SL vs ENG - முதல் Test, ஐந்தாம் நாள் Review

இந்த match'ஓட கடைசி நாளுக்கு நாம வந்தோம்னா, பெருசா ஒன்னும் நடக்கல. எல்லாமே எதிர்பார்த்த மாதிரி, 74 runs'அ இங்கிலாந்து ரொம்பவே ஈஸியா chase பண்ணிட்டாங்க. நேத்து, evening இருந்த அந்த ஒரு spark, இன்னிக்கி காலைல இல்ல.அதுக்கு காரணம், scoreboardல board மட்டும் தான் இருந்துச்சு, scoreருன்னு ஒன்னு இல்ல. இதை வெச்சுட்டு என்ன பண்ணமுடியும். ஆனா, இந்த match'அ ஏன் Sri Lanka விட்டாங்கன்னு இந்த blogல நாம பார்க்கலாம்.

இந்த Galle pitch'அ பொறுத்த வரைக்கும், spinக்கு நல்ல assistance கொடுத்துச்சு. அப்படிப்பட்ட ஒரு pitchல, Sub Continent team'ஆன Sri Lanka, toss win பண்ணி முதல்ல batting எடுக்குறாங்க. பேருக்கு தான் Sub Continent nation, ஆனா அனுபவம் இல்லாததுனாலயும், சரியான technique இல்லாத காரணத்துனாலயும், உள்ள வந்த வேகத்துலயே திரும்ப pavilionனுக்கு போய்ட்டு இருந்தாங்க.

Teamமோட senior cricketerகளான Angelo Mathews மற்றும் Dinesh Chandimal, ரெண்டு பெரும் சேர்ந்து ஓரளவுக்கு resistance குடுத்தாலும், அது போதுமானதா அமையவில்லை. எல்லா பக்கத்துல இருந்தும் contribution வந்தா மட்டும் தான், fight பண்ண முடியும். இந்த inexperience மொத்தமா காவு வாங்கிடுச்சு. இதுல Poor Shot Selection வேற. 

Dom Bess 5 wicket haul எடுக்குறாரு, ஆனா அவரை தாண்டி Stuart Broad தான் paceக்கு supportடே இல்லாத ஒரு pitchல, angle create பண்ணி wickets எடுத்துட்டு இருந்தாரு. Sri Lanka தோத்ததுக்கு முதல் காரணம், இது தான். ரெண்டாவது காரணம், இங்கிலாந்து batting பண்ணும்போது, Sri Lankaவுக்கு நல்ல turn கெடச்சுது. இருந்தும் Embuldeniyaவ தவிர வேற யாருக்கும் ஒழுங்கான line and length அமையவே இல்ல.

அதே நேரத்துல Joe Root, ரொம்பவே அழகா விளையாடிட்டு இருந்தாரு. ஏகப்பட்ட sweep shots, அவருகிட்ட இருந்து பார்க்கமுடிஞ்சுது. 3வது நாள்ல என்னதான் Dilruwan Perara நெனச்சபடி bowl பண்ணாலும், அதுக்குள்ள இங்கிலாந்து ஒரு நல்ல lead reach பண்ணிட்டாங்க. So, இந்த இடம் தான் ரெண்டாவது காரணம்.

Sri Lankaவோட 2nd innings'அ நான் கோரை சொல்ல மாட்டேன். அதுக்கு ஒரு முக்கிய காரணம், அவங்க இருந்த நிலைமையில இருந்து, 75 runs lead எடுத்துலாம் Sri Lankaவோட ரசிகனே நெனச்சு பாத்திருக்க மாட்டான். அப்படிப்பட்ட ஒரு performance. ஆனா, Jake Leach'அ நான் பாராட்டுவேன்.

கடைசி ரெண்டு வருஷத்துல வெறும் 2 first class games தான் விளையாடியிருக்காரு. Crohn's disease வந்து, கிட்டத்தட்ட இனிமே நம்மளால cricketடே விளையாட முடியாதோங்கிற நிலைமைக்கு போயி, அதுக்கு அப்புறம் குணமாகி, உள்ள வர்றாரு. வந்த உடனே, செமையா drift பண்ணி, Sri Lankan batsmanகள கதற விட்டு 5 wickets claim பண்ணுறாரு. 

Simpleலா சொல்லனும்னா Sri Lanka தோத்ததுக்கு ரொம்பவே ஒரு முக்கியமான காரணம், teamல co-ordination இல்லாதது தான். இப்போ, Australiaல விளையாடுற Indian teamலயும், அனுபவமே இல்லாத கத்துக்குட்டிங்க தான் இருக்காங்க. இருந்தும், இந்தியா'வால எப்படி அசத்த முடியுது. 

அது தான் team co-ordination. அந்த ஒரு co-ordinationனும், understandingகும் இல்லாதது தான் இங்க கோட்ட விட்டுச்சு. Captain நெனைக்குறதும், players செய்யுறதும் ஒண்ணா இருக்கணும். இங்க, அந்த ஒரு balanceஏ இல்லாம போச்சு. எப்போ அந்த ஒரு rhythm'அ கண்டு பிடிக்குறாங்களோ, அப்போ தான் இவங்க மீண்டு வருவாங்க. 

இல்லைன்னா, அந்த காலத்துல நாங்க எப்படி இருந்தோம் தெரியுமான்னு சொல்லி, பழைய புராணத்தை பாடிகிட்டு இருக்க வேண்டியது தான். 

 

  

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood