைய தகப்பன், கணவன், மகன் போன்றோருக்கென பணிபுரியும் இயந்திரங்களாக, பெரும்பான்மையான மக்கள் கருதுகின்றனர். சிலர், அவ்வாறு உள்ள நம்பிக்கைகளிலிருந்து வெளிவந்தாலும், இப்போதும் நிறைய இடங்களில், இவ்வழுக்காறுகள் திகழ்ந்துக்கொண்டு இருக்கின்றது. அதையும் மீறி, ஓர் பெண், கிரிக்கெட் எனும் துறையில், தனது கால் தடத்தை பதித்தால், யாரும் கண்டுக்கொள்வது இல்லை. சமீபத்தில், அனைவரும், பெண்களின் ஆட்டத்தை ரசித்தாலும், 4 வருடங்களுக்கு முன் கிடைத்த வரவேற்பும் இப்போது உள்ள வரவேற்பும் வேறு. எனக்கு தனிப்பட்ட முறையில், பெண்ணியம் எனும் கோட்பாட்டில் நம்பிக்கை கிடையாது. ஆனால், இவையெல்லாம் முற்றிலும் உண்மை.
இவ்வாறு உள்ள நிலையில், ஓர் பெண் வீராங்கனைக்கென ஓர் ரசிகர் கூட்டம் உருவானால் எவ்வாறு இருக்கும் ?. ஸ்மிர்தி மந்தனா'வின் கிரிக்கெட் பயணம், இக்கேள்வியிற்கு பதிலளிக்கும்.
ஜூலை 18ம் நாள் அன்று, மும்பை நகரில், ஸ்ரீனிவாஸ் மந்தனா - ஸ்மிதா மந்தனா என்கிற தம்பதியோருக்கு மகளாய் பிறக்கின்றார். தங்களின் குடும்பம், முற்றிலும் விளையாட்டு துறையும் சார்ந்ததாய் இருக்கின்றது. ஸ்மிர்தி மந்தனா'வின் தந்தை, தனது இளம் காலகட்டங்களில், மும்பை அணியில், விளையாடியுள்ளார். தனது அண்ணன், 15 - 16 வயது காலகட்டங்களில், தனது தந்தையைப் போன்று, மும்பை அணியில் விளையாடியுள்ளார். இப்போது, ஸ்ரீனிவாஸ் மந்தனா ஓர் நிறுவனத்திற்கு வேதியியலாளராய் பணிபுரிகின்றார்.
ஸ்மிர்தி மந்தனா'விற்கு தனது சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது அளவுகடந்த ஆசையும் ஆர்வமும் ஏற்படுகின்றது. தனது அண்ணனின் ஆட்டத்தைக் கண்டு, தனக்கு ஆசை ஏற்படுகின்றது. தனது 9 வயது காலகட்டங்களிலேயே, 15 வயதுக்கு கீழ் இடம்பெறவுள்ள அணியில் இடம்பெறுகின்றார். தனது 11 வயது காலகட்டத்தில், 19 வயதுக்கும் கீழ் இடம்பெறவுள்ள அணியில், இடம்பெறுகின்றார். தனது, உள்நாட்டு கிரிக்கெட் பயணத்தில், 2013ம் ஆண்டில், குஜராத் அணியிற்கு எதிரே, இரட்டை சதம் அடிக்கின்றார். அந்த ஒரு நாள் போட்டியில் தான் அடித்த இரட்டை சதம், அன்று கிரிக்கெட்டில் உள்ள பல வீரர்களின் மத்தியில், இதுவே பேசும்படியாய் அமைந்தது. அவ்வாண்டிலேயே, சர்வதேச இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெறுகின்றார். இன்றும், தனது குடும்பம், தனக்கு மிகுந்த ஆதரவு அளிக்கின்றது. இன்றும், தனது அண்ணன், தனக்கு பந்துவீச, தான் அதை எதிர்கொண்டு விளையாடுகின்றார்.
தொடக்கத்தில், தன்னால் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த இயலாமல், வாய்ப்புகளை கைவிட, அனைவரும் இப்பெண்ணை அணியை விட்டு விளக்குமாறு குரல் எழுப்பினர். அப்போது, இவளுக்குள் ஓர் உத்வேகம் பிறக்கின்றது. தனது ஆட்டத்தை தொடங்கினால். அரை சதங்களை குவிக்க ஆரம்பித்தால். 2016ம் ஆண்டு மகளிர் சேலஞ்சர் கோப்பையில், தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களை குவிக்கிறாள்.
2016ம் ஆண்டில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரே விளையாடிய வெளிநாட்டு தொடரில், தனது முதல் ஒரு நாள் கிரிக்கெட்டின் சதத்தை பதிவு செய்தார். 109 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார். தனது சிறப்பான ஆட்டங்களினால், 2016ம் ஆண்டில், ஐசிசி'யின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் அணியில், ஒரே இந்திய மகளிராக, இவளின் பெயர் மட்டும் இடம்பெறுகின்றது.

அங்கிருந்து சிறிதும் நின்றுக்கொள்ளவில்லை. 2019ம் ஆண்டில், ஐசிசி அவர்கள், அவ்வாண்டை சேர்ந்த சிறந்த வீராங்கனை என்கிற விருதை அவளுக்கு வழங்குகின்றனர்.
20 ஓவர் கிரிக்கெட்டில் வெகு விரைவாக அரை சதம் அடித்ததும் இவரே. 24 பந்துகளில், இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2019ம் ஆண்டில், இங்கிலாந்து அணிக்கு எதிரே விளையாடப்பட்ட தொடரில், தன்னை அணியின் தலைவராக நியமிக்கப்படுகின்றார். மிகவும், சிறு வயது காலகட்டத்தில், அணியின் தலைவர் பொறுப்பை கைப்பற்றிய வீராங்கனையாக இவள் திகழ்கின்றார்.
இடது காய் வீராங்கனையாக திகழும் இவள், தனது கவர் டிரைவுகளுக்கும், ஸ்வீப் ஷாட்டுகளுக்கும் பெயர் வாங்கியவள். 51, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற்ற இவள், 2025 ரன்களை குவித்து, அதில் 17 அரை சதங்கள் மற்றும் 4 சதங்கள் அடித்துள்ளார். தனக்கென ஓர் ரசிகர் பட்டாளம், இந்திய நாட்டின் மத்தியில் உருவாகியுள்ளது. தனது விடா முயற்சியும், தன் குடும்பம் தனக்கு அளித்த உறுதுணையுமே, இதை சாத்தியமாகியது. ஒரு பெண், தனது கனவினை நிறைவுப்படுத்த வேண்டுமானால், அவளின் குடும்பம், அவளுக்கு உறுதுணையாய் அமையவேண்டும். ஸ்மிர்தி மந்தனா'வின் வாழ்வில் அது நடந்தது. அவள் இப்போது ஜெயித்துக்கொண்டு இருக்கின்றாள்.
ஆனால், இது முடிவம் அல்ல. இதனோடு இப்பயணம் நிற்கப்போவதும் அல்ல. கிரிக்கெட் துறையில், இதற்கும் மேல் பல சாதனைகளை நிச்சயம் மேற்கொள்வாள். அடிகள் ஏற்பட்டாலும், அதனை கடந்து மிக சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்துவாள் !!
Comments
Post a Comment